அமீரக செய்திகள்

துபாயின் முக்கிய சாலையில் வாகன ஓட்டிகள் செல்ல வேண்டிய அதிகபட்ச வேக வரம்பு என்ன..?? உங்களுக்கான பட்டியல்..!!

அமீரகத்தில் வாகனங்களை ஓட்டும் நபர்கள் போக்குவரத்து விதிகளை முறையாக கடைபிடிக்க வேண்டியது முக்கிய சட்டங்களில் ஒன்றாகும். இதில் விதிமீறுபவர்கள் அபராதம் முதல் வாகனத்தை பறிமுதல் செய்யும் வரையிலான கடுமையான தண்டனைகளை எதிர்கொள்ள நேரிடும். இருப்பினும் பொதுவாக வாகன ஓட்டிகள் செய்யக்கூடிய தவறு குறிப்பிட்ட இடத்தில் செல்ல வேண்டிய வேக வரம்பை விட கூடுதல் வேகத்தில் செல்வதாகும்.

அமீரகத்தில் வாகனம் ஓட்டும் நபர்களில் பெரும்பாலான அபராதங்கள் இந்த விதிமீறலுக்கே விதிக்கப்பட்டிருக்கும். சில சமயங்களில் குறிப்பிட்ட சாலைகளில் வேக வரம்பு தெரியாமலேயே வாகனத்தை ஓட்டி அபராதம் வாங்கும் நபர்களும் உண்டு.

ஆகவே, நீங்கள் வாகனம் ஓட்டுவதில் எவ்வளவு கைதேர்ந்தவராக இருந்தாலும், சாலையின் வேகம் மற்றும் துபாய் காவல்துறையால் வேகமான விதிமீறல்கள் எவ்வாறு பதிவு செய்யப்படுகின்றன என்பதை அறிந்து கொள்வது அவசியம்.

மேலும், துபாய் போலீஸ் இணையதளம் சாலை வேகம் மற்றும் ரேடார் கட்டுப்பாடு என அமீரகத்தில் சாலை வேகங்களின் பட்டியலை இரண்டு பிரிவுகளாக வெளியிட்டுள்ளது. சாலையின் வேகம் என்பது சாலையில் வாகனம் ஓட்டும்போது நீங்கள் காணும் சாலை அடையாளங்களில் நிர்ணயிக்கப்பட்ட வேகவரம்பு குறிப்பிடப்பட்டிருக்கும் மற்றும் ரேடார் கட்டுப்பாடு என்பது அந்த சாலையில் வேகமாகச் செல்லும் அபராதத்திற்காக நீங்கள் பதிவுசெய்த வரம்பு மீறலின் வேகத்தைக் குறிக்கிறது.

இரண்டு வேகங்களுக்கிடையிலான வேறுபாடு பெரும்பாலும் கிரேஸ் வேக வரம்பு என்று குறிப்பிடப்படுகிறது. இது 20 கிமீ ஆக நிர்ணயிக்கப்பட்டிருக்கும். அதாவது துபாயை பொறுத்தவரையில் சாலையில் வேக வரம்பு 80 கிமீ என குறிப்பிட்டிருந்தால் வாகன ஓட்டிகள் 100 கிமீ வரை வாகனத்தை ஓட்டலாம். சில சாலைகளில் இரண்டு வேகம் குறிப்பிடப்பட்டிருக்கலாம் என்பது குறிப்பிடத்தக்கது.

வேக வரம்பை மீறுவதால் விதிக்கப்படும் அபராதங்கள்:

நீங்கள் துபாய் சாலைகளில் வேக வரம்பை விட எவ்வளவு வேகத்தில் ஓட்டிச் சென்றீர்கள் என்பதைப் பொறுத்து உங்களுக்கு விதிக்கப்படும் அபராதத்தின் தொகை மாறுபடும்.

