அமீரக சட்டங்கள்

அமீரகத்தில் உங்கள் மொபைல் எண்ணை விர்ச்சுவல் eSIMக்கு மாற்றுவது எப்படி?? முழு விபரம் இங்கே….

ஐக்கிய அரபு அமீரகத்தின் முன்னணி தொலைத்தொடர்பு வழங்குநர்களான etisalat by e& மற்றும் du அதன் வாடிக்கையாளர்களுக்கு eSIM விருப்பத்தை இலவசமாக வழங்குகிறது. எனவே, நீங்கள் வழக்கமான சிம் கார்டுகளைப் பதிலாக, உங்கள் ஸ்மார்ட்போனில் நேரடியாக விர்ச்சுவல் eSIM ஆக இலவசமாக மாற்றலாம்.

eSIM க்கு மாறுவதன் நன்மைகள்:

 • விர்ச்சுவல் முறையிலான இ-சிம்கள், வழக்கமான நேரடி சிம் கார்டின் தேவையை நீக்குகிறது. ஆகவே, மொபைலில் உள்ள சிறிய தட்டுக்களில் சிம் கார்டை செருகுவதற்கு தடுமாறவோ அல்லது உங்கள் சிம் தொலைந்து போவதைப் பற்றி கவலைப்படவோ தேவையில்லை.
 • பல தொலைபேசி எண்கள்: ஒரு சாதனத்தில் பல எண்களை நீங்கள் நிர்வகிக்கலாம்.
 • அதிக நெகிழ்வுத்தன்மை: புதிய சிம் தேவையில்லாமல் வெவ்வேறு மொபைல் திட்டங்கள் அல்லது கேரியர்களுக்கு இடையே எளிதாக மாறலாம். இரட்டை சிம் பயன்படுத்துபவர்கள் அல்லது பயணிகளுக்கு ஏற்றது.
 • சுற்றுச்சூழலுக்கு ஏற்றது: eSim க்கு மாறுவது பிளாஸ்டிக் கழிவுகளை குறைக்கிறது.

எப்படி eSIMக்கு மாறுவது?

1. இணக்கத்தன்மையை சரிபார்க்கவும்:

முதலில் உங்கள் மொபைல் ஃபோன் eSIM தொழில்நுட்பத்தை ஆதரிக்கிறதா என்பதை உறுதிப்படுத்தவும். இதில் மிகச் சமீபத்திய ஐஃபோன்கள், தேர்ந்தெடுக்கப்பட்ட ஆண்ட்ராய்டு மாடல்கள் மற்றும் ஸ்மார்ட்வாட்ச்கள் போன்ற பிற சாதனங்களும் அடங்கும். மேலும், நெட்வொர்க் அல்லது செல்லுலார் அமைப்புகளின் கீழ் உங்கள் ஸ்மார்ட்போன் eSims ஐ ஆதரிக்கிறதா என்பதையும் நீங்கள் பொதுவாகக் கண்டறியலாம்.

2. உங்கள் டெலிகாம் வழங்குநரின் செயலியை பதிவிறக்கவும்:

a. etisalat by e& பயனர்கள்: நீங்கள் எந்தவொரு கடை அல்லது வாடிக்கையாளர் மையத்திற்கும் செல்லாமல் உங்கள் UAE PASS கணக்கைப் பயன்படுத்தி ‘My Etisalat’ செயலி மூலம் eSIMக்கு மாறலாம்.

 • UAE PASS கணக்கை உருவாக்கியதும், நீங்கள் eSIM ஐப் பெற விரும்பும் ஃபோனைப் பயன்படுத்தி, UAE PASS கணக்குடன் My Etisalat UAE பயன்பாட்டில் உள்நுழையவும்.
 • பயன்பாட்டின் முகப்புப் பக்கத்தில் ‘Manage’ என்பதைத் தட்டவும்.
 •  ‘SIM Cards’  என்பதன் கீழ் நீங்கள் மாற்ற விரும்பும் சிம்மைத் தேர்ந்தெடுக்கவும்.
 • பின்னர், ‘Replace SIM/Switch to eSIM’ விருப்பத்தைத் தேர்ந்தெடுக்கவும்.
 • அடுத்தபடியாக, ‘I want to switch to eSIM’ என்பதைத் தேர்ந்தெடுத்து, ‘Continue’ என்பதைத் தட்டவும்
 • அதைத் தொடர்ந்து, ‘Continue with UAE Pass’ என்பதைக் கிளிக் செய்து, உங்கள் எமிரேட்ஸ் ஐடியை அணுக பயன்பாட்டை அனுமதிக்கவும்.
 • இறுதியாக, விதிமுறைகள் மற்றும் நிபந்தனைகளை ஏற்றுக்கொண்டு, ‘Confirm’ என்பதைத் தட்டினால், சில நிமிடங்களுக்குப் பிறகு கோரிக்கை அங்கீகரிக்கப்படும்.

