அமீரக செய்திகள்

அமீரகத்தில் குறைக்கப்பட்டுள்ள பெட்ரோல், டீசல் விலை..!! டிசம்பர் மாத விலைப்பட்டியல் வெளியீடு..!!

ஐக்கிய அரபு அமீரகத்தின் எரிபொருள் விலை நிர்ணயிக்கும் குழுவானது 2023ம் ஆண்டின் டிசம்பர் மாதத்திற்கான பெட்ரோல் மற்றும் டீசல் விலையை அறிவித்துள்ளது. கடந்த சில மாதங்களாக எரிபொருள் விலையானது முன்னர் இருந்த விலையை விட தொடர்ந்து உயர்த்தப்பட்டு வந்த நிலையில் நவம்பர் மாத எரிபொருள் விலையானது சற்று குறைக்கப்பட்டிருந்தது. அதனைத் தொடர்ந்து தற்பொழுது டிசம்பர் மாதத்திலும் எரிபொருள் விலையானது குறைக்கப்பட்டுள்ளது.

எரிபொருள் குழுவின் டிசம்பர் மாத விலைப்பட்டியலின் படி, டிசம்பர் 1 ஆம் தேதி முதல், Super 98 வகை பெட்ரோல் விலையானது ஒரு லிட்டருக்கு 2.96 திர்ஹம்சாக குறைக்கப்பட்டுள்ளது. இந்த வகை பெட்ரோலின் விலை நவம்பர் மாதத்தில் 3.03 திர்ஹம்சாக இருந்தது.

அடுத்ததாக ஸ்பெஷல் 95 வகையை சார்ந்த பெட்ரோல் விலையானது ஒரு லிட்டருக்கு 2.85 திர்ஹம்சாக குறைக்கப்பட்டுள்ளது. இந்த வகை பெட்ரோலின் விலை நவம்பர் மாதம் 2.92 திர்ஹம்சாக இருந்தது.

மூன்றாவது வகை பெட்ரோலான இ-பிளஸ் 91 பெட்ரோல் விலையானது தற்போது ஒரு லிட்டருக்கு 2.77 திர்ஹம்ஸாக குறைக்கப்பட்டுள்ளது. இது 2.85 திர்ஹம்சாக நவம்பர் மாதத்தில் இருந்தது.

அதே சமயம் நவம்பர் மாதத்தில் ஒரு லிட்டருக்கு 3.42 திர்ஹம்சாக இருந்து வந்த டீசல் விலையானது டிசம்பர் மாத விலை பட்டியலில் 3.19 திர்ஹம்சாக குறைக்கப்பட்டுள்ளது.

இது போன்ற அமீரகத்தின் முக்கிய செய்திகள் மற்றும் அன்றாட தகவல்களை அறிந்து கொள்ள எங்களின் Khaleej Tamil வாட்ஸ்அப் சேனலில் இணைந்து கொள்ளுங்கள்.
Link: Khaleej Tamil Whatsapp Channel

Related Articles

Back to top button
error: Content is protected !!