அமீரகத்தில் வசிக்கும் இந்தியர்கள் பாஸ்போர்ட்டை புதுப்பிப்பதற்கு தேவையான ஆவணங்கள் என்னென்ன..?? எப்படி புதுப்பிக்கலாம்..??

ஐக்கிய அரபு அமீரகத்தில் கணிசமான எண்ணிக்கையில் வெளிநாட்டவர்கள் வசித்து வருகின்றனர். குறிப்பாக, நாட்டின் மக்கள் தொகையில் 30 சதவீதம் இந்திய வெளிநாட்டவர் சமூகம் வசிப்பதாக அபுதாபியில் உள்ள இந்திய தூதரகம் கூறியுள்ளது.
2021 ஆம் ஆண்டு நிலவரப்படி, சுமார் 3.5 மில்லியன் இந்திய குடிமக்கள் ஐக்கிய அரபு அமீரகத்தில் குடியிருப்பதாக புள்ளி விவரங்களில் குறிப்பிடப்பட்டுள்ளன. நாட்டில் வசிக்கும் மிகப்பெரிய சமூகமும் இதுதான். இவ்வாறு அமீரகத்தில் வசிக்கும் இந்தியர்கள் இங்கு இருந்து கொண்டே பாஸ்போர்ட்டை எப்படி புதுப்பிப்பது, செலவு மற்றும் தேவையான ஆவணங்கள் என்ன என்பது பற்றி பின்வருமாறு பார்க்கலாம்.
தேவையான ஆவணங்கள்:
- பூர்த்தி செய்யப்பட்ட ஆன்லைன் பாஸ்போர்ட் விண்ணப்பப் படிவம் (படிவத்தை http://embassy.passportindia.gov.in இல் காணலாம்)
- 2 சமீபத்திய தெளிவான புகைப்படங்கள் 51 மிமீ x 51 மிமீ (மூன்று மாதங்களுக்கு மேல் இல்லை, சீருடை இல்லை) வெள்ளை பின்னணியில் அடர் நிறத்திலான உடையில் இருக்க வேண்டும். கண்கள் திறந்த நிலையில், காதுகள், நெற்றி மற்றும் கன்னம் முற்றிலும் தெரியும் வகையில் புகைப்படம் இருக்க வேண்டும். முகம் மற்றும் கழுத்தில் நிழல்கள் இல்லாமல் தெளிவாக இருக்க வேண்டும்.
- ஏதேனும் கூடுதல் சிறு புத்தகங்களுடன் தற்போதைய அசல் பாஸ்போர்ட்டை வழங்க வேண்டும்.
- பாஸ்போர்ட்டின் முதல், கடைசி மற்றும் முகவரிப் பக்கத்தின் தெளிவான நகல்கள். வேறு ஏதேனும் ஒப்புதல் பக்கங்கள், செல்லுபடியாகும் UAE விசா பக்கம் மற்றும் கூடுதல் சிறு புத்தகங்கள் (ஏதேனும் இருந்தால்)
- விண்ணப்ப படிவத்தில் உள்ள அனைத்து கையொப்பங்களும் கருப்பு மையில் இருக்க வேண்டும் மற்றும் BLS சர்வதேச சேவைகள் வாடிக்கையாளர் சேவை அதிகாரி முன்னிலையில் கையொப்பமிடப்பட வேண்டும்.
- அனைத்து விண்ணப்பதாரர்களும் அடையாளத்திற்காக விண்ணப்பத்தை நேரில் சமர்ப்பிக்க வேண்டும் (சிறுவர்கள் மற்றும் புதிதாகப் பிறந்த குழந்தைகள் உட்பட)
கட்டணம்
- பெரியவர்களுக்கு (36 பக்கங்கள்) – 285 திர்ஹம்
- பெரியவர்களுக்கு (60 பக்கங்கள் ஜம்போ கையேடு) – 380 திர்ஹம்
- தட்கல் சேவைக்கு (36 பக்கங்கள்) – 855 திர்ஹம்
- தட்கல் சேவைக்கு (60 பக்கங்கள் ஜம்போ கையேடு) – 950 திர்ஹம்
- சேவைகள் கட்டணம் – 9 திர்ஹம்
- இந்திய சமூக நல நிதி – 8 திர்ஹம்
தட்கல் சேவைகள் (அவசரநிலை)
ஏதேனும் அவசரநிலை ஏற்படும் போது, விண்ணப்பதாரர் தூதரகத்திற்குச் சென்று, ‘தட்கல் திட்டத்தின்’ கீழ் கூடுதல் கட்டணத்தைச் செலுத்தி, அதே நாளில் தனது பாஸ்போர்ட்டை பெற்றுக்கொள்ளலாம்.
இது போன்ற அமீரகத்தின் முக்கிய செய்திகள் மற்றும் அன்றாட தகவல்களை அறிந்து கொள்ள எங்களின் Khaleej Tamil வாட்ஸ்அப் சேனலில் இணைந்து கொள்ளுங்கள்.
Link: Khaleej Tamil Whatsapp Channel