துபாய்: வாகனத்தில் வரும் போதே செக்-இன்.. விமானம் நிற்கும் கேட் வரை ரயில் சேவை.. எதிர்காலத்தில் விமான போக்குவரத்து இப்படித்தான் இருக்கும்..!!
துபாய் ஏர்போர்ட்ஸின் CEO பால் கிரிஃபித்ஸ் அவர்கள், விமானப் போக்குவரத்தின் எதிர்காலம் பற்றி வியக்க வைக்கும் பல்வேறு தகவல்களை வெளிப்படுத்தியுள்ளார். துபாய் ஏர்ஷோ 2023 இன் போது பேசிய க்ரிஃபித்ஸ், விமானப் போக்குவரத்துத் துறையின் எதிர்காலம் என்ன என்பதைப் பற்றி ஒரு கற்பனைப் பார்வையை பார்வையாளர்களிடம் பகிர்ந்துள்ளார்.
இது தொடர்பாக அவர் பேசுகையில், வருகின்ற தசாப்தங்களில் தூய்மையான ஆற்றலில் இயங்கும் வகையில் முற்றிலும் நிலையான ரயில்களை உருவாக்க முடியும் என்றும், மிக விரைவாக வெளியில் செக்-இன் செய்ய முடிந்தால், பயணிகள் லக்கேஜை கீழே இறக்கிவிட்டு வசதியாக ரயிலில் அமர்ந்து விமானத்திற்கு அருகில் உள்ள வாயிலுக்கு நேரடியாக செல்லலாம் என்றும் கூறியுள்ளார்.
ஏற்கனவே, துபாய் சர்வதேச விமான நிலையம் செக்-இன் மற்றும் புறப்படும் செயல்முறையில் புரட்சியை ஏற்படுத்தும் வகையில், அதிநவீன AI தொழில்நுட்பங்கள் மூலம், வழக்கமான தொந்தரவுகளை நீக்கி, ஒட்டுமொத்த பயணிகளின் அனுபவத்தை மேம்படுத்தி வருகிறது.
செய்திகளை ஆடியோ/வீடியோ வடிவில் தெரிந்துகொள்ள எங்களின் Youtube சேனலை சப்ஸ்கிரைப் செய்து கொள்ளுங்கள்!
Subscribeஇப்படியான நிலையில், இனி வரும் காலங்களில் பயணிகள் விமான நிலையம் வந்து செக்-இன் செய்ய வேண்டியதில்லை, பிரீமியம் கேபின்களில் பயணம் செய்யும் நபர், வாகனத்தில் வரும் போதே செக்-இன் நடைமுறைகளை முடிக்கலாம் என்றும், ஏர்போர்ட் வந்தவுடன் லக்கேஜை இறக்கிவிட்டு நேரடியாக விமானத்திற்குச் செல்லலாம் என்றும் விவரித்துள்ளார்.
தொடர்ந்து பேசிய கிரிஃபித்ஸ், எதிர்காலத்தில் விமானப் பயணங்களின் திறனை மேம்படுத்த டிராவல் ஏஜென்டுகள் அல்லது மூன்றாம் தரப்பினர் தேவையில்லை என்று கூறியுள்ளார். பயணிகளை நேரடியாக விமான நிறுவனங்களுடன் இணைக்க தொழில்நுட்பத்தைப் பயன்படுத்த வேண்டும் மற்றும் பயண முகவர்கள் தேவையில்லை என்று துபாய் ஏர்போர்ட்ஸ் CEO பால் கிரிஃபித்ஸ் கூறியுள்ளார்.
இது போன்ற அமீரகத்தின் முக்கிய செய்திகள் மற்றும் அன்றாட தகவல்களை அறிந்து கொள்ள எங்களின் Khaleej Tamil வாட்ஸ்அப் சேனலில் இணைந்து கொள்ளுங்கள்.
Link: Khaleej Tamil Whatsapp Channel