ADVERTISEMENT

அமீரகத்தில் அடுத்த மாதம் மூன்று நாள் பொது விடுமுறை அறிவிப்பு.. அடுத்து வரும் மேலும் ஒரு நீண்ட விடுமுறை..!!

Published: 6 Aug 2023, 9:38 AM |
Updated: 6 Aug 2023, 7:47 PM |
Posted By: Menaka

ஐக்கிய அரபு அமீரகத்தில் குடியிருப்பாளர்களும் ஊழியர்களும் ஹிஜ்ரி புத்தாண்டு விடுமுறைக்குப் பிறகு, 2023 இன் இரண்டாம் பாதியில் வரவிருக்கும் பொது விடுமுறையை அடுத்து மாதம் அனுபவிக்கலாம், ஆம், வரவிருக்கும் செப்டம்பர் மாதம் 29ஆம் தேதி நபிகள் நாயகம் அவர்களின் பிறந்தநாளை முன்னிட்டு அமீரகத்தில் மூன்று நாள் வார இறுதி விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

ADVERTISEMENT

இந்த விடுமுறையானது வெள்ளிக்கிழமை அன்று வருகிறது. எனவே, அரசு மற்றும் தனியார் துறையில் பணிபுரியும் ஊழியர்கள் மற்றும் குடியிருப்பாளர்கள் சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமையை இணைத்து மூன்று நாட்கள் தொடர் விடுமுறையை அனுபவிக்கலாம்.

அதனையடுத்து, இந்தாண்டின் இறுதியில், டிசம்பர் 2 மற்றும் 3 தேதிகளில் அமீரகத்தின் தேசிய தினம் (National Day) வருகிறது. இது நாடு முழுவதும் கொண்டாடப்படும் மற்றொரு குறிப்பிடத்தக்க பொது விடுமுறையாகும். அத்துடன் தியாகிகள் தினம் (நவம்பர் 30) வியாழக்கிழமையும் வருவதால், குடியிருப்பாளர்கள் மற்றொரு நீண்ட வார இறுதியை அனுபவிக்கலாம்.

ADVERTISEMENT

ஆகையால், ஐக்கிய அரபு அமீரகத்தில் வசிப்பவர்கள் மற்றும் வெளிநாட்டவர்கள் தங்கள் குடும்பம் மற்றும் உறவினர்களுடன் பொன்னான நேரத்தை செலவிடவும், நாட்டின் கலாச்சார பாரம்பரியத்தை ஆராயவும், பல்வேறு நிகழ்வுகள் மற்றும் செயல்பாடுகளில் பங்கேற்கவும் இந்த பொது விடுமுறை நாட்கள் அவர்களுக்கு சிறந்த வாய்ப்பாக அமையும்.