 • அதிகபட்ச வேக வரம்பை மணிக்கு 20 கிமீக்கு மிகாமல் மீறினால் 300 திர்ஹம் அபராதம்.
 • அதிகபட்ச வேக வரம்பை மணிக்கு 30 கிமீக்கு மிகாமல் மீறுபவர்கள் 600 திர்ஹம் அபராதத்தைப் பெறுவார்கள்.
 • அதிகபட்ச வேக வரம்பை மணிக்கு 40 கிமீக்கு மிகாமல் மீறினால் 700 திர்ஹம் அபராதம்
 • அதிகபட்ச வேக வரம்பை மணிக்கு 50 கிமீக்கு மிகாமல் மீறுபவர்கள் 1,000 திர்ஹம் அபராதம் செலுத்த வேண்டும்.
 • அதிகபட்ச வேக வரம்பை மணிக்கு 60 கிமீக்கு மிகாமல் மீறும் போது 1,500 திர்ஹம் அபராதம், 6 பிளாக் பாயின்ட் மற்றும் இலகுரக வாகனங்கள் 15 நாட்களுக்கு பறிமுதல் செய்யப்படும்.
 • அதிகபட்ச வேக வரம்பை மணிக்கு 60 கி.மீக்கு மேல் தாண்டினால் 2,000 திர்ஹம் அபராதம், 12 பிளாக் பாயின்ட் மற்றும் 30 நாட்கள் வாகனங்கள் பறிமுதல் செய்யப்படும்.
 • அதிகபட்ச வேக வரம்பை மணிக்கு 80 கி.மீக்கு மேல் தாண்டிய மீறலுக்கு 3,000 திர்ஹம்ஸ் அபராதம் விதிக்கப்படுவதுடன் 23 பிளாக் பாயிண்ட்கள் சேர்க்கப்பட்டு 60 நாட்கள் வாகனங்கள் பறிமுதல் செய்யப்படும்.

போக்குவரத்து அபராதங்களை எவ்வாறு சரிபார்க்கலாம்

துபாயில் நீங்கள் போக்குவரத்து விதிமீறலைச் செய்திருந்தால், உங்கள் பதிவு செய்யப்பட்ட மொபைல் எண்ணுக்கு துபாய் காவல்துறையிடமிருந்து குறுஞ்செய்தி அறிவிப்பைப் பெறுவீர்கள். அந்தச் செய்தியில் விதிமீறல் செய்யப்பட்ட தேதி, உங்கள் வாகனத்தின் எண் மற்றும் அபராதத் தொகை ஆகியவை குறிப்பிடப்பட்டிருக்கும்.

துபாயில் நிர்ணயிக்கப்பட்டுள்ள சாலை வேகம் மற்றும் ரேடார் கட்டுப்பாட்டு வேகங்களின் பட்டியல் பின்வருமாறு கொடுக்கப்பட்டுள்ளது:

