அமீரக செய்திகள்

UAE: கொளுத்தும் வெயிலில் பணிபுரியும் தொழிலாளர்களை ‘கூல்’ செய்ய ஐஸ்கிரீம், குடை, உணவுப் பொட்டலங்களை வழங்கிய முனிசிபல் அதிகாரிகள்…

ஐக்கிய அரபு அமீரகம் கொளுத்தும் கோடை வெயிலில் பணிபுரியும் கட்டுமானத் தொழிலாளிகளுக்கு இந்த வெயிலின் தாக்கத்தை அவர்களுக்கு சற்றே தணிக்கும் விதமாக அதிகாரிகள் அவர்களுக்கு ஐஸ்கிரீம் மற்றும் குடைகளை விநியோகித்துள்ளனர்.

அபுதாபியில் உள்ள மதீனத் சையத் (Madinat Zayed) மற்றும் அல் வத்பா (Al Wathba) ஆகிய இரண்டு முனிசிபல் சென்டர்களும் ‘எங்கள் தொழிலாளர்கள் எங்கள் பொறுப்பு’ (Our Workers are Our Responsibility) என்ற முன்முயற்சியின் கீழ், சுட்டெரிக்கும் வெயிலில் பணிபுரிபவர்களுக்கு தண்ணீர், பழச்சாறுகள், ஐஸ்கிரீம் மற்றும் குடைகள் போன்றவற்றை வழங்கியுள்ளன.

மேலும், எமிரேட்டின் பல இடங்களில் அதிகாரிகள் தொழிலாளர்களுக்கு தண்ணீர், உணவுப் பொட்டலங்கள் அடங்கிய பாக்ஸ்களை விநியோகிப்பதை இன்ஸ்டாக்ராமில் வெளியிடப்பட்டுள்ள வீடியோவில் காணலாம்.

ஏற்கனவே, அமீரகத்தில் உள்ள டெலிவரி டிரைவர்களுக்கு வெயிலில் இருந்து ஓய்வெடுக்க அத்தியாவசிய சேவைகளுடன் கூடிய 356 ஓய்வு நிலையங்களை வழங்குவதற்கான முயற்சியை மனித வளங்கள் மற்றும் எமிரேடிசேஷன் அமைச்சகம் (MOHRE) அறிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

அதுமட்டுமின்றி, கோடை மாதங்களில், குறிப்பாக ஜூன் 15 முதல் செப்டம்பர் 15 வரை மதியம் 12.30 முதல் 3 மணி வரை நண்பகல் வேளையில், நேரடி சூரிய ஒளியின் கீழ் மற்றும் திறந்த பகுதிகளில் வேலை செய்ய அமீரக அரசாங்கம் தடை விதித்துள்ளது.

இவ்வாறு அரசாங்கம் தொடர்ச்சியாக மேற்கொள்ளும் நடவடிக்கைகள், வெளிப்புறத்தில் வேலை செய்யும் தொழிலாளர்கள் மற்றும் டெலிவரி ரைடர்களின் பாதுகாப்பு மற்றும் நல்வாழ்வுக்கான அரசாங்கத்தின் பகிரப்பட்ட அர்ப்பணிப்பை பிரதிபலிக்கிறது.

Related Articles

Back to top button
error: Content is protected !!