ADVERTISEMENT

அமீரகத்தில் ஹோட்டல் துறைகளில் அதிகரிக்கும் சம்பள விகிதம்..!! 7,000 காலிப்பணியிடங்கள் திறக்கப்படும் என்று கணிப்பு..!!

Published: 24 Sep 2023, 3:55 PM |
Updated: 24 Sep 2023, 3:56 PM |
Posted By: admin

ஐக்கிய அரபு அமீரகத்தின் ஹோட்டல் துறைகளில் வேலைவாய்ப்புகள் மட்டுமின்றி ஊதிய பேக்கேஜ்களும் வேகமாக அதிகரித்து வருவதாக புள்ளி விபரங்கள் வெளிவந்துள்ளது. அதன்படி, அமீரகத்தில் உள்ள ஹோட்டல்களில் வேலை செய்யும் ஊழியர்களின் ஊதிய அளவுகள் 2019 ஆம் ஆண்டுடன் ஒப்பிடும்போது 50% வரை உயர்ந்துள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.

ADVERTISEMENT

குறிப்பாக, இடைநிலை முதல் உயர் அதிகாரி (mid-tier to senior executive) பதவிகளுக்கு 30 முதல் 45 சதவீதம் வரை சம்பளம் கடந்த மூன்று ஆட்டுகளில் அதிகரித்துள்ளது தெரியவந்துள்ளது. மேலும், ஹோட்டல் துறைகளில் இந்த ஆண்டிற்கான புதிய ஆட்சேர்ப்புகளின் விகிதம் 2022 உடன் ஒப்பிடும்போது 10 முதல் 15 சதவீதம் வரை அதிகரித்துள்ளதாகவும் கூறப்படுகிறது.

ஊதிய பேக்கேஜ் பற்றி ஹோட்டல் வட்டாரங்கள் தெரிவித்துள்ள தகவல்களின் படி, தற்போதைய சூழலுக்கு ஏற்ப தனிநபர்கள் ஒரு சிறந்த பேக்கேஜ்களைப் பெறுவதற்கு வேலையை விட்டு விலகி வேறு புதிய முதலாளியிடம் செல்கின்றனர். இதனாலேயே ஊழியர்களைத் தக்கவைத்துக் கொள்வது என்பது தொழிலில் உள்ள முதலாளிகளுக்கு ஒரு சுமையாக மாறியுள்ளதாகவும் கூறப்படுகிறது.

ADVERTISEMENT

தற்போதைய ஊதிய அளவுகள்:

பதவி 2019 இல் ஊதியம் தற்போதைய ஊதியம்
உணவக மேலாளர் Dh13000 Dh16,000-Dh22,000
வரவேற்பாளர்கள் Dh1,500-Dh2,200 Dh2,800-Dh3,500
உதவி சமையல்காரர்கள் Dh1,700 Dh2,200-Dh 2,400
தலைமை சமையல்காரர்கள் Dh14,000 Dh16,000-Dh22,000

இந்நிலையில், அமீரகத்தின் விருந்தோம்பல் துறையானது, இந்தாண்டு இறுதிக்குள் கூடுதலாக 9,000 ஹோட்டல் அறைகளைத் திறக்க உள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால் சிறந்த திறமையான ஊழியர்களைத் தக்கவைத்துக் கொள்ள ஹோட்டல் உரிமையாளர்கள் சம்பளத்தை போட்டித்தன்மையுடன் வழங்க வேண்டும் என்று ஹோட்டல் ஆபரேட்டர்கள் தெரிவித்துள்ளனர்.

அமீரகத்தைப் போலவே, சுற்றுலா மற்றும் விருந்தோம்பலில் அதிக கவனம் செலுத்தும் சவுதி அரேபியாவும் 2030 ஆம் ஆண்டின் இறுதிக்குள் 315,000 ஹோட்டல் அறைகளை திறக்க திட்டமிட்டுள்ளதாகவும், இதனால் அதன் மொத்தப் பங்குகளின் எண்ணிக்கை 450,000 ஆக இருக்கும் என்றும் துறை சார்ந்த வல்லுநர்கள் தெரிவித்துள்ளனர்.

ADVERTISEMENT

பயிற்சி பெற்ற தொழிலாளர்களுக்கான தேவை

அமீரகத்தில் இப்போது ஊழியர்கள் அனைவரும் குறைந்தபட்சம், ஹோட்டல் நிர்வாகத்தில் இளங்கலை பட்டம் பெற்றிருக்க வேண்டும் என்று ஹோட்டல் உரிமையாளர்கள் கூறுகின்றனர். ஹோட்டல் உரிமையாளர்களின் கூற்றுப்படி, ஹோட்டல்களில் புதிய ஊழியர்களுக்கு தேவைக்கேற்ப கூடுதல் பயிற்சி அளிக்கப்பட்டாலும், அவர்கள் சிறப்புப் பட்டம் பெற்றிருப்பது இப்போது அவசியமாகக் கருதப்படுகிறது. 2019க்கு முன் இவ்வாறு இல்லை என்பது இங்கே கவனிக்கத்தக்கது.

காலிப்பணியிடங்கள்:

இந்த ஆண்டின் தொடக்கத்தில், உலக சுற்றுலா மற்றும் சுற்றுலா கவுன்சில் (World Travel and Tourism Council) விருந்தோம்பல் துறையில் 7,000 காலிப்பணியிடங்கள் திறக்கப்படும் என்று கணித்துள்ளது.

அதற்கேற்றவாறு, 2023 ஆம் ஆண்டு முழுவதும் விருந்தோம்பல் துறையில் பணியமர்த்தல் தொடர்ந்து அதிகரித்து வருவதாக ஆட்சேர்ப்பு நிறுவனமான டீலின் MENA விரிவாக்கத்தின் தலைவர் தரேக் சலாம் என்பவர் தெரிவித்திருப்பதும் குறிப்பிடத்தக்கது.