அமீரக செய்திகள்

பெயர் மாற்றம் செய்யப்படவுள்ள அபுதாபியின் புதிய ஏர்போர்ட்.. இனி இதுதான் புதிய பெயர்.. அமீரக அதிபர் உத்தரவு..!!

அபுதாபியில் பல ஆண்டுகளாக கட்டப்பட்டு வந்த அபுதாபியின் புதிய சர்வதேச விமான நிலையம் இன்று நவம்பர் 1 முதல் அதிகாரப்பூர்வமாக பொதுமக்கள் பயன்பாட்டிற்கு திறக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், இந்த விமான நிலையத்திற்கு புதிய பெயர் சூட்டுமாறு அமீரகத்தின் அதிபர் மாண்புமிகு ஷேக் முகமது பின் சயீத் அல் நஹ்யான் அவர்கள் நேற்று அக்டோபர் 31, செவ்வாய்கிழமை ஆணையிட்டுள்ளார்.

புதிய அபுதாபி சர்வதேச விமான நிலைய முனையம் A (Terminal A) கட்டுமான கட்டத்தில் இருந்த போது இதற்கு முன்பாக மிட்ஃபீல்ட் டெர்மினல் (Midfield Terminal) என்று அழைக்கப்பட்டு வந்தது. ஆனால் இப்போது மூன்றாவது முறையாக அபுதாபி விமான நிலையத்தின் பெயர் மீண்டும் மாற்றம் செய்யப்படவுள்ளது.

அமீரக அதிபர் வெளியிட்டுள்ள உத்தரவின்படி, இன்று முதல் பயன்பாட்டிற்கு வந்துள்ள அபுதாபி சர்வதேச விமான நிலையம் கூடிய விரைவில் சையத் சர்வதேச விமான நிலையம் (Zayed International Airport) என்ற புதிய அதிகாரப்பூர்வ பெயருடன் நடைமுறைக்கு வரவிருப்பதாக அதிகாரப்பூர்வ செய்தி வெளியிடப்பட்டுள்ளது.

மேலும் இந்த அதிகாரப்பூர்வ பெயரானது, பிப்ரவரி 9, 2024 அன்று புதிய டெர்மினல் A இன் அதிகாரப்பூர்வ திறப்பு விழாவுடன் அமலுக்கு வரும் என்றும் அபுதாபி ஊடக அலுவலகம் அறிவித்துள்ளது. சுமார் 742,000 சதுர மீட்டர் பரப்பளவு கொண்ட அபுதாபியின் இந்த புதிய ஏர்போர்ட்டை அபுதாபியின் பட்டத்து இளவரசரும், அபுதாபி நிர்வாக சபையின் தலைவருமான ஷேக் காலித் பின் முகமது பின் சயீத் அல் நஹ்யான் அவர்கள் நேற்று செவ்வாய்கிழமை பார்வையிட்டுள்ளார்.

அபுதாபியில் பயணிகளின் போக்குவரத்தை கணிசமாக அதிகரிப்பதுடன் உலகளாவிய விமானப் போக்குவரத்து மையமாக எமிரேட்டின் நிலையை இந்த புதிய விமான நிலையம் உயர்த்தும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. எவ்வாறாயினும், நவம்பர் 14 முதலே 28 விமான நிறுவனங்கள் இந்த புதிய டெர்மினல் A இலிருந்து முழுமையாக செயல்படும் என்பது குறிப்பிடத்தக்கது.

அவ்வாறு செயல்படும்போது, 35,000 சதுர பரப்பளவில் 163 கடைகள் மற்றும் உணவு மற்றும் குளிர்பான விற்பனை நிலையங்களை இந்த புதிய ஏர்போர்ட் கொண்டிருக்கும் என்றும் கூறப்பட்டுள்ளது. இதன் மூலம், விமான பயணிகள் பல்வேறு ஷாப்பிங் மற்றும் டைனிங் வாய்ப்புகளை புதிய விமான திலையத்தில் அனுபவிக்கலாம் எனவும் அபுதாபி ஏர்போர்ட் அதிகாரிகள் கூறியுள்ளனர்.

இது போன்ற அமீரகத்தின் முக்கிய செய்திகள் மற்றும் அன்றாட தகவல்களை அறிந்து கொள்ள எங்களின் Khaleej Tamil வாட்ஸ்அப் சேனலில் இணைந்து கொள்ளுங்கள்.
Link: Khaleej Tamil Whatsapp Channel

Related Articles

Back to top button
error: Content is protected !!