அமீரக செய்திகள்

துபாய்: டிரைவிங் லைசென்ஸ் புதுப்பித்தல், வாகனப் பதிவு உட்பட பல்வேறு சேவைகளை எளிதில் பெறும் வசதி… புதிய ஸ்மார்ட் கியோஸ்க் மெஷின்கள் பற்றி தெரிந்து கொள்ள வேண்டியவை என்ன..??

துபாயின் சாலைகள் மற்றும் போக்குவரத்து ஆணையமானது (RTA) சமீப காலமாக ஸ்மார்ட் கியோஸ்க்கள் (smart kiosks) எனப்படும் இயந்திரங்களை துபாய் எமிரேட் முழுவதும் ஆங்காங்கே நிறுவியுள்ளது. வாகன ஓட்டிகளின் நன்மை கருதி அமைக்கப்பட்டுள்ள இந்த இயந்திரங்களானது 24×7 என எல்லா நாட்களிலும் இயங்கும் எனவும் கூறப்பட்டுள்ளது.

இதன் மூலம் எமிரேட்டில் உள்ள வாகன ஓட்டிகள் தங்கள் டிரைவிங் லைசென்ஸ் மற்றும் வாகனப் பதிவை எந்த நேரத்திலும் உடனடியாகப் புதுப்பித்து சில நிமிடங்களில் அவற்றைப் பெறலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

கியோஸ்க்களின் பயன்:

பொதுவாக RTA இணையதளம் மூலம் ஆன்லைனில் கிடைக்கும் பெரும்பாலான சேவைகளை நீங்கள் அணுகும் போது, ஓட்டுநர் உரிமம் அல்லது வாகன உரிமைச் சான்றிதழ் போன்ற ​​உங்கள் ஆவணத்தின் நகலைப் பெறுவதற்கு, நீங்கள் கூரியர் சேவைக்கு விண்ணப்பிக்க வேண்டும் அல்லது RTA இன் வாடிக்கையாளர் மகிழ்ச்சி மையங்களில் ஒன்றை நேரில் சென்று பார்வையிட வேண்டும்.

ஆனால், இந்த கியோஸ்க்களைப் பொறுத்தவரை இதனுள் உள்ளமைக்கப்பட்ட பிரிண்டர் பொருத்தப்பட்டுள்ளது. இது ஆவணத்தை உடனுக்குடன் உங்களுக்கு வழங்கும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, நீங்கள் இதன் மூலம் முழுமையான செயல்முறையை தடையின்றி செய்து ஆவணத்தைப் பெற்றுக் கொள்ளலாம் என கூறப்பட்டுள்ளது.

அதுமட்டுமின்றி,  வாகன உரிமம், ஓட்டுநர் உரிமம், சாலிக் மற்றும் RTA அபராதம் செலுத்துதல் தொடர்பான 28 டிஜிட்டல் சேவைகளை RTAவின் இந்த ஸ்மார்ட் கியோஸ்க்குகளில் நீங்கள் அணுகலாம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஸ்மார்ட் கியோஸ்க் வழங்கும் சில சேவைகள்:

  • டிரைவிங் லைசென்ஸை புதுப்பித்தல்
  • வாகனப் பதிவைப் புதுப்பித்தல்
  • RTA பார்க்கிங் அபராதம் செலுத்துவது
  • சாலிக் அபராதம் செலுத்துதல்
  • சாலிக் கணக்கை ரீசார்ஜ் செய்யவும்
  • இழந்த அல்லது சேதமடைந்த ஓட்டுநர் உரிமத்தை மாற்றவும்
  • இழந்த அல்லது சேதமடைந்த வாகனப் பதிவு கார்டை மாற்றவும்.
  • வாகன உரிமையைப் புதுப்பிப்பதற்கு விண்ணப்பிக்கவும்
  • வாகன உரிமைச் சான்றிதழுக்கு விண்ணப்பித்தல்
  • வாகனப் பரிமாற்றச் சான்றிதழ்

நீங்கள் ஸ்மார்ட் கியோஸ்க்குகள் வழங்கும் டிஜிட்டல் சேவையைப் பெற வேண்டுமெனில், எமிரேட்டில் உள்ள வாடிக்கையாளர் மகிழ்ச்சி மையங்கள் மற்றும் வாகன சோதனை மையங்களைப் பார்வையிடலாம். மேலும், இவை 24×7 இயங்கும் என்பதால் வாடிக்கையாளர்கள் எந்த நேரத்திலும் அணுகலாம்.

