அமீரக சட்டங்கள்

அமீரகத்தில் வேலை தேடும் நபரா நீங்கள்..?? உங்களுக்கான சில டிப்ஸ்…!!

உலகின் மிகவும் போட்டி நிறைந்த வேலைச் சந்தைகளில் துபாய் முதன்மையான இடத்தில் உள்ளது. அதாவது, உலகம் முழுவதிலும் உள்ள மக்கள் வேலை வாய்ப்பிற்காக அமெரிக்காவை விடவும் துபாயில் அதிக அளவிலான விண்ணப்பங்களை விண்ணப்பித்துள்ளதாக சமீபத்திய ஆய்வில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

இப்படி வேலை வாய்ப்பிற்காக அமீரகத்தை நோக்கி படையெடுப்பவர்களில் நீங்களும் ஒருவராக இருந்தால், நாட்டில் உள்ள ஆட்சேர்ப்புச் சந்தையைப் பற்றி தெரிந்து கொள்ள வேண்டும். உங்களுக்காகவே அமீரகத்தில் எப்படி வேலை தேடுவது என்பது முதல் வேலைவாய்ப்பை பெறுவதற்கு என்னென்ன செய்ய வேண்டும் என்பது வரை முழு வழிகாட்டியும் இங்கே கொடுக்கப்பட்டுள்ளது.

அமீரகத்தில் வேலை தேடுவதற்கான வழிகள்:

நீங்கள் வேலை தேடுவதற்கு அமீரகம் வர திட்டமிட்டிருந்தால் பல்வேறு வழிகளில் உங்களுக்கான வேலையை தேடலாம்.

பொதுவாக, வேலைவாய்ப்பு போர்ட்டல் மற்றும் நிறுவனத்தின் இணையதளங்கள் வழியாக வேலை தேடலாம் என்றாலும், நீங்கள் LinkedIn போன்ற ப்ரொஃபஷனல் சோஷியல் நெட்வொர்க் மூலம், ஆட்சேர்ப்பு நிறுவனத்துடன் இணைவது மற்றும் நிறுவனத்தில் உள்ள நிபுணர்களுடன் நேரடித் தொடர்புகளை ஏற்படுத்திக்கொள்வது என பயனுள்ள அணுகுமுறையைப் பெறலாம்.

1.வேலைவாய்ப்பு போர்ட்டல்கள்:

  • Bayt.com
  • Naukrigulf
  • GulfTalent
  • Indeed

2. LinkedIn:

உங்கள் திறன் மற்றும் தகுதிக்கேற்ற வேலைவாய்ப்புகளை வழங்கும் நிறுவனங்கள் மற்றும் முதலாளிகளுடன் நேரடியாக இணைப்பை ஏற்படுத்திக் கொள்வதற்கு LinkedIn ஆப் சிறந்த கருவியாகும். இன்றைய காலகட்டத்தில் நீங்கள் LinkedIn இல் இல்லையென்றால் நீங்கள் சில வேலைவாய்ப்புகளை தவற விடலாம் என்று நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.

3. சமூக ஊடகங்கள்:

வேலை தேடுபவர்கள், ட்விட்டர் மற்றும் பேஸ்புக் போன்ற சமூக வலைதளங்களில் உள்ள அமீரகத்தை தளமாகக் கொண்ட நிறுவனங்கள் மற்றும் வேலை வாரியங்களைப் பின்பற்றுவது மிகவும் பயனுள்ளதாக இருக்கும் என்று கூறப்படுகிறது.

4. வேலைவாய்ப்பு முகாம்:

அமீரகம் மற்றும் சொந்த நாட்டில் அவ்வப்போது நடத்தப்படும் வேலைவாய்ப்பு முகாம்களில் கலந்து கொள்ளுமாறு வேலை தேடுபவர்களுக்கு பரிந்துரைக்கப்படுகிறது.

5. செய்தித்தாள்கள் மற்றும் பத்திரிக்கைகள்:

நீங்கள் அமீரக செய்தித்தாள்கள் மற்றும் பத்திரிகைகளில் விளம்பரம் செய்யப்பட்டுள்ள வேலைவைப்புகளுக்கும் முயற்சி செய்யலாம்.

6. ஃப்ரீலான்சிங் தளங்கள்:

அமீரகத்தை தளமாகக் கொண்ட நிறுவனம் அல்லது முதலாளியிடம் தொலைதூர வேலை வாய்ப்புகளைப் பெற முயற்சிக்கிறீர்கள் என்றால், Upwork மற்றும் Freelancer போன்ற தளங்களைப் பயன்படுத்தலாம்.

