அமீரக செய்திகள்

அமீரகத்தின் ஒரு சில இடங்களில் இன்று பெய்த கனமழை..!! சமூக ஊடகங்களில் வீடியோ வெளியீடு…!!

ஐக்கிய அரபு அமீரகத்தின் கிழக்குப் பகுதிகளில் உள்ள மலைகளில் இன்று (சனிக்கிழமை) கனமழை பதிவாகியுள்ளதாக கூறப்பட்டுள்ளது. ஏற்கனவே தேசிய வானிலை ஆய்வு மையம் (NCM) முன்னறிவித்த படி, ஃபுஜைரா மற்றும் ராஸ் அல் கைமா போன்ற பகுதிகளிலும் பரவலாக மழை பெய்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் ஒரு சில எமிரேட்களில் தொடர்ந்து பலத்த மழை பெய்து வருவதால், NCM மஞ்சள் மற்றும் ஆரஞ்சு நிற எச்சரிக்கையை வெளியிட்டுள்ளது. அத்துடன், மோசமான வானிலையின் போது, குடியிருப்பாளர்கள் வெளியில் செல்வதைத் தவிர்க்குமாறும் எச்சரித்துள்ளது.

இது தொடர்பாக X தளத்தில் NCM வெளியிட்டுள்ள பதிவில், அமீரகத்தின் சில பகுதிகளில் மழை பெய்யும் என்றும் குடியிருப்பாளர்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

அதேபோல், ஆங்காங்கே மழை பெய்யும் பல வீடியோக்களையும் புயல் மையம் வெளியிட்டுள்ளது. அந்த வீடியோக்களில் திப்பா (Dibba) மற்றும் மசாஃபி (Masafi) பகுதியின் தெருக்களில் மழை பெய்யும் காட்சிகளைப் பார்க்கலாம். மற்றொன்றில் இடைவிடாமல் பெய்த கனமழையில் வாகனங்கள் செல்வதையும், தெருக்களில் மழை நீர் நிரம்பி வழிந்துச் சென்று கொண்டிருப்பதையும் வீடியோ காட்டுகிறது.

 

அத்துடன் அமீரகத்தில் குறைந்தபட்ச வெப்பநிலை 21ºC வரையில் குறையும் என்றும், அதிகபட்ச வெப்பநிலை 41ºC வரையில் அதிகரிக்கும் என்றும் வானிலை முன்னறிவிப்பில் ஏற்கெனவே தெரிவிக்கப்பட்டிருந்ததும் குறிப்பிடத்தக்கது.

Related Articles

Back to top button
error: Content is protected !!