அமீரக செய்திகள்

துபாய்: பார்க்கிங் பகுதிகளில் உள்ள வாகனங்களை கண்காணிக்க இரட்டிப்பாக்கப்படும் ஸ்மார்ட் ஸ்கிரீனிங் வாகனங்கள்..!! RTA தகவல்..!!

துபாயில் தற்பொழுது இருக்கக்கூடிய கட்டண பார்க்கிங் பகுதிகளில் குறிப்பிட்ட பகுதிகளானது துபாயின் சாலைகள் மற்றும் போக்குவரத்து ஆணையத்தின் (RTA) ஸ்மார்ட் ஸ்க்ரீனிங் சிஸ்டம் மூலம் கண்காணிக்கப்படுகிறது. தற்பொழுது வரை மொத்த கட்டண பார்க்கிங் பகுதிகளில் 34 சதவீதம் கட்டண பார்க்கிங் ஸ்லாட்டுகள் RTAஇன் 9 ஸ்மார்ட் ஸ்கிரீனிங் சிஸ்டத்தின் கண்காணிப்பில் உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் 2023ஆம் ஆண்டு இறுதிக்குள் கட்டண பார்க்கிங் பகுதிகளில் ஸ்மார்ட் ஸ்கிரீனிங் வாகனங்கள் இரட்டிப்பாக்கப்படவுள்ளதாக தகவல் வெளியிடப்பட்டுள்ளது. அவை, இந்தாண்டின் இறுதிக்குள் ஸ்மார்ட் ஸ்கிரீனிங் வாகனங்கள் 18 ஆக அதிகரிக்கப்படும் என்று கூறப்படுகிறது.

இந்த ஸ்மார்ட் ஸ்கிரீனிங் வாகனங்களால் எந்த வகையான பார்க்கிங் இடமாக இருந்தாலும் அனைத்து திசைகளிலும் வாகனங்களின் நம்பர் பிளேட்களைக் கண்காணித்து படிக்க முடியும் என்பது குறிப்பிடத்தக்கது. அவ்வாறு ஸ்மார்ட் வாகனங்களின் எண்ணிக்கை அதிகரிக்கப்பட்டதும், சுமார் 140,000 பார்க்கிங் பகுதிகள் அதாவது துபாய் எமிரேட்டின் மொத்த கட்டண பார்க்கிங் பகுதிகளில் 70 சதவீதத்தை கண்காணிக்கும் என்று கூறப்பட்டுள்ளது.

அதுபோல,எமிரேட்டின் அறிவார்ந்த போக்குவரத்து அமைப்புகளை (Intelligent traffic systems-ITS) 2026க்குள் 60 சதவீத சாலை நெட்வொர்க்குகளில் இருந்து 100 சதவீதமாக உயர்த்துவதற்கு RTA திட்டமிட்டுள்ளது.

மேற்கூறப்பட்டுள்ள RTA வின் முன்முயற்சிகள் மற்றும் திட்டங்கள் அனைத்தும் துபாயின் பட்டத்து இளவரசர் மாண்புமிகு ஷேக் ஹம்தான் பின் முகமது பின் ரஷீத் அல் மக்தூம் அவர்கள், அல் பர்ஷாவில் உள்ள உலகின் மிகப்பெரிய மற்றும் மிகவும் மேம்பட்ட போக்குவரத்து கட்டுப்பாட்டு மையங்களில் ஒன்றான ITS மையத்தை பார்வையிட்டு மதிப்பாய்வு செய்த போது வெளியிடப்பட்டுள்ளது.

2020 இல் திறக்கப்பட்ட இந்த மையம், துபாயின் போக்குவரத்து நிர்வாகத்தை கணிசமாக மேம்படுத்தியுள்ளது,

மையத்தில் நடைபெறும் பணிகள்:

  • போக்குவரத்து கட்டுப்பாடு மற்றும் மேலாண்மை
  • சாலைப் பயனர்களுக்கு தகவல்களைப் பரப்புதல்
  • முக்கிய சாலைகளில் போக்குவரத்து ஓட்டத்தை சீராக்குதல்
  • ஒருங்கிணைப்பு, மூலோபாய பங்காளிகளின் ஆதரவு மற்றும் தரவு பரிமாற்றம்
  • போக்குவரத்து சிக்னல்களுக்கான போக்குவரத்து கட்டுப்பாட்டு அமைப்பை இயக்குதல்
  • செயல்பாட்டு அமைப்புகளின் செயல்பாட்டைக் கண்காணித்தல் மற்றும் செயலிழப்புகளைப் புகாரளித்தல்
  • சம்பவங்கள், அவசரநிலைகள் மற்றும் நிகழ்வுகளின் மேலாண்மை
  • செயல்பாட்டு செயல்முறைகளின் திட்டமிடல், ஆய்வுகள் மற்றும் மேம்பாடு

சாலை நெட்வொர்க் விரிவாக்கம்:

துபாயின் சாலை நெட்வொர்க் கடந்த இரண்டு தசாப்தங்களில் 115 சதவீத வளர்ச்சியைக் கண்டுள்ளது. அதேகாலகட்டத்தில், பிரிட்ஜ் மற்றும் அண்டர்பாஸ்களின் எண்ணிக்கை 129ல் இருந்து 988 ஆக அதிகரித்துள்ளது. மேலும், 2006ல் 26 ஆக இருந்த நடை பாலங்கள் மற்றும் அண்டர்பாஸ்களின் எண்ணிக்கை 2022ல் 122 ஆக அதிகரித்துள்ளது.

சைக்கிளிங் டிராக்:

துபாயில் சைக்கிள் டிராக்குகளை 2026 ஆம் ஆண்டிற்குள் 544 கிமீ முதல் 819 கிமீ வரை விரிவுபடுத்துவதற்கான மாஸ்டர் திட்டத்தையும் ஷேக் ஹம்தான் மதிப்பாய்வு செய்துள்ளார். அத்துடன் ஹெஸ்ஸா ஸ்ட்ரீட் மேம்பாட்டுத் திட்டத்தில் 13.5-கிமீ நீளமான பாதையில், பைக்குகள் மற்றும் ஸ்கூட்டர்களுக்கு 2.5 மீட்டர் அகலமும், பாதசாரிகளுக்கு 2 மீட்டர் அகலமும் இருக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related Articles

Back to top button
error: Content is protected !!