RTA இணையதளத்தின்படி, 24×7 இயங்கும் ஸ்மார்ட் கியோஸ்க் பின்வரும் ஆறு இடங்களில் நிறுவப்பட்டுள்ளன:

  1. அல் பர்ஷாவில் உள்ள வாடிக்கையாளர் மகிழ்ச்சி மையம்
  2. அல் கிஃபாஃப் வாடிக்கையாளர் மகிழ்ச்சி மையம்
  3. RTA தலைமை அலுவலகம்
  4. உம் ரமூல் வாடிக்கையாளர் மகிழ்ச்சி மையம்
  5. தேராவில் உள்ள வாடிக்கையாளர் மகிழ்ச்சி மையம்
  6. அல் மிஜாரில் அல் முமாயாஸ் வாகன சோதனை மையம்.

மேற்கூறப்பட்ட கியோஸ்க்குகள் தவிர, மற்ற ஸ்மார்ட் கியோஸ்க்களும் துபாயில் உள்ளன. இருப்பினும், அவை சேவை மையங்களுக்குள் அமைந்திருப்பதால், மையங்கள் திறந்திருக்கும் நேரம் மட்டுமே நீங்கள் அணுக முடியும்.

சேவை மையங்களுக்குள் அமைந்துள்ள கியோஸ்க்கள்:

  1. உம் ரமூல் வாடிக்கையாளர் மகிழ்ச்சி மையம்
  2. தேராவில் உள்ள வாடிக்கையாளர் மகிழ்ச்சி மையம்
  3. அல் பர்ஷா வாடிக்கையாளர் மகிழ்ச்சி மையம்
  4. அல் மனாரா வாடிக்கையாளர் மகிழ்ச்சி மையம்
  5. அல் த்வார் வாடிக்கையாளர் மகிழ்ச்சி மையம்
  6. அல் கிஃபாஃப் வாடிக்கையாளர் மகிழ்ச்சி மையம்
  7. தஸ்ஜீல் அல் தவார்
  8. பர்ஷா தஸ்ஜீல்
  9. ஷமில் முஹைஸ்னா
  10. தமாம் வாகன சோதனை
  11. அல் குசைஸ் தஸ்ஜீல்
  12. வாஸல் வாகன சோதனை  – அல் ஜடாஃப்
  13. அல் சத்வா ஆட்டோப்ரோ
  14. எமிரேட்ஸ் டவர்ஸ்
  15. வாஸல் அல் ஜடாஃப்
  16.  தமாம் அல் காந்தி
  17. அல் முதகமேலா – அல் குவ்ஸ்
  18. அல் முதகமேலா – ரஸ் அல் கோர்
  19. வாசல் வாகனங்கள் சோதனை நாட் அல் ஹமர்
  20. RTA தலைமை அலுவலகம்
  21. கார்கள் அல் மிம்சார்
  22. ஷமில் அல் குசைஸ்
  23. தஸ்ஜீல் அல் குவாசிஸ்
  24. அல் முமாயாஸ் வாகன சோதனை மிசார்
  25. அல் முமாயாஸ் அல் பர்ஷா

உடனடி செய்திகளை அறிந்து கொள்ள எங்களின் Khaleej Tamil வாட்ஸ்அப் சேனலில் இணைந்து கொள்ளுங்கள்.
Link: Khaleej Tamil Whatsapp Channel

Related Articles

Back to top button
error: Content is protected !!