 1. அல் நஹ்தா சாலை: சாலை வேகம் – மணிக்கு 80 கிமீ; ரேடார் கட்டுப்பாடு – மணிக்கு 101 கிமீ
 2. டமாஸ்கஸ் ஸ்ட்ரீட் :சாலை வேகம் – மணிக்கு 80 கிமீ; ரேடார் கட்டுப்பாடு – மணிக்கு 101 கிமீ
 3. அல் குத்ஸ் ஸ்ட்ரீட்: சாலை வேகம் – மணிக்கு 80 கிமீ; ரேடார் கட்டுப்பாடு – மணிக்கு 101 கிமீ
 4. துனிசியா ஸ்ட்ரீட்: சாலை வேகம் – மணிக்கு 80 கிமீ; ரேடார் கட்டுப்பாடு – மணிக்கு 101 கிமீ
 5. ஷேக் கலீஃபா சாலை: சாலை வேகம் – 70 கிமீ / மணி; ரேடார் கட்டுப்பாடு – மணிக்கு 91 கிமீ
 6. அம்மான் ஸ்ட்ரீட்:  சாலை வேகம் – 60 கிமீ / மணி அல்லது 80 கிமீ / மணி; ரேடார் கட்டுப்பாடு – 91 கிமீ / மணி அல்லது 101 கிமீ / மணி
 7. அல் மினா சாலை: சாலை வேகம் – மணிக்கு 80 கிமீ; ரேடார் கட்டுப்பாடு – மணிக்கு 101 கிமீ
 8. பெய்ரூட் ஸ்ட்ரீட்: சாலை வேகம் – மணிக்கு 80 கிமீ; ரேடார் கட்டுப்பாடு – மணிக்கு 101 கிமீ
 9. ஜபீல் செகண்ட் ஸ்ட்ரீட்: சாலை வேகம் – மணிக்கு 80 கிமீ ரேடார் கட்டுப்பாடு – மணிக்கு 101 கிமீ
 10. ஷேக் சயீத் பின் ஹம்தான் அல் நஹ்யான் சாலை: வேகம் – 80 கிமீ / மணி அல்லது 100 கிமீ / மணி; ரேடார் கட்டுப்பாடு – 101km/h அல்லது 121km/h
 11. ஏர்போர்ட் டன்னல்-பெய்ரூட் ஸ்ட்ரீட்: சாலை வேகம் – மணிக்கு 80 கிமீ ; ரேடார் கட்டுப்பாடு – மணிக்கு 101 கிமீ
 12. திரிபோலி ஸ்ட்ரீட் : சாலை வேகம் – 90 கிமீ / மணி அல்லது 100 கிமீ / மணி; ரேடார் கட்டுப்பாடு – 111km/h அல்லது 121km/h
 13. அல் ஜுமேரா சாலை: சாலை வேகம் – 70 கிமீ / மணி; ரேடார் கட்டுப்பாடு – மணிக்கு 91 கிமீ
 14. நாத் அல் ஷபா சாலை: சாலை வேகம் – 70 கிமீ / மணி; ரேடார் கட்டுப்பாடு – மணிக்கு 91 கிமீ
 15. அல் வாஸ்ல் சாலை: சாலை வேகம் – 70 கிமீ / மணி; ரேடார் கட்டுப்பாடு – மணிக்கு 91 கிமீ
 16. பாக்தாத் ஸ்ட்ரீட்: சாலை வேகம் – 70 கிமீ / மணி அல்லது 80 கிமீ / மணி; ரேடார் கட்டுப்பாடு – 91 கிமீ / மணி அல்லது 101 கிமீ / மணி
 17. உம் அல் ஷீஃப் ஸ்ட்ரீட்: சாலை வேகம் – 70 கிமீ / மணி; ரேடார் கட்டுப்பாடு – மணிக்கு 91 கிமீ
 18. அல் மனாரா சாலை: சாலை வேகம் – 70 கிமீ / மணி; ரேடார் கட்டுப்பாடு – மணிக்கு 91 கிமீ
 19. அல் அதர் ஸ்ட்ரீட்: சாலை வேகம் – 70 கிமீ / மணி; ரேடார் கட்டுப்பாடு – மணிக்கு 91 கிமீ
 20. அல் துனாயா தெரு: சாலை வேகம் – 70 கிமீ / மணி; ரேடார் கட்டுப்பாடு – மணிக்கு 91 கிமீ
 21. அல் ஹதீகா ஸ்ட்ரீட்: சாலை வேகம் – 70 கிமீ / மணி; ரேடார் கட்டுப்பாடு – மணிக்கு 91 கிமீ
 22. அல் சீஃப் ஸ்ட்ரீட்: சாலை வேகம் – 70 கிமீ / மணி; ரேடார் கட்டுப்பாடு – மணிக்கு 91 கிமீ
