அமீரக செய்திகள்

UAE: பயணத்தடை உள்ளவர்கள் ரத்து செய்ய இனி அலைய வேண்டியதில்லை..!! அபராதத்தை செலுத்த புதிய ஆன்லைன் டிஜிட்டல் ஸ்மார்ட் சேவை அறிமுகம்..!!

துபாய் பப்ளிக் பிராசிக்யூஷன் “Smart Fine Payment” சேவையை அறிமுகப்படுத்தியுள்ளது. இது கிரிமினல் வழக்கில் தண்டனை பெற்ற குற்றவாளிகள் மற்றும் அபராதம் விதிக்கப்பட்ட தரப்பினர் எளிதாக அவர்களின் அபராதத்தை ஆன்லைனில் செலுத்தவும், நீதிமன்றத்தின் தீர்ப்புக்குப் பிறகு அவர்களின் பயணத் தடையை தானாகவே நீக்கவும் உதவுகிறது.

இந்த டிஜிட்டல் சேவையானது, குற்றவாளிகள் ஆஜராகாத நிலையில் தீர்ப்புகளைச் செயல்படுத்துவதற்கான நடைமுறைகளை விரைவுபடுத்தும் மற்றும் செயல்படுத்தும் விகிதத்தை அதிகரிக்கும் என்று கூறப்படுகிறது.

இந்த ஸ்மார்ட் சர்வீஸ் குறித்து மூலோபாய திட்டமிடல் மற்றும் நிறுவன சிறப்புகளின் (Strategic Planning and Institutional Excellence) இயக்குனர் ஷம்சா சலேம் அல் மரி என்பவர் கூறுகையில், அரசு சேவைகளை மேம்படுத்தும் ‘Services 360’ கொள்கைகளுக்கு ஏற்ப, ஸ்மார்ட் ஃபைன் பேமென்ட் ஆனது, பிராசிக்யூஷன் சர்வீஸ் தொகுப்பில் சேர்க்கப்பட்ட ஒரு செயல்திறன் மிக்க டிஜிட்டல் சேவையாகும் என்று குறிப்பிட்டுள்ளார்.

இந்த கொள்கையானது, அரசாங்கத்தின் வழிகாட்டுதல்கள் மற்றும் தொழில்நுட்பத் தலைமையை அடைவதற்கான அதன் இடைவிடாத நாட்டம் ஆகியவற்றிற்கு இணங்க, புதிய சேனல்களைத் திறக்கிறது என்று அவர் தெரிவித்துள்ளார்.

அபராதத்தை செலுத்தும் முறைகள்:

இந்த டிஜிட்டல் சேவையின் பயனர்கள் பின்வரும் மூன்று முறைகளில் ஏதேனும் ஒன்றைத் தேர்ந்தெடுத்து அபராதத் தொகையைச் செலுத்தலாம்.

முதலில் அவர்கள் பப்ளிக் பிராசிகியூஷன் அனுப்பிய மெஸ்சேஜில் கொடுக்கப்பட்டுள்ள லிங்க்கை கிளிக் செய்வதன் மூலம் அபராதத்தை செலுத்தலாம். பயனர் லிங்க்கை கிளிக் செய்ததும், தனது டிஜிட்டல் ஐடியைப் பயன்படுத்தி லாக்-இன் பக்கத்திற்கு செல்லலாம், பின்னர் அவர்கள் மின்னணு முறையில் அபராதத்தை எளிதாக செலுத்தலாம்.

இரண்டாவதாக, இ-பேமன்ட் அல்லது ரொக்கப் பணம் செலுத்துவதற்கான கட்டணச் சாதனங்கள் (payment device) மூலம் அபராதத்தைச் செலுத்தலாம். இந்த சாதனங்கள் அனைத்து மதிப்பிலான நோட்டுகளையும் ஏற்றுக்கொள்கிறது, முழு அபராதத் தொகையும் செலுத்தப்படும் வரை ஒவ்வொரு மதிப்பிலான நோட்டுகளும் ஒரு முயற்சிக்கு ஏற்றுக்கொள்ளப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.

அத்துடன் மூன்றாவது வழியில், பயனர் தங்கள் டிஜிட்டல் ஐடியைப் பயன்படுத்தி பப்ளிக் பிராசிகியூஷனின் இணையதளத்தில் உள்நுழைந்து டிஜிட்டல் முறையில் அபராதத்தைச் செலுத்தலாம்.

பணம் செலுத்திய பிறகு, துபாய் பப்ளிக் ப்ராசிகியூஷனிடமிருந்து பயனருக்கு மெஸ்சேஜ் அனுப்பப்படும், இதில் வெற்றிகரமாக பணம் செலுத்தியதை தெரிவித்து, கைது உத்தரவு மற்றும் பயணத் தடையை உடனடியாக ரத்துசெய்யப்பட்டதை உறுதி செய்யப்பட்டிருக்கும்.

தீர்ப்பு இறுதியானதும், பயணத் தடை நீக்கப்படும், மேலும் தேடுதல் ரத்து செய்யப்பட்டு பயணத் தடை நீக்கம் குறித்து காவல்துறைக்கு அறிவிக்கப்படும் என்பது குறிப்பிடத்தக்கதாகும்.

 

Related Articles

Back to top button
error: Content is protected !!