b. du பயனர்கள்: du இணையதளத்தின் படி, உங்கள் நேரடி சிம் கார்டை eSim ஆக மாற்றுவதற்கான படிகள் இங்கே:

 • du ​​பயன்பாட்டைத் திறந்து, உங்கள் தற்போதைய திட்டத்திற்கு அடுத்துள்ள மூன்று புள்ளிகளைத் தட்டவும்.
 • கொடுக்கப்பட்டுள்ள விருப்பங்களிலிருந்து ‘Manage SIM’ என்பதைத் தேர்ந்தெடுக்கவும்.
 • அதன் பிறகு, eSIM ஆக மாற்ற வேண்டிய எண்ணைத் தேர்ந்தெடுக்கவும்.
 • உங்கள் UAE பாஸைப் பயன்படுத்தி உங்கள் அடையாளத்தை அங்கீகரிக்கவும்.
 • UAE Pass பயன்பாட்டின் மூலம் உங்கள் Emirates ஐடியை அணுக பயன்பாட்டை அனுமதிக்கவும்.
 • விதிமுறைகள் மற்றும் நிபந்தனைகளை ஏற்றுக்கொண்டு, ‘Convert to eSIM’ என்பதைத் தட்டவும், உங்கள் கோரிக்கை உறுதிசெய்யப்பட்டதும் eSIM அதிகாரப்பூர்வமாக நிறுவப்படும்.
 • அதையடுத்து, உங்கள் மொபைலின் அமைப்புகளில் சென்று  eSIMஐ ஆக்டிவேட் செய்ய வேண்டும். du மற்றும் etisalat by e& வாடிக்கையாளர்களுக்கு இலவச eSIM செயல்படுத்தலுக்கான சலுகை ஒரு குறிப்பிட்ட காலத்திற்கு மட்டுமே கிடைக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.

c. விர்ஜின் மொபைல்: விர்ஜின் மொபைல் இணையதளத்தின்படி, ‘eSIM ஐ செயல்படுத்த கூடுதல் கட்டணம் இல்லை’. உங்களிடம் உள்ள மொபைலின் வகையைப் பொறுத்து, eSim க்கு மாறுவதற்கான செயல்முறை மாறுபடும்.

 • iOS பயனர்கள்: eSIM சேவையை ‘Virgin Mobile UAE’ ஆப்ஸில் செயல்படுத்தவும்.
 • Android பயனர்கள்: உதவிக்கு விர்ஜின் மொபைல் ஸ்டோரைப் பார்வையிடவும்.

3. eSIMஐ ஆக்டிவேட் செய்வது எப்படி? 

உங்கள் மொபைல் சேவை வழங்குநர் eSIM க்கான கோரிக்கையை அங்கீகரித்தவுடன், ஆக்டிவேட் செய்ய சில நிமிடங்கள் மட்டுமே ஆகும், உங்கள் மொபைலில் eSIMஐ எவ்வாறு கட்டமைப்பது என்பது குறித்த வழிமுறைகள் உங்களுக்கு வழங்கப்படும்.

இது போன்ற அமீரகத்தின் முக்கிய செய்திகள் மற்றும் அன்றாட தகவல்களை அறிந்து கொள்ள எங்களின் Khaleej Tamil வாட்ஸ்அப் சேனலில் இணைந்து கொள்ளுங்கள்.
Link: Khaleej Tamil Whatsapp Channel

Related Articles

Back to top button
error: Content is protected !!