அமீரக செய்திகள்

துபாய்: டாக்ஸியில் பொருளை மறந்துவிட்டால் என்ன செய்வது..?? தொலைத்த பொருளை மீட்பதற்கான வழிமுறைகள் இங்கே..

உலகின் பல்வேறு நாட்டு மக்களும் விரும்பி சுற்றுலா செல்லக்கூடிய இடங்களில் முதன்மையான இடமாக துபாய் விளங்கி வருகிறது. வானுயர கட்டிடங்களுக்கும் நவீன தொழில்நுட்பத்திற்கும் சுற்றுலாவிற்கும் ஏற்றவாறு சிறந்து விளங்கும் துபாயில் பல நாடுகளைச் சேர்ந்தவர்களும் வசித்து வருகின்றனர். இவ்வாறு குடியிருப்பாளர்கள் மற்றும் சுற்றுலாவாசிகள் தாங்கள் செல்ல வேண்டிய இடத்திற்கு எளிதாகவும் விரைவாகவும் செல்ல சிறந்த போக்குவரத்து சேவையாக டாக்ஸியை பயன்படுத்தி வருகின்றனர்.

துபாயில் பொதுபோக்குவரத்தை பொறுத்தவரை துபாய் மெட்ரோ மற்றும் பேருந்திற்கு அடுத்தபடியாக துபாய் டாக்ஸியையே பலரும் பயன்படுத்துகின்றனர். அவ்வாறு துபாயில் நீங்கள் டாக்ஸியில் செல்லும்போது மறதியின் காரணமாக பர்ஸ், பேக் உள்ளிட்ட பொருட்களை மறந்துவிட்டு செல்வதற்கான வாய்ப்புகள் உள்ளன.

இவ்வாறு டாக்ஸியில் பொருளை தொலைத்த பிறகு அதனை மீட்டெடுக்க டாக்ஸி பயனர்கள் கவலைப்படதேவையில்லை. ஏனெனில் டாக்ஸியில் தொலைத்த பொருட்களை துபாயில் மீட்டெடுப்பது என்பது எளிதான ஒன்றாகும். டாக்ஸியில் நீங்கள் தொலைத்த பொருளை மீட்க என்ன செய்ய வேண்டும் என்ற வழிமுறைகள் பின்வருமாறு கொடுக்கப்பட்டுள்ளது:

1. RTA வாடிக்கையாளர் சேவை

நீங்கள் ஆன்லைனில் முன்பதிவு செய்த ‘Hala’ டாக்ஸியில் உங்கள் பொருளை தொலைத்திருந்தால், RTA கால் சென்டரை 800 9090 என்ற எண்ணில் அழைத்து, உங்கள் பயணத்தின் நேரம் மற்றும் தேதி, பிக்-அப்/டிராப்-ஆஃப் இடம் மற்றும் முன்பதிவு எண் போன்ற பயண விவரங்களை வழங்கலாம்.

ஒருவேளை, நீங்கள் Careem வழியாக டாக்ஸியை முன்பதிவு செய்திருந்தால், நீங்கள் அப்ளிகேஷனின் வாடிக்கையாளர் சேவையைத் தொடர்புகொண்டு புகாரளிக்கலாம்.

2. இ-மெயில் மூலம் புகாரளித்தல்

உங்கள் விலைமதிப்புள்ள பொருளை டாக்ஸியில் தொலைத்துவிட்டீர்கள் என்பதை உணர்ந்த பிறகு, அதை கண்டுபிடிக்க வெறும் தொலைபேசி அழைப்பு மட்டும் போதாது என்று உங்களுக்குத் தோன்றலாம்.

அந்த சமயத்தில், நீங்கள் [email protected] என்ற மின்னஞ்சல் முகவரிக்கு உங்கள் பயண விவரங்களை அனுப்பலாம்.

3. RTA அப்ளிகேஷனில் புகாரளித்தல்

நீங்கள் RTA அப்ளிகேஷனை பயன்படுத்தினால், ​​உங்கள் தொலைந்த பொருளைப் புகாரளிப்பது மற்றும் கண்காணிப்பது எளிது. நீங்கள் இந்த எளிய வழிமுறைகளைப் பின்பற்ற வேண்டும்:

  • மேல் வலது பகுதியில் உள்ள ஐகானைத் தேர்ந்தெடுக்கவும்
  • மெனுவிலிருந்து  “feedback”  என்பதைத் தேர்ந்தெடுக்கவும்
  • அதன்பிறகு, “Lost & Found” என்பதைத் தேர்ந்தெடுக்கவும்
  • நீங்கள் தொலைத்த பொருளைப் பற்றிய விளக்கத்தை அனுப்பவும்
  • இருப்பிடங்கள், பயணத்தின் தேதி மற்றும் நேரம் மற்றும் பயண ரசீது உட்பட உங்கள் பயண விவரங்களை அனுப்பவும்

மேற்கூறிய 5 படிகள் முடிந்ததும், RTA இன் உரையிலிருந்து தொலைத்த பொருளின் நிலையைக் கண்காணிக்கலாம்.

4. RTA நிலையத்தைப் பார்வையிடல்

மேற்கூறிய நான்கு வழிமுறைகளும் உங்கள் பொருளைக் கண்டுபிடிப்பதற்கு போதுமானதாக இல்லை என்று நினைத்தால், நீங்கள் நேரில் புகாரளிக்க, துபாயின் எந்த RTA நிலையத்தையும் பார்வையிடலாம். துபாய் மெட்ரோ மற்றும் பேருந்து நிலையங்களில் ஒரு நியமிக்கப்பட்ட RTA அதிகாரி உள்ளனர். நீங்கள் சம்பவத்தை பொறுப்பான நபரிடம் புகாரளிக்கலாம் மற்றும் அவர்கள் உங்களுக்கு அறிக்கை தாக்கல் செய்ய உதவுவார்கள்.

இது போன்ற அமீரகத்தின் முக்கிய செய்திகள் மற்றும் அன்றாட தகவல்களை அறிந்து கொள்ள எங்களின் Khaleej Tamil வாட்ஸ்அப் சேனலில் இணைந்து கொள்ளுங்கள்.
Link: Khaleej Tamil Whatsapp Channel

Related Articles

Back to top button
error: Content is protected !!