அமீரக செய்திகள்

அமீரகத்தில் அடிக்கடி பெண்ணுக்கு கால் செய்து நச்சரித்த நபருக்கு 5,000 திர்ஹம் அபராதம் விதித்த நீதிமன்றம்..!!

அபுதாபியில் பெண் ஒருவருக்கு அடிக்கடி மொபைல் அழைப்புகள் விடுத்து தொந்தரவு செய்ததன் விளைவாக ஏற்பட்ட தார்மீக சேதங்களுக்கு இழப்பீடாக 5,000 திர்ஹம் வழங்க வேண்டும் என்று குடும்பம், சிவில் மற்றும் நிர்வாக வழக்குகளுக்கான அபுதாபி நீதிமன்றம் தொந்தரவு செய்த ஆணுக்கு எதிராக தீர்ப்பளித்தது.

அபுதாபியில் வசிக்கும் பெண் ஒருவர், பலமுறை அழைப்புகள் விடுத்து தனக்கு பொருள் மற்றும் தார்மீக சேதங்களை ஏற்படுத்தியதால், அந்த ஆண் தனக்கு 50,000 திர்ஹம் இழப்பீடாக வழங்க வேண்டும் என்று அபுதாபி நீதிமன்றத்தில் முறையிட்டுள்ளார்.

பெண் தொடர்ந்த இந்த வழக்கானது ஒரு கிரிமினல் வழக்காக மாற்றப்பட்டு, அந்த பெண்ணிற்கு கால் செய்து அடிக்கடி தொந்தரவு செய்த குற்றவாளியான அந்த ஆண் 3,000 திர்ஹம்ஸ் அபராதம் செலுத்த வேண்டும் என்று நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

மேலும் நீதிமன்ற விசாரணையில், குற்றவாளியின் நடவடிக்கையால் பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு பொருள் சேதம் ஏற்பட்டதும் தெரிய வந்துள்ளது. மேலும், அந்தப் பெண் காவல்துறை மற்றும் போக்குவரத்துத் துறையில் ஒரு குற்றப் புகாரைத் திறந்து, தண்டனை வழக்குகளை இறுதி வரை தொடர்ந்து வந்ததையும் தெரிவித்துள்ளார்.

இதனையடுத்து, பொருள் மற்றும் தார்மீக சேதங்களுக்கு இழப்பீடாக மொத்தம் 5,000 திர்ஹம் தொகையை அப்பெண்ணுக்கு குற்றம் சாட்டப்பட்டவர் வழங்கவும், அந்த பெண் செலவழித்த கட்டணம் மற்றும் செலவுகளை குற்றவாளியே செலுத்துமாறும் நீதிமன்றம் தீர்ப்பு வழங்கி உத்தரவிட்டுள்ளது.

Related Articles

Back to top button
error: Content is protected !!