அமீரக செய்திகள்

அமீரகத்தின் பெரும்பாலான பகுதிகளை வெளுத்து வாங்கிய கனமழை..!! இன்று தூசியுடன் கூடிய காற்று வீசும் என வானிலை மையம் தகவல்..!!

ஓரிரு நாட்களாக அமீரகத்தின் சில பகுதிகளில் கனமழை மற்றும் மிதமான மழை பெய்து வருவதால், ஆங்காங்கே மரங்கள் முறிந்து விழுந்ததுடன் பாலைவனத்தில் தண்ணீர்ப் பெருக்கெடுத்துள்ளது. இந்நிலையில், இன்றைய தினம் அமீரகத்தின் பெரும்பாலான பகுதிகளில் மேகமூட்டத்துடன் காணப்படும் என தேசிய வானிலை ஆய்வு மையம் (NCM) தெரிவித்துள்ளது.

அதேசமயம், நாட்டில் அதிகபட்ச வெப்பநிலை 45 டிகிரி செல்சியஸ் வரை பதிவாகலாம் என்று தெரிவித்துள்ளது. அதன் அடிப்படையில், அபுதாபியில் 44ºC ஆகவும், துபாயில் 43ºC ஆகவும் அதிகபட்ச வெப்பநிலை பதிவாகும் மற்றும் குறைந்தபட்ச வெப்பநிலையாக அபுதாபி மற்றும் துபாயில் 30ºC வரையிலும், மலைப்பகுதிகளில் 25ºC வரையிலும் குறையும் என்று கணிக்கப்பட்டுள்ளது.

கடந்த செவ்வாய்க்கிழமையன்று அல் அய்னில் அதிவேகக் காற்றுடன் கூடிய கனமழை பெய்யும் போது எடுக்கப்பட்ட வீடியோ ஒன்றினை ஸ்டார்ம் சென்டர் சமூக ஊடகத்தில் பகிர்ந்துள்ளது. இந்நிலையில், NCM தொடங்கியுள்ள புதிய கிளவுட் சீடிங் ஆராய்ச்சியின் விளைவாக இந்த மழை பதிவகியுள்ளதா என்பது குறித்தத் தகவல்கள் ஏதும் கிடைக்கவில்லை.

மேலும், ‘Cloud-Aerosol-Electrical Interactions for Rainfall Enhancement Experiment (CLOUDIX)’ என்ற தலைப்பில் அல் அய்ன் சர்வதேச விமான நிலையத்திலிருந்து ஆராய்ச்சி இயக்கம் நடத்தப்படுகிறது. சுமார் ஒரு மாதகாலம் நடைபெறும் இந்த பிரச்சாரத்தில் அமீரக வான்வெளி மற்றும் ஓமானின் சில பகுதிகளில் விமான பயணங்கள் மேற்கொள்ளப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த செயல்முறையானது, க்ளவுட் சீடிங் விளைவுகளை பெருக்குவதற்கும், மழைப்பொழிவை அதிகரிப்பதற்கும் நேரடியாக பங்களிக்கிறது என்று NCM கூறியுள்ளது. 2015 ஆம் ஆண்டு முதல், மழையை அதிகரிக்க நாடு பல்வேறு தொழில்நுட்பங்களை முயற்சித்து சோதித்துள்ளது, இதில் ட்ரோன்கள் மூலம் மேகங்களில் மின்னூட்டங்களை செலுத்துவதற்கான சாத்தியக்கூறுகளும் அடங்கும்.

கிட்டத்தட்ட்ட இருபது வருடங்களுக்கும் மேலாக நாட்டில் மழையை அதிகரிக்க, க்ளவுட் சீடிங் முறையை அமீரகம் பயன்படுத்தி வருகிறது. இதன் மூலம், 25 சதவீதம் வரை அதிகரிக்க முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.

NCM வெளியிட்டுள்ள முன்னறிவிப்பின் படி,  நாட்டின் சில கடலோரப் பகுதிகளில் இன்றிரவு மற்றும் வெள்ளிக்கிழமை காலை ஈரப்பதத்துடன் இருக்கும். அதேவேளை, அபுதாபி மற்றும் துபாயில் ஈர்பத்தத்தின் அளவு  25 முதல் 80 சதவீதம் வரை இருக்கும். அதுமட்டுமின்றி, அரேபிய வளைகுடா மற்றும் ஓமன் கடலில் அலையின் நிலைமைகள் சற்று தணிவாக இருக்கும் என்றும் மையம் தெரிவித்துள்ளது.

Related Articles

Back to top button
error: Content is protected !!