அமீரக செய்திகள்

அமீரகத்தில் இன்று காலை முதல் முடங்கிய வாட்ஸ்அப் சேவைகள்..!! ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம் செயல்பாட்டிலும் சிக்கல்களை எதிர்கொள்வதாக பயனாளிகள் தகவல்..!!

ஐக்கிய அரபு அமீரகம் மற்றும் உலகின் பல பகுதிகளில் இன்று காலை வாட்ஸ்அப் பயன்பாட்டில் சிக்கல் இருந்து வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அமீரகம் முழுவதும் வாட்ஸ்அப் செயலிழந்ததைத் தொடர்ந்து கிட்டத்தட்ட ஒரு மணி நேரத்திற்குப் பின்,  வாட்ஸ்அப் சேவைகள் மதியம் 12.10 மணியளவில் சில பயனாளிகளுக்கு மட்டும் ஆன்லைனில் செயல்பாட்டிற்கு வந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 

இருப்பினும், பலருக்கு வாட்ஸ்அப் சேவையில் சிக்கலிருப்பதாக தெரிவித்துள்ளனர். அத்துடன் ஃபேஸ்புக் மற்றும் இன்ஸ்டாகிராமின் இணையதளங்களை இன்னும் அணுக முடியவில்லை எனவும் பயனாளிகள் தெரிவித்துள்ளனர்.

ஐக்கிய அரபு அமீரகத்தில் உள்ள வாட்ஸ்அப் பயனர்கள் இன்று காலை மொபைல் மற்றும் டெஸ்க்டாப்பில் உள்ள அப்ளிகேஷன்களில் மெசேஜ்களை அனுப்புவதில் சிக்கல் இருப்பதாக புகாரளித்திருந்தனர். பிற மெட்டா தளங்களான பேஸ்புக் மற்றும் இன்ஸ்டாகிராமிலும் இந்த சிக்கல்கள் காணப்பட்டன.

சில சமயங்களில் அனுப்பப்படும் வாட்ஸ்அப் செய்திகள் ஒரு சாம்பல் நிற டிக் அடையாளத்துடன் மட்டுமே காணப்படுவதாகவும் பயனாளர்கள் தெரிவித்துள்ளனர். இது தொடர்பான கண்காணிப்பு தளமான Downdetector.com காலை 10.47 மணிக்கு வாட்ஸ்அப் சிக்கல்களைப் புகாரளிக்கும் பயனர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருவதாக தெரிவித்திருந்தது. அதனைத் தொடர்ந்து காலை 11.11 மணி முதல் பேஸ்புக், 11.14 மணி முதல் மெசஞ்சர் மற்றும் காலை 11.12 மணி முதல் இன்ஸ்டாகிராம் ஆகியவற்றிலும் இந்த சிக்கல்  காணப்பட்டதாகவும் குறிப்பிட்டிருந்தது.

தற்பொழுது ஃபேஸ்புக் மற்றும் இன்ஸ்டாகிராம் அப்ளிகேஷன்ஸ் நன்றாக வேலை செய்வதாகத் தோன்றினாலும் (சிலருக்கு மெதுவாக இருந்தாலும்), டெஸ்க்டாப்களில் இந்த பிரச்சனை அப்படியே இருப்பதாக கூறப்படுகின்றது. இன்று ஏற்பட்ட பிரச்சினை குறித்து ஃபேஸ்புக், வாட்ஸ்அப் மற்றும் இன்ஸ்டாகிராமின் தாய் நிறுவனமான மெட்டா இன்னும் அறிக்கை வெளியிடவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

Related Articles

Back to top button
error: Content is protected !!