 23. அல் ஒரூபா சாலை: சாலை வேகம் – 70 கிமீ / மணி; ரேடார் கட்டுப்பாடு – மணிக்கு 91 கிமீ
 24. அல் அப்ராஜ் ஸ்ட்ரீட்: சாலை வேகம் – 70 கிமீ / மணி; ரேடார் கட்டுப்பாடு – மணிக்கு 91 கிமீ
 25. மஸ்கட் சாலை: சாலை வேகம் – மணிக்கு 80 கிமீ ; ரேடார் கட்டுப்பாடு – மணிக்கு 101 கிமீ
 26. அல் கைல் சாலை: சாலை வேகம் – மணிக்கு 100 கிமீ; ரேடார் கட்டுப்பாடு – மணிக்கு 121 கிமீ
 27. அல் யாலேஸ் சாலை: சாலை வேகம் – 100 கிமீ / மணி அல்லது 120 கிமீ / மணி; ரேடார் கட்டுப்பாடு – 121km/h அல்லது 141km/h
 28. அல் அவீர் சாலை: சாலை வேகம் – மணிக்கு 100 கிமீ; ரேடார் கட்டுப்பாடு – மணிக்கு 121 கிமீ
 29. எமிரேட்ஸ் சாலை: சாலை வேகம் – மணிக்கு 110 கிமீ; ரேடார் கட்டுப்பாடு – மணிக்கு 131 கிமீ
 30. முகமது பின் சயீத் சாலை: சாலை வேகம் – மணிக்கு 110 கிமீ; ரேடார் கட்டுப்பாடு – மணிக்கு 131 கிமீ
 31. எக்ஸ்போ சாலை: சாலை வேகம் – மணிக்கு 100 கிமீ; ரேடார் கட்டுப்பாடு – மணிக்கு 121 கிமீ
 32. அல் இத்திஹாத் சாலை: சாலை வேகம் – 80 கிமீ / மணி அல்லது 100 கிமீ / மணி; ரேடார் கட்டுப்பாடு – 100km/h அல்லது 121km/h
 33. ராஸ் அல் கோர் சாலை: சாலை வேகம் – மணிக்கு 100 கிமீ; ரேடார் கட்டுப்பாடு – மணிக்கு 121 கிமீ
 34.  ஷேக் சயீத் சாலை: சாலை வேகம் – 100 கிமீ / மணி அல்லது 120 கிமீ / மணி; ரேடார் கட்டுப்பாடு – 121km/h அல்லது 141km/h
 35. அல் ரபாத் ஸ்ட்ரீட்: சாலை வேகம் – மணிக்கு 100 கிமீ; ரேடார் கட்டுப்பாடு – மணிக்கு 121 கிமீ
 36. அல் கவானீஜ் ஸ்ட்ரீட்: சாலை வேகம் – மணிக்கு 100 கிமீ; ரேடார் கட்டுப்பாடு – மணிக்கு 121 கிமீ
 37. அல் அமர்டி ஸ்ட்ரீட்: சாலை வேகம் – 80 கிமீ / மணி அல்லது 90 கிமீ / மணி; ரேடார் கட்டுப்பாடு – 101km/h அல்லது 111km/h
 38. ஷேக் ரஷீத் சாலை: சாலை வேகம் – மணிக்கு 100 கிமீ; ரேடார் கட்டுப்பாடு – மணிக்கு 121 கிமீ
 39. ஹத்தா மெயின் ரோடு: சாலை வேகம் – 80 கிமீ / மணி அல்லது 100 கிமீ / மணி; ரேடார் கட்டுப்பாடு – 101km/h அல்லது 121km/h
 40. அல் கலீஜ் ஸ்ட்ரீட்: சாலை வேகம் – மணிக்கு 80 கிமீ; ரேடார் கட்டுப்பாடு – மணிக்கு 101 கிமீ
 41. ஏர்போர்ட் ரோடு: சாலை வேகம் – மணிக்கு 80 கிமீ; ரேடார் கட்டுப்பாடு – மணிக்கு 101 கிமீ
 42. நாத் அல் ஹமர் சாலை: சாலை வேகம் – மணிக்கு 80 கிமீ; ரேடார் கட்டுப்பாடு – மணிக்கு 101 கிமீ
 43. மன்னர் சல்மான் பின் அப்துல் அஜிஸ் (முன்பு அல் சௌஃபு): சாலை வேகம் – 70 கிமீ / மணி; ரேடார் கட்டுப்பாடு – மணிக்கு 91 கிமீ
