அமீரக செய்திகள்

சீரற்ற வானிலை: இரண்டு எமிரேட்டுகளுக்கு செல்லும் இன்டர்சிட்டி பஸ் சர்வீஸை நிறுத்தியுள்ள துபாய்..!!

ஐக்கிய அரபு அமீரகத்தில் நிலையற்ற வானிலை நிலவி வரும் காரணத்தினால் பேருந்து பயணிகள் நிலையற்ற தங்கள் இடங்களுக்குச் செல்லும் பொது போக்குவரத்து சேவைகளின் நிலையைச் சரிபார்க்க அறிவுறுத்தப்படுகிறார்கள். மோசமான வானிலை காரணமாக துபாயின் சாலைகள் மற்றும் போக்குவரத்து ஆணையம் (RTa) அதன் சில இன்டர்சிட்டி பேருந்து வழித்தடங்களை நிறுத்துவதாக இன்று (வெள்ளிக்கிழமை) அறிவித்துள்ளது.

இது குறித்து வெளியிடப்பட்டுள்ள ஒரு அறிக்கையில், துபாயில் இருந்து ஷார்ஜாவிற்கு இயக்கப்படும் E315 மற்றும் அஜ்மானுக்கு இயக்கப்படும் E411 பொது பேருந்து சேவை மறு அறிவிப்பு வரும் வரை இயக்கப்படாது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இன்று பெய்த மழையால் நாட்டின் சில பகுதிகளில் சாலைகளில் மழைநீர் நிரம்பியதால் போக்குவரத்து ஸ்தம்பித்து காணப்பட்டது. மேலும் கனமழையினால் துபாய் சர்வதேச விமான நிலையத்திற்கு (DXB) வரும் மற்றும் புறப்படும் சுமார் 20 விமானங்கள் ரத்து செய்யப்பட்டு திருப்பிவிடப்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இது போன்ற அமீரகத்தின் முக்கிய செய்திகள் மற்றும் அன்றாட தகவல்களை அறிந்து கொள்ள எங்களின் Khaleej Tamil வாட்ஸ்அப் சேனலில் இணைந்து கொள்ளுங்கள்.
Link: Khaleej Tamil Whatsapp Channel

Related Articles

Back to top button
error: Content is protected !!