குறிப்பிட்ட நிறுவனங்களில் வேலை தேடுதல்:

1. நிறுவனத்தின் இணையதளங்கள்:

அதீரகத்தை தளமாகக் கொண்ட நிறுவனங்களின் இணையதளங்களில் உள்ள ‘career ‘ பக்கங்கள் மூலமாகவும், நீங்கள் பணிபுரிய விரும்பும் நிறுவனங்களுக்கு நேரடியாக விண்ணப்பிக்க முடியும்.

2. ஆட்சேர்ப்பு ஏஜென்சி:

நீங்கள் ஐக்கிய அரபு அமீரகத்தில் வேலை தேடுவதற்கு உதவக்கூடிய பல ஏஜென்சிகள் உள்ளன. எனவே, நீங்கள் அமீரகத்தில் உள்ள சிறப்பு ஆட்சேர்ப்பு நிறுவனங்களை ஆராய்ச்சி செய்து தொடர்பு கொள்ளவும்.

3. நெட்வொர்க்கிங்:

LinkedIn போன்ற தளங்கள் மூலம் அமீரகத்தில் உள்ள நிபுணர்களுடன் தொடர்பை ஏற்படுத்திக் கொள்வது ஒரு வேலையைப் பாதுகாப்பதற்கான சிறந்த வழியாகும்.

4. மொழி மையங்கள் (language centers):

மொழி மையங்கள் மற்றும் கலாச்சார பரிமாற்ற திட்டங்கள் மூலம் அமீரகத்தில் ஆசிரியர் பணிக்கான வாய்ப்புகளை பெறலாம்.

5. கன்சல்டிங் நிறுவனங்கள்

ஐக்கிய அரபு அமீரகத்தில் பல்வேறு வேலைவாய்ப்புகளுக்காக செயல்படும் கன்சல்டிங் நிறுவனங்களுக்கு விண்ணப்பிக்கவும்.

மேற்கூறிய வழிமுறைகள் மற்றும் யுக்திகள் மூலம், நீங்கள் அமீரகத்தில் வேலை தேடலாம்.

உங்கள் திறமைக்கு தேவை உள்ளதா என்பதை எப்படி அறிவது?

ஐக்கிய அரபு அமீரகத்தில் பெரும்பாலும் எந்தெந்த திறன்கள் மற்றும் தகுதிகளுக்கு அதிகத் தேவை உள்ளது என்பதை பல்வேறு வேலை வாய்ப்பு போர்ட்டல்கள் மற்றும் நிறுவன இணையதளங்களின் வேலை பட்டியலை ஆய்வு செய்வதன் மூலம் தெரிந்து கொள்ளலாம்.

கூடுதலாக, வேலை தேடுபவர்கள் UAE அரசாங்கத்தின் அதிகாரப்பூர்வ வலைத்தளமான – u.ae-ஐப் பார்வையிடலாம், ஏனெனில் அந்த தளத்தில் அடிக்கடி தேவைப்படும் திறன்கள் மற்றும் தொழில்கள் பற்றிய அறிக்கைகள் மற்றும் தகவல்களள் வெளியிடப்படுகிறது.

ஒருவழியாக, அமீரகத்தில் உங்கள் தகுதி மற்றும் திறனுக்கு ஏற்ற பொருத்தமான வேலையைத் தேடிக் கண்டுபிடித்தாலும், அந்த வேலையில் உங்களை பணியமர்த்தப்படுவதற்கான வாய்ப்புகளையும் நீங்கள் அதிகரிக்க வேண்டும். இதற்கு உங்களது CV யில் என்னென்ன இருக்க வேண்டும் மற்றும் இருக்கக் கூடாது என்பதை நீங்கள் புரிந்து கொண்டாலே போதுமானது.

ஒரு சிறந்த CV யை உருவாக்குவது எப்படி என்பது பற்றி தெரிந்து கொள்ள கீழே கொடுக்கப்பட்டுள்ள லிங்க்கை கிளிக் செய்யவும்:

அமீரகத்தில் வேலை தேடுபவரா? உங்கள் CVயில் இதெல்லாம் இருந்தாலே போதும்!! AI தேர்ந்தெடுக்கக்கூடிய CV யை உருவாக்குவது எப்படி?

இது போன்ற அமீரகத்தின் முக்கிய செய்திகள் மற்றும் அன்றாட தகவல்களை அறிந்து கொள்ள எங்களின் Khaleej Tamil வாட்ஸ்அப் சேனலில் இணைந்து கொள்ளுங்கள்.
Link: Khaleej Tamil Whatsapp Channel

Related Articles

Back to top button
error: Content is protected !!