அமீரக செய்திகள்

UAE: செக்-இன் செய்யும் நேரத்தை பத்து வினாடிகளாக குறைத்துள்ள அபுதாபியின் புதிய டெர்மினல் A..!!

அபுதாபி சர்வதேச விமான நிலையத்தின் புதிய டெர்மினல் A சமீபத்தில் திறப்பப்பட்ட நிலையில் இந்த டெர்மினலில் போர்டிங் நேரம் 3 வினாடிகளாகவும், செக்-இன் நேரம் 10 வினாடிகளாகவும் குறைக்கப்பட்டுள்ளதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. அபுதாபி சர்வதேச விமான நிலையத்தில் இருக்கக்கூடிய பழைய டெர்மினல்களில் இந்த செயல்முறைக்கு குறைந்தபட்சம் ஒரு நிமிடம் மற்றும் அதற்கும் அதிகமாக நேரம் எடுக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.

இதன் மூலம், அபுதாபி விமான நிலையத்திற்கு செல்லும் பயணிகள் சுமார் 12 நிமிடங்களில் செயல்முறைகளை முடித்து விமானத்திற்குச் செல்லலாம் என கூறப்பட்டுள்ளது. டெர்மினல் A- ஆனது, விமான நிலையம் முழுவதும் ஐந்து டச் பாயின்ட்களில் பயோமெட்ரிக் சேவைகளை வரிசைப்படுத்தியுள்ளது.

மேலும் விமான நிலைய இடமாற்றங்கள் மற்றும் சில்லறை விற்பனை நடவடிக்கைகள் உட்பட இவற்றை ஒன்பதாக விரிவுபடுத்துவதற்கான முயற்சிகள் நடந்து வருவதாகக் கூறப்படுகிறது.

பயோமெட்ரிக் சேவை:

டெர்மினல் Aயில் உள்ள பயோமெட்ரிக் சேவைகள் சுய சேவை செக்-இன், சுய சேவை லக்கேஜ் டிராப், இமிக்ரேஷன் ஸ்மார்ட் கேட்ஸ் மற்றும் போர்டிங் கேட் ஆகியவற்றுக்கு பயன்படுத்தப்படுவதாக அபுதாபி சர்வதேச விமான நிலையத்தின் தலைமை தகவல் அதிகாரி ஆண்ட்ரூ மர்பி அவர்கள் கூறியுள்ளார்.

முன்னதாக, பயோமெட்ரிக் தரவைச் சமர்ப்பிக்க பயணிகளுக்கு கூடுதல் டச்பாயிண்ட் தேவைப்பட்டதாகவும், இப்போது ஆட்டோ-பதிவு (auto-enrollment) மூலம், பயணிகளின் தரவு தானாகவே பதிவு செய்யப்படும் என்றும் அவர் கூறியுள்ளார்.

இந்த அதிநவீன சேவைகளை அமீரக நாட்டவர்கள், குடியிருப்பாளர்கள் மற்றும் சுற்றுலாப் பயணிகள் என அனைவரும் அணுகலாம் மற்றும் கடந்த 7 ஆண்டுகளில் அமீரகத்தின் எந்த விமான நிலையத்தின் வழியாகவும் பயணம் செய்திருந்தால், சேவைகள் உங்களுக்குப் பொருந்தும் என்று மர்பி தெளிவுபடுத்தியுள்ளார்.

நேரடி ஆவணங்களின் தேவையில்லாமல் இமிகிரேஷன் மற்றும் போர்டிங் செயல்முறைகள் மூலம் செல்லக்கூடிய வசதிகள் கடந்த ஆண்டு விமான நிலையத்தில் அறிமுகப்படுத்தப்பட்டன.

இருப்பினும், சுய சேவை செக்-இன் தற்போது Etihad Airways வாடிக்கையாளர்களுக்கு மட்டுமே கிடைக்கிறது. இந்த சேவையை விமான நிலையத்தில் செயல்படும் அனைத்து விமான நிறுவனங்களின் அனைத்து வாடிக்கையாளர்களுக்கும் விரிவுபடுத்துவதற்கான திட்டங்கள் உள்ளதாகக் கூறப்படுகிறது.

சில்லறை விற்பனையில் பயோமெட்ரிக்ஸ்:

அடுத்த கட்டத்தில், தானே செக்-இன் செய்யக்கூடிய பயோமெட்ரிக் சேவைகள் விமான நிலையத்தில் உள்ள ஒன்பது டச் பாயின்ட்களில் விரிவுபடுத்தப்படும் என்று கூறிய மர்பி, சில்லறை விற்பனை மற்றும் லாஞ்ச்களிலும் (lounge) பயோமெட்ரிக் சேவைகளை கொண்டுவரத் திட்டமிடுவதாகக் கூறியுள்ளார்.

சில்லறை விற்பனைக் கண்ணோட்டத்தில் பயணிகள் தானாக முன்வந்து லாயல்டி திட்டத்தில் சேரலாம், எடுத்துக்காட்டாக, ட்யூட்டி-ஃப்ரீ ஷாப்பிங்கில் அல்லது காரை வாடகைக்கு எடுப்பதில் சுமூகமான அனுபவங்களுக்கு பயோமெட்ரிக் சுயவிவரங்களைப் பயன்படுத்த முடியும். பிசினஸ் கிளாஸ் பயணிகளுக்கு தனிப்பயனாக்கப்பட்ட அனுபவத்தை வழங்கும் ஏர்லைன் லவுஞ்ச்களுக்கும் இது பொருந்தும்.

விமான நிலையத்தில் சில்லறை விற்பனை செயல்பாடுகளை விரிவுபடுத்துவது குறித்து பேசிய அபுதாபி விமான நிலையத்தின் தலைமை வர்த்தக அதிகாரி மவுரீன் பேனர்மேன்,  தற்போது 124 விற்பனை நிலையங்கள் உள்ளதாகவும், மேலும் 163 ஆக அதிகரிக்க எதிர்பார்ப்பதாகவும் குறிப்பிட்டுள்ளார். மேலும், ஐந்து  F&B  உடன் கூடுதல் பிராண்டுகளுக்கு இடமளிப்பதாகவும் தெரிவித்துள்ளார்.

இது போன்ற அமீரகத்தின் முக்கிய செய்திகள் மற்றும் அன்றாட தகவல்களை அறிந்து கொள்ள எங்களின் Khaleej Tamil வாட்ஸ்அப் சேனலில் இணைந்து கொள்ளுங்கள்.
Link: Khaleej Tamil Whatsapp Channel

Related Articles

Back to top button
error: Content is protected !!