அமீரக செய்திகள்

UAE: சாலையில் தவறான பாதையில் வாகனத்தை திருப்பியதால் ஏற்பட்ட மோசமான விபத்து..!! அதிர்ச்சியூட்டும் வீடியோவை வெளியிட்ட அபுதாபி காவல்துறை…!!

அபுதாபியில் பொறுப்பற்ற ஓட்டுநர் ஒருவர் மூன்று வினாடிகளுக்குள் பல போக்குவரத்து விதிமீறல்களைச் செய்து, எமிரேட்டில் உள்ள பரபரப்பான சந்திப்பில் பயங்கர விபத்தை ஏற்படுத்தியுள்ளார்.

இச்சம்பவம் தொடர்பான அதிர்ச்சியூட்டும் வீடியோவை அபுதாபி காவல்துறை பகிர்ந்துள்ளது. அதில் ஒரு கருப்பு நிற SUV கார், தவறான திருப்பத்தை உருவாக்கி பின்னர் ரெட் சிக்னலை பொருட்படுத்தாமல் தாண்டிச் செல்வதைக் காணலாம். பின்னர், அது கட்டுப்பாட்டை இழந்த மற்றொரு வாகனத்தின் மீது மோதும் காட்சிகளையும் பார்க்கலாம்.

SUV கார் முதலில், நேராக மட்டுமே செல்லக்கூடிய பாதையில் சென்று கொண்டிருந்தது, ஆனால் அது திடீரென இடதுபுறமாகத் திரும்பியது. இரண்டாவதாக, சிக்னல் சிவப்பு நிறத்தில் இருந்தபோது அது திருப்பத்தை ஏற்படுத்தியது, அதாவது சாலையின் மறுபுறத்தில் உள்ள வாகனங்கள் இன்டெர்செக்சனைக் கடக்கும் வேளையில் இந்த வாகனம் சென்று விபத்தை ஏற்படுத்தியுள்ளது.

இவ்வாறு, வீடியோ கிளிப்பில், பல விதிமீறல்கள் கண்டறியப்பட்டாலும், வாகன ஓட்டி கவனத்தை சிதறடித்து வாகனம் ஓட்டியதே விபத்துக்கு முக்கிய காரணம் என்று அபுதாபி காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

 

இதுபோல சாலையில் செல்லும் போது, தொலைபேசியைப் பயன்படுத்துதல், சமூக ஊடகங்களை உலாவுதல், அழைப்பை மேற்கொள்வது அல்லது புகைப்படம் எடுப்பது என கவனத்தைச் சிதறடித்து வாகனம் ஓட்டுபவர்களுக்கு 800 திர்ஹம் அபராதம் மற்றும் நான்கு பிளாக் பாயிண்டுகள் விதிக்கப்படும் என்று அதிகாரிகள் எச்சரித்துள்ளனர்.

மேலும், சிவப்பு விளக்கை தாண்டி வாகனம் ஓட்டிய வாகன ஓட்டிக்கு, 1,000 திர்ஹம் அபராதம், 12 பிளாக் பாயிண்டுகள் விதிக்கப்படுவதுடன் அவரது வாகனம் 30 நாட்களுக்கு பறிமுதல் செய்யப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. எனவே, ஓட்டுநர் அவரது SUV காரை விடுவிக்க 50,000 திர்ஹம் அபராதம் செலுத்த வேண்டும். உரிமையாளர் மூன்று மாதங்களுக்குள் அபராதத்தை செலுத்தத் தவறினால், வாகனம் ஏலம் விடப்படும்.

ஆகவே, அபுதாபி காவல்துறை அனைத்து ஓட்டுநர்களையும் எப்போதும் சாலையில் தங்கள் கண்களை வைத்திருக்குமாறும், பாதசாரிகள் மற்றும் சாலை அடையாளங்களில் கவனம் செலுத்துமாறும் கேட்டுக் கொண்டுள்ளது.

இது போன்ற அமீரகத்தின் முக்கிய செய்திகள் மற்றும் அன்றாட தகவல்களை அறிந்து கொள்ள எங்களின் Khaleej Tamil வாட்ஸ்அப் சேனலில் இணைந்து கொள்ளுங்கள்.
Link: Khaleej Tamil Whatsapp Channel

Related Articles

Back to top button
error: Content is protected !!