விரைவில் வரவிருக்கும் புத்தாண்டு: துபாயில் இலவசமாக வானவேடிக்கை நிகழ்ச்சிகளைக் எங்கெங்கு பார்க்கலாம்..??

துபாயில் ஒவ்வொரு புத்தாண்டும் வானவேடிக்கை நிகழ்ச்சிகளால் வெகுவிமர்சையாக கொண்டாடப்பட்டு வருகிறது. தற்போது 2023ம் ஆண்டு விரைவில் முடிவுக்கு வரவுள்ள நிலையில், வரவிருக்கும் 2024இன் புத்தாண்டுக் கொண்டாட்டங்களை நீங்கள் துபாயில் இலவசமாக அனுபவிக்க விரும்பினால் உங்களுக்கு பல விருப்பங்கள் உள்ளன.
துபாயின் அதிகாரப்பூர்வ ஆன்லைன் சுற்றுலா தளமான Visit Dubai இன் படி, குடியிருப்பாளர்கள் மற்றும் பார்வையாளர்கள் புத்தாண்டு வானவேடிக்கை நிகழ்ச்சிகளை இலவசமாக அனுபவிக்கக்கூடிய நான்கு இடங்கள் பின்வருமாறு கொடுக்கப்பட்டுள்ளன:
1. புர்ஜ் கலீஃபா:
உலகப்புகழ் பெற்ற மிகவும் உயரமான புர்ஜ் கலீஃபா ஒவ்வொரு புத்தாண்டு கொண்டாட்டத்தின் போதும் வண்ணமயமான விளக்குகளால் ஒளிரும் மற்றும் பட்டாசுகளால் வானத்தை அலங்கரிக்கும்.
மேலும், இந்தாண்டு புத்தாண்டு கொண்டாட்டத்திற்கு புர்ஜ் பார்க்கில் இருந்து பிரத்யேகமாக வாணவேடிக்கைக் காட்சிகளைப் பார்க்க விரும்புபவர்களுக்கு Emaar Properties கட்டண டிக்கெட்டுகளை அறிவித்துள்ளது. மேலும் டவுன்டவுன் துபாய் பகுதியில் அமைந்துள்ள மற்ற இடங்களிலிருந்தும் நீங்கள் அவற்றை இலவசமாக கண்டுகளிக்க முடியும்.
நீங்கள் புர்ஜ் பார்க்கில் இருந்து பிரத்யேக வாணவேடிக்கைக் காட்சிகளை அருகில் பார்க்க விரும்பினால், அதற்கான டிக்கெட்டுகள் எதிர்வரும் நவம்பர் 10 முதல் விற்பனைக்கு வருகிறது, அவற்றை பதிவு செய்து பெற்றுக்கொள்ளலாம்.
இடம்: 1 ஷேக் முகமது பின் ரஷித் பவுல்வேர்டு டவுன்டவுன் துபாய்.
அருகில் உள்ள துபாய் மெட்ரோ நிலையம்:
துபாய் மால்/புர்ஜ் கலீஃபா நிலையம் ரெட் லைனில் உள்ளது. டவுன்டவுன் துபாய் பகுதிக்கு உள்ளே செல்ல நீங்கள் திட்டமிட்டால், சாலை மூடப்படுவதற்குள் மாலை 4 மணி முதல் 5 மணிக்குள் அங்கு சென்றடைய வேண்டும் என்று அறிவுறுத்தப்படுகிறது.
2. அல் சீஃப்:
அல் சீஃப் துபாய் கிரீக்கின் அருகில் அமைந்துள்ளது. எனவே, பார்வையாளர்கள் தேரா அல்லது பர் துபாயின் இருபுறத்தில் இருந்தும் வானவேடிக்கைகளை இலவசமாக பார்த்து ரசிக்கலாம்.
- இடம்: அல் சீஃப் ஸ்ட்ரீட், அமெரிக்க தூதரகத்திற்கு எதிரில், துபாய் க்ரீக் சைடு (Dubai Creek Side).
- அருகிலுள்ள துபாய் மெட்ரோ நிலையம்: ரெட் லைனில் உள்ள புர்ஜுமன் மெட்ரோ நிலையம்.
3. அட்லாண்டிஸ், தி பாம்:
துபாயில் நீங்கள் இலவசமாக பார்த்து அனுபவிக்கக் கூடிய மற்றொரு பிரபலமான புத்தாண்டு வானவேடிக்கை அட்லாண்டிஸ், தி பாம்-இல் உள்ளது. இங்கு ஒவ்வொரு புத்தாண்டுக் கொண்டாட்டத்தின் போதும் இசை நிகழ்ச்சி நடத்தப்படுகிறது. இந்த இசை கச்சேரியில் கலந்துகொள்ள விரும்புபவர்கள் பணம் செலுத்த வேண்டும். இருப்பினும், நீங்கள் பாம் ஜுமேரா போர்டுவாக்கில் இருந்து கொண்டாட்டங்களை இலவசமாக பார்க்கலாம்.
இடம்: கிரசன்ட் ரோடு, தி பாம் ஜுமேரா.
அருகிலுள்ள போக்குவரத்து நிலையம்: ஹோட்டலில் இருந்து சிறிது தூரத்தில் உள்ள அட்லாண்டிஸ் அக்வாவென்ச்சர் ஸ்டேஷனுக்கு நீங்கள் பாம் மோனோரயிலைப் பயன்படுத்தலாம்.
4. தி பீச், ஜுமேரா பீச் ரெசிடென்ஸ் (JBR):
இது துபாயின் புத்தாண்டு வானவேடிக்கை நிகழ்ச்சிகளுக்கு மற்றொரு பிரபலமான இடமாகும். நீங்கள் JBR கடற்கரையில் இருந்தவாறே இலவசமாக கொண்டாட்டங்களை அனுபவிக்கலாம்.
மேலும், இங்கு ஏராளமான உணவகங்கள், ஹோட்டல்கள் மற்றும் ஓய்வறைகள் உள்ளன. எனவே, நீங்கள் உணவகங்களில் ஒன்றில் மேஜையை முன்பதிவு செய்து சாப்பிட்டுக் கொண்டே காட்சிகளை ரசிக்கலாம்.
- இடம்: துபாய் மெரினாவில் JBR எதிரில்.
- மெட்ரோ நிலையம்: ரெட் லைனில் உள்ள DMCC (துபாய் மல்டி கமோடிட்ஸ் சென்டர்) மெட்ரோ நிலையம். நீங்கள் கடற்கரைக்கு நடந்து செல்லலாம் அல்லது துபாய் டிராமில் செல்லலாம் மற்றும் ஜுமேரா பீச் ரெசிடென்ஸ் 1 அல்லது 2 நிறுத்தங்களில் இறங்கலாம்.
இது போன்ற அமீரகத்தின் முக்கிய செய்திகள் மற்றும் அன்றாட தகவல்களை அறிந்து கொள்ள எங்களின் Khaleej Tamil வாட்ஸ்அப் சேனலில் இணைந்து கொள்ளுங்கள்.
Link: Khaleej Tamil Whatsapp Channel