அமீரக செய்திகள்

அமீரகத்தில் விதிக்கப்பட்ட அபராதத்திற்கு ஆட்சேபனை தெரிவிப்பது எப்படி? படிப்படியான வழிகாட்டி இங்கே…

ஐக்கிய அரபு அமீரகத்தில் எப்போதாவது உங்கள் மீது விதிக்கப்பட்ட போக்குவரத்து அபராதம் நியாயமற்றது என்று எண்ணியிருக்கிறீர்களா? அமீரகத்தின் போக்குவரத்து மேலாண்மை திறம்பட கையாளப்பட்டாலும், அவ்வப்போது இயந்திரங்கள் அல்லது மனிதர்களினால் ஏற்படும் பிழைகள் நியாயமற்ற அபராதங்களுக்கு வழிவகுக்கும்.

எனவே தான், பொது மக்களுக்கு அனுப்பப்படும் போக்குவரத்து அபராதம் குறித்த SMSஇல் ஆட்சேபனைகளை தெரிவிக்கும் விருப்பமும் குடியிருப்பாளர்களுக்கு வழங்கப்பட்டுள்ளது. இதன் மூலம் அமீரகத்தின் அனைத்து எமிரேட்களிலும் விதிக்கப்பட்ட போக்குவரத்து அபராதங்களை நேரடியாக மறுப்பு தெரிவிக்கலாம்.

அவ்வாறு அமீரக குடியிருப்பாளர் ஒருவருக்கு   ஒவ்வொரு எமிரேட்டிலும் விதிக்கப்பட்ட போக்குவரத்து அபராதத்திற்கு எதிராக எவ்வாறு ஆட்சேபனை தெரிவிப்பது என்பது பற்றிய படிப்படியான வழிகாட்டியை பின்வருமாறு காணலாம். எனினும் உங்கள் மீது தவறு இல்லை என்பதில் நீங்கள் உறுதியாக இருப்பது அவசியமாகும்.

துபாய்:

நீங்கள் துபாயில் காவல்துறையால் போக்குவரத்து அபராதத்தைப் பெற்றிருந்தால், அதனை ஆன்லைனில் ஆட்சேபனை தெரிவிக்க முடியாது, புகாரை நேரில் சமர்ப்பிக்க வேண்டும்.

1. வாகன ஓட்டிகள் அல் பர்ஷாவில் உள்ள போக்குவரத்து பொது இயக்குநரகத்திலும், குடியிருப்பாளர்கள் அருகிலுள்ள துபாய் காவல் நிலையத்திலும் புகார் அளிக்க வேண்டும்.

2. ஓட்டுநர்கள் 971-4-606-3555 என்ற எண்ணில் புகார் தெரிவிக்கலாம் ஆனால் எழுத்துப்பூர்வ புகாரைப் பதிவு செய்ய வேண்டும். மேலும் தகவலுக்கு, தேரா டிராஃபிக்கின் போக்குவரத்துப் பிரிவு – 04/6063555 (எதிர் முனையம் 2) மற்றும் பர்ஷா டிராஃபிக்கின் போக்குவரத்துத் துறை – 04/3111154 ஐ அழைக்கலாம்.

3. புகார் அளிக்க கட்டணம் உள்ளது, நீங்கள் வெற்றி பெற்றால், பணத்தைத் திரும்பப் பெறுவீர்கள். மாறாக தோற்றால், தகராறு கட்டணத்துடன் போக்குவரத்து அபராதத்தையும் செலுத்த வேண்டும்.

4. துபாய் குடியிருப்பாளர்கள் துபாயின் வழக்குரைஞர் இணையதளத்திலும் (www.dxbpp.gov.ae) அபராதம் குறித்த புகாரை பதிவு செய்யலாம்.

இணையதளத்தில் சரியாக புகார் அளிப்பதற்கான நிபந்தனைகள்:

 1. விண்ணப்ப படிவத்தில் தேவையான அனைத்து தரவையும் நிரப்பவும்.
 2. அபராதம், எமிரேட்ஸ் ஐடி, ஓட்டுநர் உரிமம், வாகன உரிமம் போன்ற தேவையான ஆவணங்களின் நகல்களை இணைக்கவும்.

இவ்வாறு சமர்ப்பிக்கப்படும் புகார் மற்றும் அதன் இணைப்புகள் டிராஃபிக் ப்ராசிகியூஷனால் ஆய்வு செய்யப்படும், மேலும், நிராகரிப்பு அல்லது ஏற்பு, கோரிக்கை ஏற்கப்பட்டால், விண்ணப்பதாரர் போக்குவரத்து நீதிமன்றத்தில் ஆஜராக வேண்டும்.

அபுதாபி:

உங்களுக்கு அபுதாபி போக்குவரத்துத் துறையிலிருந்து போக்குவரத்து அபராதம் விதிக்கப்பட்டிருந்தால், நீங்கள் அபுதாபி காவல்துறை இணையதளத்தில் – https://cas.adpolice.gov.ae/ இல் ஆட்சேபனை தெரிவிக்கலாம்.

