அமீரக செய்திகள்

துபாய்: பிக்கப் மற்றும் டிரக் பயங்கரமாக மோதி விபத்து!! சம்பவ இடத்திலேயே இருவர் பரிதாபமாக உயிரிழப்பு!! இருவர் படுகாயம்…

துபாயின் பிரதான சாலையான ஷேக் முகமது பின் சையத் சாலையில் இன்று, வெள்ளிக்கிழமை (ஆகஸ்ட் 11) காலை நடந்த பயங்கர போக்குவரத்து விபத்தில் இருவர் படுகாயமடைந்துள்ள நிலையில், இருவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்து விட்டதாக துபாய் காவல்துறை அறிவித்துள்ளது.

இச்சம்பவம் குறித்து போக்குவரத்து பொதுத் துறையின் செயல் இயக்குநரான பிரிக் ஜுமா சலீம் பின் சுவைடன் என்பவர் கூறுகையில், பிக்கப் மற்றும் டிரக் ஆகியவற்றுக்கு இடையே பாதுகாப்பான தூரம் கடைபிடிக்கப்படாததால், அதிபயங்கர விபத்து ஏற்பட்டுள்ளதாகக் குறிப்பிட்டுள்ளார்.

விபத்து பற்றி தெரிவிக்கையில், இன்று அதிகாலை 5 மணியளவில், அபுதாபி நோக்கிச் செல்லும் நெடுஞ்சாலையில் விபத்து ஏற்பட்டது குறித்த புகாரைப் பெற்றதாக அவர் கூறியுள்ளார்.

இதனையடுத்து, உடனடியாக முதலுதவி மற்றும் அவசர மருத்துவ சேவையை வழங்க அவசர குழுக்கள், முதல் பதிலளிப்பவர்கள் மற்றும் போக்குவரத்து போலீஸ் ரோந்துகள் ஆகியவை சம்பவம் நடந்த இடத்திற்கு விரைந்ததாக அவர் தெரிவிந்துள்ளார்.

இந்த விபத்து தொடர்பாக கிடைத்துள்ள தகவல்களின் படி, சாலையில் முன் செல்லும் வாகனங்களில் இருந்து பாதுகாப்பான தூரத்தை பிக்கப் டிரைவர் பராமரிக்கத் தவறியதால் விபத்து நடந்துள்ளது என்றும், மேலும் டிரக்குடன் பின்புறமாக மோதியதில் இரண்டு நபர்கள் உயிரிழந்துள்ளனர் மற்றும் இருவர் கடுமையான காயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.

ஏற்கனவே, துபாய் காவல்துறை வேக வரம்புகளை கடைபிடிக்கவும், வாகனங்களுக்கு இடையே பாதுகாப்பான தூரத்தை பராமரிக்கவும் வாகன ஓட்டிகளை பலமுறை தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றது.

அதேபோல், தற்போது ஏற்பட்டுள்ள இந்த சம்பவத்தையடுத்து மீண்டும் அதிகாரிகள் சாலைகளில் தாறுமாறாக ஓவர்டேக்கிங் செய்தல், திடீர் திசைதிருப்பல் மற்றும் கவனத்தை சிதறடித்து வாகனம் ஓட்டுதல் ஆகியவற்றுக்கு எதிராக போக்குவரத்து விதிகள் மற்றும் விதிமுறைகளை தொடர்ந்து கடைப்பிடிக்க வேண்டியதன் அவசியத்தை வாகன ஒட்டிகளுக்கு வலியுறுத்தியுள்ளனர்.

Related Articles

Back to top button
error: Content is protected !!