அமீரக செய்திகள்

புத்தம் புதிய அம்சங்களுடன் மீண்டும் திறக்கப்பட்டுள்ள துபாய் மிராக்கிள் கார்டன்….

அமீரகக் குடியிருப்பாளர்களை உற்சாகமூட்டுவதற்காக புகழ்பெற்ற துபாய் மிராக்கிள் கார்டன் தற்பொழுது மீண்டும் திறக்கப்பட்டுள்ளது. இந்தாண்டு 12வது பதிப்பில் அடியெடுத்து வைக்கும் துபாய் மிராக்கிள் கார்டன், குழந்தைகளுக்கான விளையாட்டு மண்டலம், வண்ணமயமான மலர்கள் நிறைந்த அற்புதமான தோட்டம் மற்றும் உணவுப் பிரியர்களை ஈர்க்கும் வகையில் சுவையான உணவுகளை வழங்கும் சில்லறை விற்பனைக் கடைகள் என கலவையான அனுபவங்களை பார்வையாளர்களுக்கு உறுதியளிக்கிறது.

மேலும், ஆங்காங்கே நிறுத்தி வைக்கப்பட்டிருக்கும் ஸ்மர்ஃப் (smurf) பொம்மைகள் இப்போது FIFA கருப்பொருளில் இருந்து பூக்களில் விளையாடும் வடிவங்களுக்கு மாற்றப்பட்டுள்ளன. கூடுதலாக, வாட்டர் வீல் மற்றும் இதய வடிவ சுரங்கப் பாதைகளும் சேர்க்கப்பட்டுள்ளன.

குறிப்பாக, பார்வையாளர்களை மகிழ்விக்க ஏராளமான உணவு விருப்பங்கள் மற்றும் பானங்கள் வழங்கும் சில்லறை விற்பனையகங்களும் இந்த பதிப்பில் உள்ளன. அத்துடன் பூங்கா முழுவதும் அதிக இருக்கைகள் அறிமுகப்படுத்தப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது, எனவே பார்வையாளர்கள் சாப்பிட்டு அவ்வப்போது இளைப்பாறிக் கொள்ளலாம் என கூறப்பட்டுள்ளது.

மனதை மயக்கும் மலர் கண்காட்சிகள்:

பூத்துக் குலுங்கும் பல வண்ண மலர்களால் அழகிய வடிவங்களில் அலங்கரிக்கப்பட்ட மலர் சுரங்கங்கள், நீர் சார்ந்த இடங்கள் மற்றும் புதுமையான 3-D நீர் மற்றும் லைட்டிங் நிறுவல்கள் போன்றவை பார்வையாளர்களின் கண்களுக்கு விருந்தளிக்கும் என்பதில் சந்தேகமில்லை.

அதேசமயம், மிராக்கிள் கார்டன் சுமார் 500,000 க்கும் மேற்பட்ட புதிய பூக்கள் மற்றும் உயிருள்ள செடிகளால் வடிவமைக்கப்பட்ட புகழ்பெற்ற, கின்னஸ் உலக சாதனை படைத்த எமிரேட்ஸ் A380 விமானத்தின் வடிவமைப்பையும் கொண்டுள்ளது.

அதுமட்டுமின்றி, அங்கிருக்கும் ஏரி பூங்கா, பசுமையான தோட்டம் என அனைத்தும் உங்களை இயற்கையோடு இணைந்த பயணத்திற்கு எடுத்துச் செல்லும் என்றும் துபாய் மிராக்கிள் கார்டன் உறுதியளிக்கிறது.

Related Articles

Back to top button
error: Content is protected !!