 44. அல் சுஃபு 2 சாலை: சாலை வேகம் – 70 கிமீ / மணி; ரேடார் கட்டுப்பாடு – மணிக்கு 91 கிமீ
 45. ஓட் மேத்தா சாலை: சாலை வேகம் – 60 கிமீ / மணி அல்லது 80 கிமீ / மணி; ரேடார் கட்டுப்பாடு – 91 கிமீ / மணி அல்லது 101 கிமீ / மணி
 46. ​​உம்மு ஹுரைர் சாலை: சாலை வேகம் – மணிக்கு 80 கிமீ; ரேடார் கட்டுப்பாடு – மணிக்கு 101 கிமீ
 47. உம் சுகீம் சாலை: சாலை வேகம் – 90 கிமீ / மணி; ரேடார் கட்டுப்பாடு – மணிக்கு 111 கிமீ
 48. அல் மன்கோல் சாலை: சாலை வேகம் – மணிக்கு 80 கிமீ; ரேடார் கட்டுப்பாடு – மணிக்கு 101 கிமீ
 49. அல் மனாமா ஸ்ட்ரீட்: சாலை வேகம் – மணிக்கு 80 கிமீ; ரேடார் கட்டுப்பாடு – மணிக்கு 101 கிமீ
 50. அல் மேதான் ஸ்ட்ரீட்: சாலை வேகம் – 80 கிமீ / மணி அல்லது 100 கிமீ / மணி; ரேடார் கட்டுப்பாடு – 101km/h அல்லது 121km/h
 51. காசாபிளாங்கா ஸ்ட்ரீட்: சாலை வேகம் – 70 கிமீ / மணி; ரேடார் கட்டுப்பாடு – மணிக்கு 91 கிமீ
 52. ஹெஸ்ஸா சாலை: சாலை வேகம் – 80 கிமீ / மணி அல்லது 100 கிமீ / மணி; ரேடார் கட்டுப்பாடு – 101km/h அல்லது 121km/h
 53. அல் மஃப்ராக் சாலை: சாலை வேகம் – 70 கிமீ / மணி; ரேடார் கட்டுப்பாடு – மணிக்கு 91 கிமீ
 54. துபாய் நிதி சாலை: சாலை வேகம் – மணிக்கு 80 கிமீ; ரேடார் கட்டுப்பாடு – மணிக்கு 101 கிமீ
 55. அல் குத்ரா சாலை: சாலை வேகம் – மணிக்கு 100 கிமீ; ரேடார் கட்டுப்பாடு – மணிக்கு 121 கிமீ
 56. அல்ஜீரியா ஸ்ட்ரீட்: சாலை வேகம் – மணிக்கு 80 கிமீ; ரேடார் கட்டுப்பாடு – மணிக்கு 101 கிமீ
 57. துனிசியா ஸ்ட்ரீட்: சாலை வேகம் – மணிக்கு 80 கிமீ; ரேடார் கட்டுப்பாடு – மணிக்கு 101 கிமீ
 58. துபாய்-அல் ஐன் சாலை: சாலை வேகம் – 100 கிமீ / மணி அல்லது 120 கிமீ / மணி; ரேடார் கட்டுப்பாடு – 121km/h அல்லது 141km/h
 59. அல் அசயேல் ஸ்ட்ரீட்: சாலை வேகம் – 70 கிமீ / மணி அல்லது 80 கிமீ / மணி; ரேடார் கட்டுப்பாடு – 91 கிமீ / மணி அல்லது 101 கிமீ / மணி
 60. கர்ன் அல் சப்கா ஸ்ட்ரீட்: சாலை வேகம் – மணிக்கு 80 கிமீ; ரேடார் கட்டுப்பாடு – மணிக்கு 101 கிமீ
 61. ஜுமேரா பாம் சாலை: சாலை வேகம் – 60 கிமீ / மணி; ரேடார் கட்டுப்பாடு – மணிக்கு 91 கிமீ
 62. சீஹ் ஷுஐப் சாலை: சாலை வேகம் – மணிக்கு 80 கிமீ; ரேடார் கட்டுப்பாடு – மணிக்கு 101 கிமீ

இது போன்ற அமீரகத்தின் முக்கிய செய்திகள் மற்றும் அன்றாட தகவல்களை அறிந்து கொள்ள எங்களின் Khaleej Tamil வாட்ஸ்அப் சேனலில் இணைந்து கொள்ளுங்கள்.
Link: Khaleej Tamil Whatsapp Channel

Related Articles

Back to top button
error: Content is protected !!