அமீரக செய்திகள்

துபாய் டிராமில் பயணிக்கிறீர்களா..?? பொதுவான விதிமுறைகளும் அபராதங்கள் குறித்த தகவல்களும் உங்களுக்காக…!!

துபாய் டிராமில் நீங்கள் பயணிக்கிறீர்கள் என்றால், உங்கள் நோல் கார்டை வேலிடேட் செய்வதை உறுதிப்படுத்திக் கொள்வது அவசியமாகும். இல்லையெனில், 200 திர்ஹம் அபராதம் செலுத்த வேண்டியிருக்கும். நீங்கள் துபாய் டிராமைப் பயன்படுத்தும் போது, வழக்கமாக மெட்ரோ நிலையங்களில் இருக்கும் நோல் கார்டு ரீடர்களைக் காண முடியாது. அதற்குப் பதிலாக, ‘tap here’ என்ற பெரிய லேபிளுடன் இருக்கும் ஆரஞ்சு மற்றும் வெள்ளை நிறத்தில் உள்ள நோல் கார்டு வேலிடேட்டர் மெஷினுக்கு சென்று, நீங்கள் செல்லவிருக்கும் டிராம் பயணத்திற்கு கட்டணம் செலுத்த வேண்டும்.

துபாய் டிராமில் நோல் கார்டை சரிபார்ப்பது எப்படி?

நோல் வேலிடேட்டர் மெஷினில் உங்கள் கார்டைத் தட்டவும். திரையில் ‘check-in successful’ என்ற செய்தி வந்தவுடன் கார்டை அகற்றவும். மேலும், உங்கள் பயணத்திற்கான கட்டணத்தையும் நோல் கார்டில் மீதமுள்ள இருப்பையும் திரையில் காணலாம்.

இறுதியாக, உங்கள் பயணத்தை முடித்ததும், டிராம் நிலையத்திலிருந்து வெளியேறும் முன் நோல் வேலிடேட்டர் இயந்திரத்தில் உங்கள் நோல் டிக்கெட் அல்லது கார்டை மீண்டும் ஒருமுறை சரிபார்க்கவும்.

துபாய் டிராமில் விதிமீறல்கள்:

துபாய் டிராமில் பின்வரும் ஐந்து விதிமீறல்களுக்கு 200 திர்ஹம் அபராதம் விதிக்கப்படும்.

  1. கோரிக்கையின் பேரில் நோல் கார்டை வழங்கத் தவறுதல்.
  2. மற்றவர்களுக்காக நியமிக்கப்பட்ட கார்டை பயன்படுத்துதல்.
  3. காலாவதியான நோல் கார்டைப் பயன்படுத்துதல்.
  4. தவறான கார்டைப் பயன்படுத்துதல்.
  5. RTAவின் முன் அனுமதியின்றி நோல் கார்டுகளை விற்பனை செய்தல்.

துபாய் டிராம் நேரங்கள்:

  • திங்கள் முதல் சனிக்கிழமை வரை – ஒவ்வொரு நாளும் காலை 6 மணி முதல் அடுத்த நாள் நள்ளிரவு 1 மணி வரை,.
  • ஞாயிறு – காலை 9 மணி முதல் மறுநாள் 1 மணி வரை.

அதுமட்டுமின்றி, துபாயில் டிராம் இணைப்பு உள்ள பகுதிகளில் வாகனம் ஓட்டும்போது, டிராம் தொடர்பான போக்குவரத்து சிக்னல்களைப் புரிந்துகொண்டு கடைபிடிக்க வேண்டும். இல்லையெனில், நீங்கள் 5,000 திர்ஹம்ஸ் வரை அபராதம் செலுத்த வேண்டியிருக்கும்.

Related Articles

Back to top button
error: Content is protected !!