1. இணையதளத்தில் உள்நுழைந்ததும், ‘Objection to a traffic violation’ என்ற விருப்பத்தைத் தேர்ந்தெடுக்கவும். பின்னர் அதில் பின்வரும் விவரங்களை உள்ளிடவும்:

 • பெயர்
 • மொபைல் எண்,
 • மின்னஞ்சல்,
 • பாலினம்
 • எமிரேட்ஸ் ஐடி
 • புகார்தாரர் வகை
 • அபராத எண்
 • அபராத வகை
 •  ப்ளேட் வகை
 • ப்ளேட் நம்பர்

2. அபுதாபி காவல்துறையில் இருந்து மீண்டும் அழைப்பதற்கு விருப்பமான நேரத்தைத் தேர்ந்தெடுக்கவும்.

3. உங்களுக்கு ஏன் போக்குவரத்து அபராதம் விதிக்கப்பட்டது என்ற விவரங்களை நிரப்பி,  தொடர்புடைய படத்தை இணைக்கவும். படிவம் நிரப்பப்பட்டதும், ‘Submit’ என்பதைக் கிளிக் செய்யவும்.

உங்களது புகார் பொருத்தமானதாகக் கருதப்பட்டால், அபராதம் அபுதாபி காவல்துறையால் ரத்து செய்யப்படும். அல்லது, மேலதிக விசாரணைகளுக்கு அவர்கள் உங்களைத் தொடர்பு கொள்ளலாம்.

ஷார்ஜா:

ஷார்ஜாவில் போக்குவரத்து அபராதம் குறித்து மறுப்பு தெரிவிக்க, வாகன ஓட்டிகள் ஷார்ஜா காவல்துறை போக்குவரத்து துறையை வாட்ஸ்அப் மூலம் 971-6-517-7555 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம்.

 •  ஆப்பிள் மற்றும் ஆண்ட்ராய்டு போன்களில் கிடைக்கும் MOI ஸ்மார்ட்ஃபோன் பயன்பாட்டின் மூலம் ஷார்ஜா போக்குவரத்து அபராதத்தை மறுப்பு தெரிவிக்கலாம்.
 • உங்களின் UAE பாஸ் கணக்கு மூலம் பயன்பாட்டில் உள்நுழைந்து ‘Help’ என்பதைத் தட்டவும், பின்னர் புகார் செய்யவும்
 • நீங்கள் ஏன் போக்குவரத்து அபராதத்திற்கு மறுப்பு தெரிவிக்க வேண்டும் என்ற விவரங்களை உள்ளிட்டு சமர்ப்பிக்கவும். உங்கள் புகார் சரியானதாகக் கருதப்பட்டால், அபராதம் திரும்பப் பெறப்படும்.

அஜ்மான்:

போக்குவரத்து அபராதம் தொடர்பான சர்ச்சைக்கு, அஜ்மான் காவல்துறை இணையதளம் அல்லது ஆப் மூலம் மேல்முறையீடு செய்யலாம்.

 1. UAE Pass கணக்கைப் பயன்படுத்தி உள்நுழையவும்.
 2. போக்குவரத்து சேவையைக் கிளிக் செய்து, பின்னர் போக்குவரத்து அபராதம் மீதான ஆட்சேபனையைத் தட்டவும்.
 3. டிக்கெட் எண் மற்றும் மீறல் வகை உள்ளிட்ட சம்பவ விவரங்களை உள்ளிடவும்.

அடுத்தபடியாக, உங்கள் ஆட்சேபனைக்கான காரணத்தை விளக்கி, தொடர்புடைய படங்களை இணைத்து சமர்ப்பிக்கவும். அஜ்மான் காவல்துறை மேல்முறையீட்டை மதிப்பாய்வு செய்யும், மேலும் உங்கள் நிகழ்வுகளின் பதிப்பு ஏற்றுக்கொள்ளப்பட்டால் அபராதம் திரும்பப் பெறப்படும்.

ராஸ் அல் கைமா, ஃபுஜைரா மற்றும் உம் அல் குவைன்:

 நீங்கள் ராஸ் அல் கைமா, புஜைரா அல்லது உம்முல் குவைனில் அபராதம் பெற்றிருந்தால், ஆப்பிள் மற்றும் ஆண்ட்ராய்டு போன்களில் அணுகக்கூடிய உள்துறை அமைச்சக செயலியில் ஆட்சேபனை தெரிவிக்கலாம்.

 1.  UAE Pass கணக்கு மூலம் உள்நுழையவும்.
 2. உதவி என்பதைக் கிளிக் செய்து பின்னர் புகார் செய்யுங்கள்.
 3. மீறல் விவரங்களை உள்ளிட்டு, அதை ஏன் மாற்ற விரும்புகிறீர்கள் என்பதை விளக்கவும். வழங்கப்பட்ட ஆதாரங்களைப் பொறுத்து, போக்குவரத்து துறை மேல்முறையீட்டை அங்கீகரிக்கலாம் அல்லது நிராகரிக்கலாம்.

இது போன்ற அமீரகத்தின் முக்கிய செய்திகள் மற்றும் அன்றாட தகவல்களை அறிந்து கொள்ள எங்களின் Khaleej Tamil வாட்ஸ்அப் சேனலில் இணைந்து கொள்ளுங்கள்.
Link: Khaleej Tamil Whatsapp Channel

Related Articles

Back to top button
error: Content is protected !!