அமீரக சட்டங்கள்

பயணிகளுக்கு இலவச பார்க்கிங்கை வழங்கும் துபாய் மெட்ரோ நிலையங்கள்..!! பின்பற்ற வேண்டிய வழிமுறைகள் என்ன..??

துபாயின் சாலைகள் மற்றும் போக்குவரத்து ஆணையத்தால் (RTA) அறிமுகப்படுத்தப்பட்ட  ‘பார்க் அண்ட் ரைடு’ சேவையானது, பயணிகள் தங்கள் வாகனங்களை மெட்ரோ நிலையத்தில் இலவசமாக பார்க்கிங் செய்து விட்டு, துபாய் மெட்ரோவைப் பயன்படுத்த அனுமதிக்கிறது.

துபாயில் உள்ள மூன்று மெட்ரோ நிலையங்கள் பயணிகளுக்கு இலவச பார்க்கிங் சேவையை வழங்குகிறது. அவை

  1. ரெட் லைனில் இயங்கும் அல் ரஷிதியாவில் உள்ள சென்டர்பாயின்ட் மெட்ரோ நிலையம்.
  2. UAE எக்ஸ்சேஞ்ச் மற்றும் எக்ஸ்போ 2020 ரூட்ஸ் இடையே ரெட் லைனில் இண்டர்சேஞ் ஸ்டேஷனாக இருக்கும் ஜபெல் அலி மெட்ரோ நிலையம்.
  3. அல் குசைஸ் கிரீன் லைனில் உள்ள Etisalat bye&.

மேற்கூறிய ஒவ்வொரு மெட்ரோ நிலையத்திலும் மல்டி லெவல் பார்க்கிங் வசதியுடன் ஆயிரக்கணக்கான பார்க்கிங் இடங்கள் மற்றும் பார்க்கிங் பகுதியை நேரடியாக மெட்ரோ நிலையத்துடன் இணைக்கும் பாதசாரி நடைபாலங்களும் உள்ளன. இந்த இலவச பார்க்கிங்கை எப்படி அணுகுவது என்பதை குறித்து கீழே பார்க்கலாம்.

  • நீங்கள் பார்க்கிங் நுழைவாயிலில் உள்ள மெஷினில் உங்கள் நோல் கார்டை ஸ்கேன் செய்ய வேண்டும்.
  • பின்னர், அதே நோல் கார்டை துபாய் மெட்ரோவில் பயன்படுத்தவும்.
  • உங்கள் பயணத்தை முடித்து திரும்பி வரும்போது, பார்க்கிங் எக்ஸிட் கேட்டில் நோல் கார்டை ஸ்கேன் செய்து விட்டு வெளியேறலாம்.

நோல் கார்டு இல்லாதவர்கள் இலவச பார்க்கிங்கை பயன்படுத்த முடியுமா?

RTAவின் கூற்றுப்படி, நோல் கார்டு இல்லாதவர்கள் நுழைவு வாயிலில் ரெட் நோல் டிக்கெட்டை வாங்கலாம் மற்றும் துபாய் மெட்ரோவில் பயணிக்க அதே டிக்கெட்டைப் பயன்படுத்தலாம். நோல் கார்டைப் போலவே, நீங்கள் திரும்பும் போது, பார்க்கிங் பகுதியில் உள்ள இயந்திரத்தில் உங்கள் சிவப்பு நோல் டிக்கெட்டை ஸ்வைப் செய்து விட்டு வெளியேறலாம்.

RTA வழங்கும் இந்த சேவை பயணிகளுக்கு மிகவும் பயனுள்ளதாக இருந்தாலும், நீங்கள் எப்போதும் நினைவில் வைக்க வேண்டிய நிபந்தனைகள் மற்றும் அபராதங்கள் சில உள்ளன. அதாவது, 24 மணி நேரத்திற்கு மேல் உங்கள் காரை நிறுத்தினால் ஒரு நாளைக்கு 100 திர்ஹம் வீதம் 1,000 திர்ஹம்ஸ் வரை அபராதம் விதிக்கப்படும் என கூறப்பட்டுள்ளது.

அதேபோல், உங்கள் நோல் கார்டையோ அல்லது டிக்கெட்டையோ தொலைத்து விட்டால் 152 திர்ஹம்ஸ் அபராதம் செலுத்த நேரிடும் மற்றும் 48 மணி நேரத்திற்கு பின்னர், வாகனம் பறிமுதல் செய்யப்படும்.

இலவச பார்க்கிங்கை அணுகுவதற்கான விதிகள்:

  • நீங்கள் பார்க்கிங் இடத்திற்குள் நுழைந்து, பின்னர் பத்து நிமிடத்திற்குள் வெளியேறி விட்டால் எந்த வித கட்டணமும் செலுத்தத் தேவையில்லை.
  • மேலும், துபாய் மெட்ரோவில் உங்கள் நோல் கார்டை கடைசியாகப் பயன்படுத்திய 60 நிமிடத்திற்குள் நீங்கள் கார் பார்க்கிங்கிலிருந்து வெளியேற வேண்டும், இல்லையெனில் பார்க்கிங் கட்டணம் விதிக்கப்படும்.

வழக்கமான பார்க்கிங் கட்டணம்:

பொதுப் போக்குவரத்தைப் பயன்படுத்தாத பயனர்கள் ஒரு மணி நேரத்திற்கு 10 திர்ஹம்ஸும், நாளொன்றுக்கு அதிகபட்சம் 50 திர்ஹம்ஸும் பார்க்கிங் கட்டணமாக செலுத்த வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது.

இது போன்ற அமீரகத்தின் முக்கிய செய்திகள் மற்றும் அன்றாட தகவல்களை அறிந்து கொள்ள எங்களின் Khaleej Tamil வாட்ஸ்அப் சேனலில் இணைந்து கொள்ளுங்கள்.
Link: Khaleej Tamil Whatsapp Channel

Related Articles

Back to top button
error: Content is protected !!