அமீரக செய்திகள்

அபுதாபியின் முக்கிய சாலைகளில் இன்று சில குறிப்பிட்ட வாகனங்களுக்குத் தடை!! காவல்துறை அறிவிப்பு..!!

அபுதாபியின் முக்கிய சாலைகளில் இன்று (அக்டோபர் 9) குறிப்பிட்ட சில வாகனங்கள் செல்வதற்கு தற்காலிக தடை விதிக்கப்பட்டுள்ளது. இந்த தற்காலிக தடை தொடர்பாக அபுதாபி காவல்துறை X தளத்தில் பதிவிட்டுள்ளது.

அபுதாபி காவல்துறை மற்றும் ஒருங்கிணைந்த போக்குவரத்து மையம் (ITC) ஆகியவை இணைந்து வெளியிட்ட அறிவிப்பின் படி, ஷேக் சையத் பின் சுல்தான் ஸ்ட்ரீட்டில் உள்ள ஷேக் சையத் பாலத்திலிருந்து ஷேக் சையத் சுரங்கப்பாதை வரை (Al-Qurram Street – அல் குர்ரம் ஸ்ட்ரீட்) 50 தொழிலாளர்கள் மற்றும் அதற்கும் மேற்பட்ட பயணிகளை ஏற்றிச் செல்லும் பேருந்துகள் இன்று (திங்கள்கிழமை) காலை 6.30 மணி முதல் 9 மணி வரையிலும், மாலை 3 மணி முதல் இரவு 7 மணி வரையிலும் இயங்குவதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.

இந்த போக்குவரத்துக் கட்டுப்பாடு வாகனங்களால் ஏற்படும் விபத்துகளைக் குறைப்பதற்கு ஆணையத்தால் மேற்கொள்ளப்படும் முயற்சிகளுக்கு ஏற்ப வருகிறது.

எனவே, இந்த வாகனங்களை ஓட்டும் வாகன ஓட்டிகள் குறிப்பிட்ட காலங்களுக்கு இந்த சாலைகளில் பயணம் செய்ய வேண்டாம் மற்றும் போக்குவரத்து அமைப்புகளை கடைபிடிக்க வேண்டும் என்று அபுதாபி போலீஸ் ஜெனரல் கமாண்ட் உத்தரவிட்டுள்ளது.

மேலும், சாலைகளில் பொருத்தப்பட்டுள்ள ஸ்மார்ட் சிஸ்டம் மூலம் விதிமீறல்களைக் கண்காணித்து பிடிப்பதற்காக, சாலைக் கண்காணிப்பை கடுமையாக்குவதும், தொழிலாளர்களை ஏற்றிச் செல்லும் பேருந்துகளுக்கு பொருந்தும் என்று ஆணையம் கூறியுள்ளது.

உடனடி செய்திகளை அறிந்து கொள்ள எங்களின் Khaleej Tamil வாட்ஸ்அப் சேனலில் இணைந்து கொள்ளுங்கள்.
Link: Khaleej Tamil Whatsapp channel

Related Articles

Back to top button
error: Content is protected !!