அமீரக செய்திகள்

அமீரகத்தின் சில பகுதிகளில் இன்று மழையை எதிர்பார்க்கலாம்..!! NCM தகவல்….!!

ஐக்கிய அரபு அமீரகத்தின் பெரும்பாலான பகுதிகளில் கடந்த சில வாரங்களாக மிதமான முதல் பலத்த மழை பெய்து வருகிறது. அதேசமயம், அமீரகத்தின் சில பகுதிகளில் வெப்பநிலை 50 டிகிரி செல்சியஸைத் தாண்டி பதிவாகிறது.

இந்நிலையில், நாட்டில் இன்று ஓரளவு மேகமூட்டமான வானிலை நிலவும் என்றும், பிற்பகலில் சில பகுதிகளில் மழை பெய்யக் கூடும் என்றும் அமீரகத்தின் தேசிய வானிலை ஆய்வு மையம் (NCM) தெரிவித்துள்ளது.

வானிலை தொடர்பாக NCM வெளியிட்டுள்ள தகவல்களின் படி, கிழக்கு கடற்கரையில் காலை நேரங்களில் குறைந்த அளவிலான மேகங்கள் காணப்பட்டாலும், பிற்பகலில் மழையை உருவாக்கக்கூடிய வெப்பச் சலன மேகங்கள் குவியலாகக் கூடும் என்று குறிப்பிட்டுள்ளது.

அத்துடன் சில கடலோர மற்றும் உள்பகுதிகளில் பனிமூட்டம் உருவாகும் வாய்ப்பு இருப்பதாக வாகன ஓட்டிகளை NCM எச்சரித்துள்ளது. அரேபிய வளைகுடா மற்றும் ஓமன் கடலில் அலைகளின் சீற்றம் லேசானது முதல் மிதமானது வரை இருக்கும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதேசமயம், இன்றிரவு (ஆகஸ்ட் 31) காற்றின் ஈரப்பதம் அதிகரிக்கக்கூடும் என்றும், இது மறுநாள் (செப்டம்பர் 1) காலை வரை நீடிக்கலாம் என்றும் கூறப்படுகிறது. எனவே, முந்தைய நாட்களை விட இன்று வெப்பநிலை குறைவாக இருக்கலாம் எதிர்பார்க்கப்படுகிறது.

இதற்கிடையில், அபுதாபி மற்றும் துபாயில் அதிகபட்ச வெப்பநிலையாக 45 டிகிரி செல்சியஸ் மற்றும் 43 டிகிரி செல்சியஸ் பதிவாகும் என்று மையம் தெரிவித்துள்ளதும் குறிப்பிடத்தக்கது.

Related Articles

Back to top button
error: Content is protected !!