அமீரக செய்திகள்

துபாய்: RTA பதிவில் உள்ள உங்கள் மொபைல் எண்ணை மாற்ற வேண்டுமா..?? எளிதான முறையில் உங்கள் விபரங்களை புதுப்பிப்பது எப்படி…??

நீங்கள் துபாயில் வசிப்பவராக இருந்தால், உங்கள் மொபைல் எண் சாலைகள் மற்றும் போக்குவரத்து ஆணையத்தில் (RTA) உள்ள பதிவுகளில் புதுப்பிக்கப்படுவதை உறுதிசெய்வது முக்கியம்.

ஏனெனில், துபாயில் உங்கள் கார் ரிஜிஸ்டரேஷன் அல்லது ஓட்டுநர் உரிமம் காலாவதியாகும் போது, ​​நீங்கள் ஒரு SMS மூலம் RTA-விடமிருந்து ஒரு செய்தியை பெறுவீர்கள். அதேபோல், உங்களிடம் பார்க்கிங் டிக்கெட் இருந்தால், உங்கள் மொபைலில் SMS மூலம் எச்சரிக்கையைப் பெறுவீர்கள். உங்கள் பதிவுகளை ஆன்லைனிலேயே எப்படி புதுப்பிப்பது என்பதைப் பின்வருமாறு பார்க்கலாம்:

RTAவில் விபரங்களை புதுப்பித்தல்:

நீங்கள் ஆன்லைனில் http://www.rta.ae என்ற இணையதளத்தின் மூலம், மொபைல் எண் போன்ற உங்கள் தனிப்பட்ட பதிவுகளை RTA உடன் புதுப்பிக்கலாம்.

உங்களிடம் RTA உடன் ஏற்கனவே ஆன்லைன் கணக்கு இல்லையென்றால், உங்கள் UAE PASS-ஐ பயன்படுத்தி உள்நுழையலாம் அல்லது கீழே கொடுக்கப்பட்டுள்ள படிகளைப் பின்பற்றி RTA கணக்கை உருவாக்கலாம்:

  1. RTAவின் அதிகாரப்பூர்வ இணையதளம்- http://rta.ae ஐப் பார்வையிடவும்.
  2. இணையதளத்தில்  ‘login’ என்பதைக் கிளிக் செய்து, ‘Create an account’ என்பதைக் கிளிக் செய்யவும்.
  3. பின்னர்  ‘register as individual user’ என்பதைக் கிளிக் செய்து, ஒரு பயனர் பெயரையும் உங்கள் முழுப் பெயரையும் தேசியத்தையும் உள்ளிடவும்.
  4. அடுத்து உங்கள் மொபைல் எண் மற்றும் மின்னஞ்சல் முகவரியை உள்ளிட்டு ‘Proceed’ என்பதைக் கிளிக் செய்யவும்.

அடுத்த பக்கத்தில் நீங்கள் தேர்ந்தெடுக்கும் தேர்வைப் பொறுத்து, OTPயை SMS அல்லது மின்னஞ்சலாகப் பெறுவீர்கள். நீங்கள் ஒரு பயனராகப் பதிவு செய்தவுடன், உங்கள் கணக்கு விவரங்களில் தேவையான மாற்றங்களைச் செய்ய முடியும்.

மேற்கூறிய படிகளைப் பின்பற்றி RTA இணையதளத்தில் உள்நுழைந்ததும், இந்தப் படிகளைப் பின்பற்றவும்:

  1. உங்கள் டாஷ்போர்டில், இடதுபுறத்தில் உள்ள மெனுவில் ‘Manage my account’  விருப்பத்தைத் தேர்ந்தெடுக்கவும்.
  2. அடுத்து, ‘edit profile’ என்பதைக் கிளிக் செய்யவும்.
  3. இப்போது, உங்கள் மொபைல் எண் மற்றும் மின்னஞ்சல் முகவரி உட்பட RTA இல் பதிவுசெய்யப்பட்ட அனைத்து விவரங்களும் திரையில் தோன்றும்.
  4. அதில் உங்களுக்குத் தேவையான மாற்றங்களைச் செய்து, ‘I am not a robot’ என்பதை தேர்வுசெய்து,  ‘Continue’ என்பதைக் கிளிக் செய்யவும். பதிவுசெய்யப்பட்ட எண் RTAயின் பதிவுகளில் புதுப்பிக்கப்படும்.

RTA உதவி எண்ணை அழைத்தல்

நீங்கள் RTA பதிவுகளில் உங்கள் மொபைல் எண்ணைப் புதுப்பிக்க மற்றொரு வழி 800 9090 என்ற RTA கால் சென்டரை அழைப்பதாகும்.  நீங்கள் முதலில் ஒரு IVR (ஊடாடும் குரல் பதில்) அமைப்பை சந்திப்பீர்கள், அங்கு உங்கள் தேவையை “மொபைல் எண்ணைப் புதுப்பிக்கவும்” எனக் குறிப்பிடலாம்.

அடுத்ததாக, எண்ணை மாற்றும் செயல்முறையில் உங்களுக்கு உதவக்கூடிய வாடிக்கையாளர் சேவை நிர்வாகியுடன் நீங்கள் இணைக்கப்படுவீர்கள். அவர்கள் முதலில் உங்கள் உரிம எண் அல்லது வாகனத்தின் பிளேட் நம்பர் போன்ற சில சரிபார்ப்புக் கேள்விகளைக் கேட்பார்கள்.

மேலும் நீங்கள் கணினியில் புதுப்பிக்க விரும்பும் தொலைபேசி எண்ணை அவர்களுக்கு வழங்கியவுடன், உங்களின் புதிய பதிவு எண்ணில் OTPயைப் பெறுவீர்கள். நீங்கள் OTP ஐ வழங்கியவுடன், RTA அமைப்பில் எண் வெற்றிகரமாக புதுப்பிக்கப்படும்.

இது போன்ற அமீரகத்தின் முக்கிய செய்திகள் மற்றும் அன்றாட தகவல்களை அறிந்து கொள்ள எங்களின் Khaleej Tamil வாட்ஸ்அப் சேனலில் இணைந்து கொள்ளுங்கள்.
Link: Khaleej Tamil Whatsapp Channel

Related Articles

Back to top button
error: Content is protected !!