துபாய் RTA மற்றும் கரீம் பைக் இணைந்து வழங்கும் இலவச சைக்கிள் ரைடு.. குடியிருப்பாளர்கள் பயன்படுத்திக் கொள்ளலாம் என அறிவிப்பு..!!
துபாயில் கடந்த மாத இறுதியில் துவங்கப்பட்டுள்ள இந்த வருடத்திற்கான ஃபிட்னஸ் சேலஞ்சின் ஒரு பகுதியாக நடைபெறும் துபாய் ரைடு எதிர்வரும் நவம்பர் 12ஆம் தேதி நடைபெற உள்ளது. இந்நிலையில், துபாயின் சாலைகள் மற்றும் போக்குவரத்து ஆணையம் (RTA) மற்றும் கரீம் பைக் (Careem Bike) ஆகியவை இணைந்து இந்நிகழ்வில் பங்கேற்க விரும்பும் குடியிருப்பாளர்கள் மற்றும் பார்வையாளர்களுக்கு இலவச சைக்கிள்களை வழங்குவதாக அறிவித்துள்ளது.
மேலும், முதலில் வருபவர்களுக்கு முதலில் வழங்கப்படும் என்பதன் அடிப்படையில் இலவச சைக்கிள்கள் வழங்கப்படுகின்றன. ஆகவே, பங்கேற்பாளர்கள் பின்வரும் கரீம் பைக் டாக்கிங் நிலையங்களில் (careem bike docking station) சைக்கிள்களை சேகரிக்கலாம் என கூறப்பட்டுள்ளது. அவை:
- என்ட்ரன்ஸ் A,
- மியூசியம் ஆஃப் தி ஃபியூச்சர் (MOTF),
- டிரேட் சென்டர் ஸ்ட்ரீட்
- என்ட்ரன்ஸ் E,
- லோயர் FCS,
- ரோடா அல் முரூஜ் பில்டிங் Aக்கு அடுத்துள்ள ஃபைனான்சியல் சென்டர் ரோடு
அத்துடன் பங்கேற்பாளர்கள் துபாய் முழுவதும் உள்ள 192 ஸ்டேஷன்களில் ஏதாவது ஒரு Careem பைக்கை பதிவு செய்து வாடகைக்கு எடுக்கலாம் எனவும் கூறப்பட்டுள்ளது. மேலும் நிகழ்வின் போது 45 நிமிடங்களுக்கு மேல் ரைடு செய்வதற்கான கூடுதல் நேரக் கட்டணமும் தள்ளுபடி செய்யப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்த முயற்சியானது கரீம் உடனான RTAவின் கூட்டாண்மையை வலுப்படுத்துவதுடன் சொந்த சைக்கிள்கள் இல்லாதவர்களும் துபாய் ரைடில் பங்கேற்க வாய்ப்பளிக்கும் என கூறப்பட்டுள்ளது.
எனவே, துபாய் ரைடுக்கான இலவச சைக்கிளைப் பெற விரும்புபவர்கள் கரீம் செயலியைப் பதிவிறக்கி , ‘Bike’ ஐகானைக் கிளிக் செய்து, நவம்பர் 12 அன்று அதிகாலை 2 மணி முதல் காலை 7.30 மணி வரை Dh00.00க்கு அமைக்கப்பட்டுள்ள ‘Dubai Ride Pass’க்கு பதிவு செய்யலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
அனைத்து பங்கேற்பாளர்களும் சைக்கிள்களுக்கு தங்கள் சொந்த ஹெல்மெட்களைக் கொண்டு வர வேண்டும். அத்துடன் பாதுகாப்பு நடவடிக்கையாக அவர்கள் தங்கள் கார்டு விவரங்களை உள்ளிட வேண்டும் ஆனால் சைக்கிளை எடுப்பதற்கு கட்டணம் வசூலிக்கப்படாது.
துபாய் ரைடு வழித்தடங்கள் காலை 6.15 மணி முதல் பொதுமக்களுக்குத் திறந்திருக்கும், ஆகவே, அனைத்து சைக்கிள் ஓட்டுபவர்களும் காலை 6.30 மணிக்கு தங்கள் பயணத்தைத் தொடங்கி, காலை 7.30 மணிக்கு முடிப்பார்கள் என்று கூறப்படுகிறது.
இந்நிகழ்வு குறித்து பொது போக்குவரத்து ஏஜென்சியின் இயக்குனர் திட்டமிடல் மற்றும் வணிக மேம்பாடு மற்றும் RTA இன் விளையாட்டு குழு தலைவர் அடெல் ஷகேரி அவர்கள் கூறுகையில், “துபாய் 30×30 சவாலின் ஒரு பகுதியான துபாய் ரைடு, குடியிருப்பாளர்கள் மற்றும் பார்வையாளர்களிடையே ஆரோக்கியமான வாழ்க்கை முறையை ஊக்குவிக்கிறது. அதேசமயம், சுற்றுலாப் பயணிகளிடையே துபாயை பைக் நட்பு நகரமாக மேம்படுத்துவதும், மேலும் நிலையான போக்குவரத்து முறையைத் தேர்வுசெய்ய குடியிருப்பாளர்களை ஊக்குவிப்பதும் RTA நோக்கமாக உள்ளது” என குறிப்பிட்டுள்ளார்.
இது போன்ற அமீரகத்தின் முக்கிய செய்திகள் மற்றும் அன்றாட தகவல்களை அறிந்து கொள்ள எங்களின் Khaleej Tamil வாட்ஸ்அப் சேனலில் இணைந்து கொள்ளுங்கள்.
Link: Khaleej Tamil Whatsapp Channel