அமீரக செய்திகள்

வேறொரு எமிரேட்டில் வசிப்பவர் துபாயில் டிரைவிங் லைசென்சுக்கு விண்ணப்பிக்கலாமா..?? வழிமுறைகள் என்ன..??

ஒரு தனிநபர் ஐக்கிய அரபு அமீரகத்தின் ஏழு எமிரேட்களில் எந்த எமிரேட்டில் வசித்து வந்தாலும், அவர் துபாயில் பணிபுரிந்தால் அவரால் துபாயில் வழங்கப்படும் டிரைவிங் லைசென்சுக்கு விண்ணப்பிக்க முடியும்.

அதாவது, நீங்கள் துபாயில் ஓட்டுநர் பயிற்சி எடுக்க விரும்பினால், துபாயில் உள்ள டிரைவிங் நிறுவனத்தில் டிராஃபிக் கோப்பை (traffic file) திறக்கலாம். இருப்பினும், நீங்கள் தகுதியானவர் என்பதை உறுதிப்படுத்த, உங்களிடம் பின்வரும் ஆவணங்கள் இருக்க வேண்டும்:

  • நீங்கள் எந்த எமிரேட்டில் வசிக்கிறீர்களோ அங்குள்ள குடியிருப்பிற்கான குத்தகை ஒப்பந்தத்தின் (tenancy contract) நகல்.
  • வாடிக்கையாளர் துபாயில் வேலை செய்கிறார் என்று சான்றளிக்கும் நிறுவனத்தின் கடிதம்.

கூடுதலாக, நீங்கள் மற்றொரு எமிரேட்டில் செயலில் உள்ள டிராஃபிக் கோப்பு திறக்கவில்லை என்பதை உறுதிப்படுத்தவும்.

வேறொரு எமிரேட்டிற்கு சென்று ரெசிடென்ஸ் விசா மாறினால் என்ன ஆகும்?

துபாயின் சாலைகள் மற்றும் போக்குவரத்து ஆணையத்தின் (RTA) படி, நீங்கள் எந்த எமிரேட்டிற்கு மாறினாலும், உங்கள் போக்குவரத்து கோப்பு துபாயில் திறக்கப்பட்டதால், நீங்கள் RTA சாலை தேர்வில் தேர்ச்சி பெற்ற பிறகு துபாயிலிருந்து உரிமம் வழங்கப்படும்.

துபாயில் ஓட்டுநர் உரிமத்திற்கு விண்ணப்பிப்பது எப்படி?

நீங்கள் RTAவின் அதிகாரப்பூர்வ இணையதளமான https://rta.ae/ மூலம் ஓட்டுநர் உரிமத்திற்கான விண்ணப்பத்தை நிரப்பலாம் அல்லது துபாயில் உரிமம் பெற்ற ஓட்டுநர் பயிற்சி நிறுவனத்தைப் பார்வையிடலாம்.

நீங்கள் ஆன்லைனில் டிரைவிங் லைசென்சிற்கு விண்ணப்பித்திருந்தாலும், உங்கள் ட்ராஃபிக் கோப்பைத் திறக்கவும், கட்டணத்தைச் செலுத்தவும், கண் பரிசோதனை செய்யவும், டிஜிட்டல் கற்றல் அனுமதியைப் பெறவும் ஓட்டுநர் பயிற்சி நிறுவனத்திற்குச் செல்ல வேண்டும் என்பதை மனதில் கொள்வது அவசியம்.

ஓட்டுநர் உரிமத்தைப் பெறுவதற்கான செயல்முறை பல்வேறு நிலைகளில் நடைபெறுகிறது. அந்தவகையில், நீங்கள் கோப்பைத் திறந்தவுடன், பயிற்சி வகுப்புகளை எடுக்க வேண்டும். அதன் பிறகு, RTAவின் எழுத்துத் தேர்வில் தேர்ச்சி பெற வேண்டும். இதையடுத்து, RTA வின் ‘Yard Test’ஐ எடுப்பீர்கள். இறுதித் தேர்வில் சாலை சோதனைக்கு உட்படுத்தப்படுவீர்கள்.

இந்த அனைத்துத் தேர்வுகளிலும் ஒருவர் தேர்ச்சி பெற்றால் மட்டுமே, ஓட்டுநர் உரிமம் வழங்கப்படும். இல்லையெனில், சாலை சோதனையை மீண்டும் எடுக்க நீங்கள் மீண்டும் பயிற்சி செயல்முறைக்கு செல்ல வேண்டும்.

செலவு:

RTA வின் படி, நீங்கள் முதல்முறையாக டிரைவிங் லைசென்ஸைப் பெறுகிறீர்கள் என்றால், போக்குவரத்துக் கோப்பைத் திறப்பது, அனுமதிக் கட்டணங்கள் மற்றும் எழுத்து மற்றும் நடைமுறை வகுப்புகள் உட்பட ஒட்டுமொத்தப் பேக்கேஜின் குறைந்த அடிப்படைப் பேக்கேஜுக்கு சுமார் 3,280 திர்ஹம் செலவாகும். இருப்பினும், இந்த செலவு, துபாயில் உள்ள டிரைவிங் ஸ்கூல் நிறுவனங்களைப் பொறுத்து மாறுபடும்.

நிறுவனங்களைப் பொறுத்து ஓட்டுநர் பயிற்சிக்கான செலவு மாறுபடலாம் என்றாலும், சில கட்டணங்கள் தரப்படுத்தப்பட்டுள்ளன. அவற்றின் பட்டியல் கீழே கொடுக்கப்பட்டுள்ளது:

  • டிராஃபிக் கோப்பைத் திறக்க 200 திர்ஹம்
  • கற்றல் அனுமதி கட்டணத்திற்கு 100 திர்ஹம்
  • மேனுவல் கையேடுக்கு 50 திர்ஹம்

துபாயில் ஓட்டுநர் உரிமம் வழங்குவதற்கான செலவு:

நீங்கள் சாலைத் தேர்வில் தேர்ச்சி பெற்றிருந்தால், உரிமம் வழங்குவதற்கான கட்டணம்:

  • 21 வயதுக்கு குறைவான தனிநபர்களுக்கு 100 திர்ஹம்.
  • 21 வயது மற்றும் அதற்கு மேற்பட்ட நபர்களுக்கு 300 திர்ஹம்.
  • அறிவு மற்றும் கண்டுபிடிப்பு கட்டணம் (knowledge and innovation fees) 20 திர்ஹம்.

இது போன்ற அமீரகத்தின் முக்கிய செய்திகள் மற்றும் அன்றாட தகவல்களை அறிந்து கொள்ள எங்களின் Khaleej Tamil வாட்ஸ்அப் சேனலில் இணைந்து கொள்ளுங்கள்.
Link: Khaleej Tamil Whatsapp Channel

Related Articles

Back to top button
error: Content is protected !!