ADVERTISEMENT

அமீரகத்தில் மேகமூட்டமான வானிலை நிலவும்..!! மழை பெய்ய வாய்ப்பு இருப்பதாகவும் NCM தகவல்..!!

Published: 20 Sep 2023, 10:20 AM |
Updated: 20 Sep 2023, 10:50 AM |
Posted By: Menaka

ஐக்கிய அரபு அமீரகத்தில் இன்றைய தினம் (புதன்கிழமை செப்டம்பர் 20) வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும் என தேசிய வானிலை ஆய்வு மையம் (NCM) தெரிவித்துள்ளது. மேலும், லேசானது முதல் மிதமான காற்று வீசும் எனவும், சில சமயங்களில் பலத்த காற்று வீசக்கூடும் என்பதால் மேற்கு நோக்கி தூசி வீசும் எனவும் மையம் எச்சரித்துள்ளது.

ADVERTISEMENT

அத்துடன் இன்று பிற்பகல் நேரங்களில் நாட்டின் கிழக்கு மற்றும் தெற்கு நோக்கி மழையை உருவாக்ககூடிய சில வெப்பச்சலன மேகங்கள் உருவாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

NCM வெளியிட்டுள்ள வானிலை முன்னறிவிப்பின் படி, நாட்டின் உள்பகுதி மற்றும் சில கடலோரப் பகுதிகளில் மேகமூட்டம் அல்லது மூடுபனி உருவாகும் வாய்ப்பு இருப்பதுடன் இன்றிரவு மற்றும் வியாழன் காலை ஈரப்பதமாக இருக்கும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ADVERTISEMENT

இதற்கிடையில், அபுதாபி மற்றும் துபாயில் வெப்பநிலைகள் முறையே 43ºC மற்றும் 42ºC வரை அதிகரிக்கக்கூடும் என்றும் NCM அறிவித்துள்ளது. அதேவேளை, குறைந்தபட்ச வெப்பநிலையாக அபுதாபியில் 31ºC ஆகவும், துபாயில் 32ºC ஆகவும், மலைப்பகுதிகளில் 23ºC ஆகவும் பதிவாகும் என்று கூறியுள்ளது.

அதேபோல், அபுதாபியில் 20 முதல் 75 சதவீதம் மற்றும் துபாயில் 25 முதல் 80 சதவீதம் வரை ஈரப்பதம் இருக்கும் என்று அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

ADVERTISEMENT

இந்நிலையில், அரேபிய வளைகுடா மற்றும் ஓமன் கடலில் அலைகளின் நிலை சற்று குறைவாக இருக்கும் என்றும் NCM தெரிவித்துள்ளது.