அமீரக செய்திகள்

UAE: விசாவுக்கான மருத்துவ உடற்தகுதி சோதனைகள் அனைத்தையும் ஒரே இடத்தில் பெறலாம்!! செயல்முறை முழுவதையும் 30 நிமிடங்களில் முடிக்கலாம் என தகவல்…!!

வெளிநாட்டவர்கள் ஐக்கிய அரபு அமீரகத்தின் ரெசிடன்சி விசாவிற்கு விண்ணப்பிக்கும் போது, பொதுவாக மருத்துவ உடற்தகுதி சான்றிதழை (medical fitness certification) சமர்ப்பிக்க வேண்டியது கட்டாயமாகும். இதற்கான செயல்முறைகள் அமீரக அரசால் அங்கீகரிக்கப்பட்ட மருத்துவ வசதிகளில் மட்டுமே பெற முடியும்.

அபுதாபியில் இந்த மருத்துவ உடற்தகுதி சான்றிதழுக்கான அனைத்து ஸ்கிரீனிங் செயல்முறைகளும், UAE அரசாங்கத்தால் அங்கீகரிக்கப்பட்ட கேபிடல் ஹெல்த் ஸ்கிரீனிங் சென்டரின் (CHSC) கிளைகளில் எளிதாகவும் விரைவாகவும் ஒரே இடத்தில் முடித்துத் தரப்படுகின்றன.

அதுமட்டுமின்றி, விண்ணப்பதாரர்கள் தங்கள் மருத்துவ அறிக்கைகளை சேகரிக்க வேண்டிய அவசியமில்லை, ஏனெனில் விசா செயலாக்கத்திற்கான அறிக்கைகள் மற்றும் மருத்துவ உடற்பயிற்சி சான்றிதழ்கள் அரசாங்க அமைப்புகளுடன் நேரடியாக இணைக்கப்பட்டுள்ளன.

மேலும், HIV/எய்ட்ஸ், காசநோய், சிபிலிஸ் மற்றும் ஹெபடைடிஸ் போன்ற பல்வேறு நோய்களைக் கண்டறியத் தேவையான மருத்துவப் பரிசோதனைகள் செய்யப்படுவதுடன், இதற்கான முழு செயல்முறையையும் 30 நிமிடங்களில் முடிக்கலாம்.

விசா விண்ணப்பத்திற்கான மருத்துவப் பரிசோதனை:

  • உடல் பரிசோதனை,
  • இரத்தப் பரிசோதனை
  • மார்பு எக்ஸ்ரே

4 மில்லியன் சோதனைகள்:

அபுதாபி சிட்டி, முசாஃபா, அல் அய்ன் மற்றும் அல் தனா ஆகிய இடங்களில் விசா மருத்துவ பரிசோதனைகளுக்காக உருவாக்கப்பட்ட CHSCயின் கிளைகள், இன்றுவரை 4 மில்லியனுக்கும் அதிகமான விசா மருத்துவ சோதனைகளை நிறைவு செய்துள்ளன.

இதில் விண்ணப்பதாரர்களுக்கு பிரீமியம் பேக்கேஜ்களும் வழங்கப்படுகிறது, அதாவது நீங்கள் விசா மருத்துவ பரிசோதனையை ஃபாஸ்ட் டிராக் அல்லது VIP சேவையாக மேம்படுத்துவதன் மூலம் செயல்முறையை மேலும் விரைவுபடுத்தலாம் மற்றும் காலை 11 மணிக்கு முன் ஸ்க்ரீனிங் செய்தால், விரைவாக அதே நாளில் முடிவுகளைப் பெறலாம்.

அதுமட்டுமில்லாமல், CHSC அதன் மொபைல் கிளினிக்குகள் மூலம் பெரிய குழுக்களைக் கொண்ட நிறுவனங்களுக்கு ஆன்-சைட் விசா மருத்துவப் பரிசோதனைகளையும் அபுதாபி முழுவதும் வழங்கி வருகிறதும் குறிப்பிடத்தக்கது.

 

Related Articles

Back to top button
error: Content is protected !!