அமீரக செய்திகள்

NRI சான்றிதழ் என்றால் என்ன? அந்த சான்றிதழ் எதற்காக உபயோகப்படும் – ஒரு தெளிவான பார்வை

NRI சான்றிதழ் என்றால் என்ன, அந்த சான்றிதழ் எதற்காக உபயோகப்படும் என்ற சந்தேகம் உங்களுக்கும் இருக்கா? அப்படியென்றால் உங்களுக்காகத்தான் இந்த பதிவு. நாம் கல்லூரிக்கு சேரும்பொழுது மற்றும் பல முக்கியமான விண்ணப்ப படிவங்களில் குடிமகன் என்று நிரப்ப வேண்டிய இடத்தில் மற்றும் ஒரு தேர்வாக NRI என பொதுவாக கொடுக்கப்பட்டிருக்கும்.

அதாவது நீங்கள் வெளிநாட்டு குடியுரிமை பெற்ற இந்தியராகவோ அல்லது வெளிநாட்டில் குடியிருப்பு விசா பெற்று அந்நாட்டில் வசித்து வந்தாலோ, இந்தியாவில் உயர் படிப்பு அல்லது வேறு ஏதேனும் படிப்பு மேற்கொள்ளும் பொழுது NRI எனப்படும் வகையில் நீங்கள் இந்தியாவில் கல்வி கற்கலாம்.

எடுத்துக்காட்டாக நீங்கள் ஐக்கிய அரபு அமீரகத்தில் வசிக்கும் வெளிநாடு வாழ் இந்தியராக இருந்து (NRI) உங்கள் உயர் கல்விக்காக இந்தியாவில் படிக்கத் திட்டமிட்டிருந்தால், நீங்கள் NRI சான்றிதழுக்கு விண்ணப்பிக்க வேண்டும். கல்வி நோக்கங்களுக்காக இந்திய பாஸ்போர்ட் வைத்திருப்பவர்களுக்கு இந்த சான்றிதழ் வழங்கப்படுகிறது மற்றும் நீங்கள் ‘NRI கோட்டா’ மூலம் விண்ணப்பித்தால், இந்தியாவில் கல்லூரி சேர்க்கைக்கு இது தேவைப்படுகிறது.

என்ஆர்ஐ சான்றிதழ் என்றால் என்ன?

இந்தியப் பல்கலைக்கழகங்களில் அல்லது கல்லூரிகளில் NRI கோட்டாவின் கீழ் நீங்கள் படிக்க நேரிட்டால் NRI சான்றிதழை பெற்றிருக்க வேண்டும். ஐக்கிய அரபு அமீரகத்தில் உள்ள அதிகாரப்பூர்வ அவுட்சோர்சிங் சேவை வழங்குனரான BLS இன்டர்நேஷனல் சர்வீசஸ், இந்திய துணைத் தூதரகத்தின் (CGI) மூலம் NRI சான்றிதழ் கீழ்க்கண்ட விதிகளின் அடிப்படையில் வழங்கப்படுகின்றது:

– ஒரு வருடத்தில் ஆறு மாதங்களுக்கும் மேலாக ஐக்கிய அரபு அமீரகத்திற்கு வெளியே தங்கி இருந்தால் வழங்கப்படும்.
– வேறு நாட்டின் குடியுரிமை பெற்றிருந்தால் வழங்கப்படும்.

ஐக்கிய அரபு அமீரகத்தில் NRI சான்றிதழுக்கு எவ்வாறு விண்ணப்பிப்பது?

படி 1: NRI சான்றிதழுக்கு விண்ணப்பிக்க BLS மையத்திற்குச் சென்று EAP II படிவத்தை இலவசமாகப் பெற்று பூர்த்தி செய்ய வேண்டும்.

படி 2: படிவத்துடன் கீழ்கண்ட ஆவணங்களை இணைக்க வேண்டும்.

• வெள்ளை பின்னணியுடன் கூடிய இரண்டு சமீபத்திய பாஸ்போர்ட் அளவு புகைப்படங்கள்.
• அசல் பாஸ்போர்ட், குறைந்தது ஆறு மாதங்களுக்கு செல்லுபடியாகும் நிலையில் இருக்க வேண்டும்.
• சிறுவர்களுக்கு (18 வயதுக்குட்பட்டவர்கள்) – பெற்றோரின் பாஸ்போர்ட் நகல்கள்.
• ஐக்கிய அரபு அமீரகத்தில் உங்கள் வசிப்பிடத்தை நிரூபிக்க ஏதாவது ஒரு ஐடியை தர வேண்டும் – செல்லுபடியாகும் எமிரேட்ஸ் ஐடி அல்லது UAE ஓட்டுநர் உரிமம்.
• விண்ணப்பதாரர் முந்தைய நிதியாண்டில், அதாவது ஏப்ரல் 1, 2022 முதல் மார்ச் 31, 2023 வரை 182 நாட்களுக்கு மேல் இந்தியாவில் தங்கியிருக்கவில்லை என்பதற்கான சான்று.

விண்ணப்பத்தினை வழங்கும் பொழுது சம்பந்தப்பட்ட நபர் நேரடியாக சென்று வழங்க வேண்டும். நீங்கள் அபுதாபியில் வசிப்பவராக இருந்தால், தூதரக அதிகாரி முன்னிலையில் விண்ணப்பதாரரால் கையொப்பமிடப்பட்ட இந்தியத் தூதரகத்திற்கான சான்றொப்பம் மற்றும் தூதரக சேவைகளை வழங்கும் IVS குளோபல் வழங்கிய உறுதிமொழிப் பத்திரத்திற்கும் விண்ணப்பிக்க வேண்டும்.

செயலாக்க நேரம் (Processing Time)

BLS விதிமுறையின் படி, சான்றிதழ் ஐந்து வேலை நாட்களில் வழங்கப்படும். இருப்பினும், செயலாக்க நேரம் துபாயில் உள்ள இந்திய துணைத் தூதரகத்தின் (CGI) விருப்பத்திற்கு உட்பட்டது என்பதைக் கவனத்தில் கொள்ள வேண்டும். செயல்முறை முடிந்ததும் உங்களுக்கு SMS மூலம் தெரிவிக்கப்படும்.

Related Articles

Back to top button
error: Content is protected !!