ADVERTISEMENT

பயணிகளுக்கு குட்நியூஸ்: விமானம் தாமதமானாலோ, ரத்து செய்யப்பட்டாலோ டிக்கெட் மதிப்பில் 200% வரை இழப்பீடு..!! புதிய விதிகளை அறிவித்துள்ள சவூதி..!!

Published: 24 Aug 2023, 5:55 PM |
Updated: 24 Aug 2023, 6:08 PM |
Posted By: admin

சவுதி அரேபியாவின் சிவில் விமானப்போக்குவரத்து பொது ஆணையம் (GACA), பயணிகளின் உரிமைகளை பாதுகாக்கும் நோக்கத்துடன் தற்பொழுது அமலில் இருக்கும் பழைய விதிமுறைகளுக்கு பதிலாக விமானம் அல்லது ஏர்போர்ட்டினால் பாதிப்படையும் பயணிகளுக்கு புதிய நிர்வாக ஒழுங்கு முறைகள் பின்பற்றப்படும் என தெரிவித்துள்ளது. மேலும் இந்த நடைமுறையானது நவம்பர் 20, 2023 தேதி முதல் அமலுக்கு வரும் எனவும் கூறப்பட்டுள்ளது.

ADVERTISEMENT

இந்த ஒழுங்கு முறைகளின் கீழ் வகுக்கப்பட்ட 30 கட்டுரைகளின் கீழ், பயணிகள் செலுத்தும் விமான கட்டணத்திற்கு இழப்பு ஏற்படாமல் நன்மை அளிக்கும் வகையில் பல்வேறு திட்டங்கள் வகுக்கப்பட்டுள்ளன.

புதிய ஒழுங்கு முறைகளின் படி, கொடுக்கப்பட்டுள்ள கால அட்டவணைக்கு முன்னதாக விமானம் புறப்பட்டாலோ அல்லது புறப்படுவதில் தாமதம் ஏற்பட்டாலோ அல்லது விமானங்கள் ரத்து செய்யப்பட்டாலோ, அதிக முன்பதிவு காரணமாக விமானத்தில் ஏற்ற மறுத்தாலோ பயணிகளுக்கு இழப்பீடு வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் இந்த இழப்பீடானது டிக்கெட் மதிப்பில் 150 சதவீதம் முதல் 200 சதவீதம் வரை இருக்கும் என புதிய விதிமுறையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

ADVERTISEMENT

அதே போன்று பயணிகள் தங்களின் லக்கேஜ்களை இழந்தாலோ அல்லது சாமான்கள் சேதம், குறைபாடு அல்லது தாமதம் ஏற்பட்டாலோ, பயணிகளுக்கு 6568 ரியாலுக்கு மிகாமல் நிதி இழப்பீடு வழங்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதே போன்று டிக்கெட் முன்பதிவை உறுதிப்படுத்தும் போது அறிவிக்கப்படாத நிறுத்தங்களை விமான நிறுவனம் சேர்த்தாலும் பயணிகளுக்கு இழப்பீடு வழங்க இந்த விதிமுறை உத்தரவாதம் அளிக்கிறது.  எனவே புதிதாக ஒதுக்கப்பட்ட விமான நெறிமுறைகளானது, பயணிகள் மற்றும் விமான நிறுவனம் ஆகிய இருவரின் கடமைகளையும் தெளிவுபடுத்தியதோடு அல்லாமல் இந்த உரிமைகளானது ஹஜ் மற்றும் உம்ரா சீசன்களின் பொழுது பயணிக்கும் சார்ட்டர் விமானங்களுக்கும் பொருந்தும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

ADVERTISEMENT

மேலும், இந்த புதிய விதிமுறைகளானது விமானப் போக்குவரத்து சேவைகளை மேம்படுத்துதல், அதன் செயல்திறனை மேம்படுத்துதல் மற்றும் சவூதி அரேபியாவிற்கும் வரும் பயணிகளின் அனுபவத்தை மேம்படுத்துவதற்கும், பாதுகாப்பான மற்றும் வசதியான பயணத்தை அடைவதற்கான பயணிகளின் உரிமைகளைப் பாதுகாப்பதையும் நோக்கமாகக் கொண்டுள்ளது. மேலும், விமான சேவையின் தரத்தை மேம்படுத்துவதன் மூலம் 2030 ஆம் ஆண்டுக்குள் கூடுதலாக 250 இடங்களுக்கு விமான சேவைகளை வழங்குவதை சவுதி அரேபியா அரசு நோக்கமாகக் கொண்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

.