அமீரக செய்திகள்

அமீரகத்தில் இன்று ஒரு சில பகுதிகளில் 21ºC வரை வெப்பநிலை குறைய வாய்ப்பு..!! NCM தகவல்..!!

அமீரகத்தில் கோடைகாலம் முடிவடைந்த நிலையில், இன்றைய தினம் நாட்டின் வானிலை ஓரளவு மேகமூட்டமாகக் காணப்படும் என்று தேசிய வானிலை ஆய்வு மையம் (NCM) தெரிவித்துள்ளது. மேலும், சில பகுதிகளில் லேசானது முதல் மிதமான காற்று வீசக்கூடும் என்றும் மையம் அறிவித்துள்ளது.

இதற்கிடையில், மழையை உருவாக்கக்கூடிய சில வெப்பச் சலன மேகங்கள் கிழக்கு நோக்கி நகரும் என்றும், அவை பிற்பகலில் வெப்பச்சலனமாக மாறும் என்றும் NCM எச்சரித்துள்ளது.

NCM வெளியிட்டுள்ள அறிவிப்பின்படி, சில எமிரேட்டில் வெப்பநிலை படிப்படியாக உயர்ந்து அதிகபட்சமாக 41 டிகிரி செல்சியஸ் வரை பதிவாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. நாட்டின் அதிகபட்ச வெப்பநிலையாக அபுதாபியில் 39ºC வரையிலும், துபாயில் 38ºC வரையிலும் உயரும் என்று கூறப்பட்டுள்ளது.

அதேசமயம், அபுதாபி மற்றும் துபாயில் பதிவாகும் குறைந்தபட்ச வெப்பநிலைகள் முறையே 27ºC மற்றும் 28ºC ஆக இருக்கும் என்றும் மலைப்பகுதிகளில் 21ºC வரை வெப்பநிலை குறையும் என்றும் கணிக்கப்பட்டுள்ளது.

அமீரகத்தின் ஈரப்பதம் தொடர்பான அறிக்கையில், இன்று (செவ்வாய்க்கிழமை அக்டோபர் 3) இரவு மற்றும் நாளை காலை ஈரப்பதத்தை உணரலாம் என்று NCM குறிப்பிட்டுள்ளது. குறிப்பாக, அபுதாபியில் 35 முதல் 85 சதவீதம் வரையிலும், துபாயில் 40 முதல் 80 சதவீதம் வரையிலும் ஈரப்பதம் இருக்கும் என்று கூறியுள்ளது.

அதேபோல், அரேபிய வளைகுடா மற்றும் ஓமன் கடலில் நிலைமைகள் சற்று மிதமானதாக இருக்கும் என்றும் NCM கூறியுள்ளது.

Related Articles

Back to top button
error: Content is protected !!