ADVERTISEMENT

UAE: ஷேக் சையத் கிராண்ட் மசூதிக்கு இரவு நேர சுற்றுப்பயணம் அறிமுகம்!! பார்வையாளர்கள் இனி 24 மணிநேரமும் அணுகலைப் பெறலாம் என தகவல்….

Published: 29 Dec 2023, 5:18 PM |
Updated: 29 Dec 2023, 5:18 PM |
Posted By: Menaka

அபுதாபியின் ஐகானிக் அடையாளமான ஷேக் சையத் மசூதி அதன் பார்வையாளர்களுக்கு 24 மணி நேரமும் சுற்றிப்பார்க்கும் வகையில் இரவு நேர சுற்றுப்பயணங்களை அறிமுகப்படுத்துவதாக அதன் சமூக ஊடக தளத்தில் அறிவித்துள்ளது. அதன்படி, பகல் நேரம் மட்டுமல்லாமல் இரவு 10 மணி முதல் காலை 9 மணி வரை பொதுமக்களுக்கு திறந்திருக்கும் என கூறப்பட்டுள்ளது.

ADVERTISEMENT

இந்த புதிய சேவையானது, மசூதியின் வேலை நேரம் தவிர்த்து மற்ற நேரங்களில் வருபவர்களுக்காக பிரத்யேகமாக அறிமுகப்படுத்தப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது. எனவே, இனி அமீரகத்திற்கு செல்லும் நபர்கள் மற்றும் இணைப்பு விமானங்களுக்காகக் காத்திருக்கும் நபர்கள் எந்த நேரத்திலும் மசூதியில் இஸ்லாமிய வரலாறு மற்றும் கட்டிடக்கலையை ஆராய முடியும்.

அபுதாபி பெரிய மசூதியின் 16வது ஆண்டு நிறைவுடன் ஒத்துப்போகும் வகையில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ள இந்த சுற்றுலா சேவை குறிப்பாக, பார்வையற்றோர் மற்றும் காதுகேளாதவர்களுக்கான விருப்பங்கள் உட்பட, 14 சர்வதேச மொழிகளில் கிடைக்கும் மல்டிமீடியா வழிகாட்டி சாதனமும் வழங்கப்படுவதாகக் கூறப்படுகிறது.

ADVERTISEMENT

இங்கு சுற்றிப்பார்க்க வரும் ஒரு நபருக்கு டிக்கெட்டின் விலை 20 திர்ஹம் ஆகும். மேலும், www.szgmc.gov.ae இல் ஒரு சுற்றுலாவை முன்பதிவு செய்யும் விருப்பமும் உள்ளது.

பகலில் சாதாரண வருகை நேரம்

  • சனி முதல் வியாழன் வரை – காலை 9 மணி முதல் இரவு 10 மணி வரை
  • வெள்ளிக்கிழமை – காலை 9 மணி முதல் 12 மணி வரை, மாலை 3 மணி முதல் இரவு 10 மணி வரை

இது போன்ற அமீரகத்தின் முக்கிய செய்திகள் மற்றும் அன்றாட தகவல்களை அறிந்து கொள்ள எங்களின் Khaleej Tamil வாட்ஸ்அப் சேனலில் இணைந்து கொள்ளுங்கள்.
Link: Khaleej Tamil Whatsapp Channel

ADVERTISEMENT