அமீரக செய்திகள்

பாலைவனத்தைப் பசுமையாக்க ட்ரோன்களைப் பயன்படுத்தும் அபுதாபி!! ஒப்பந்தத்தில் கையெழுத்திட்ட நிறுவனம்….

ஐக்கிய அரபு அமீரகத்தின் தலைநகரான அபுதாபியை பசுமையாக்க ஒவ்வொரு நாளும் 100க்கும் மேற்பட்ட கால்பந்து மைதானங்களின் பரப்பளவில் விதைக்கக்கூடிய ட்ரோன்கள் பயன்படுத்தப்படும் என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

அபுதாபியில் உள்ள அதிகாரிகள், நிலப்பரப்பு மற்றும் கடலோர சுற்றுச்சூழல் அமைப்புகளை மதிப்பிடுவதற்கும் மீட்டெடுப்பதற்கும் விதைப்பு ட்ரோன்களைப் பயன்படுத்த சர்வதேச சுற்றுச்சூழல் தொழில்நுட்ப நிறுவனமான டெண்ட்ராவுடன் (Dendra) ஒரு கூட்டு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டதைத் தொடர்ந்து இந்த அறிவிப்பு வெளியாகியுள்ளது.

டென்ட்ரா நிறுவனத்தின் CEO டாக்டர் சூசன் கிரஹாம், ட்ரோன் தொழில்நுட்பம் தனித்துவமான சவால்களுடன் சுற்றுச்சூழல் அமைப்புகளைப் பாதுகாக்கவும், மறுவாழ்வு செய்யவும் மற்றும் மீட்டெடுக்க உதவுகிறது என்று தெரிவித்துள்ளார்.

ஒவ்வொரு ட்ரோன்களும் ஒரே நேரத்தில் 53 விதைகளை சுமந்து செல்லும் திறன் கொண்டது மற்றும் அவற்றால் சரியான நடவு இடத்தைப் பதிவுசெய்து, மறுசீரமைப்பு வெற்றியைக் கண்காணிக்க முடியும் என்று கூறப்படுகிறது.

மேலும், சுற்றுச்சூழல் வாழ்விடங்கள் மற்றும் உள்ளூர் உயிரினங்களைப் பாதுகாக்க தரவு மற்றும் AI அடிப்படையிலான தீர்வுகள் பயன்படுத்தப்படும் என்றும் முதல் வறண்ட மறுசீரமைப்பு சோதனை ஏற்கனவே அல் தஃப்ராவில் நடந்து வருவதாகவும் கூறப்படுகிறது.

குறிப்பாக, பாரம்பரிய விதைப்பு முறைகளில் ஏற்படும் தடைகளை டெண்ட்ராவின் முறை முறியடித்துள்ளது. இது சாகுபடி மற்றும் நடவு விகிதத்தை துரிதப்படுத்துவதுடன் தொலைதூர பகுதிகளுக்கு அணுகலை வழங்குகிறது.

அதுமட்டுமில்லாமல், இந்த ட்ரோன்கள் ஆண்டுதோறும் அதிக அளவு மழை பொழியும் பகுதிகளைத் தேர்ந்தெடுப்பதன் மூலம் நீர்ப்பாசனத்தைப் பயன்படுத்தாமல் வறண்ட சுற்றுச்சூழல் அமைப்பிற்கு பூர்வீக இனங்களை மீண்டும் அறிமுகப்படுத்த உதவும் என்று தெரிவித்துள்ளனர்.

இது குறித்து ADQ இன் இன்வெஸ்ட்மென்ட் மற்றும் ஹோல்டிங் நிறுவனத்தின் தலைமை இயக்க அதிகாரி அனஸ் ஜவ்தத் அல்பர்குதி கூறுகையில், அபுதாபி தனது பாலைவனங்கள் மற்றும் சதுப்புநிலங்களில் பூர்வீக தாவர வகைகளை மீண்டும் நடவு செய்ய R&D இயங்கும் விநியோகச் சங்கிலியை உருவாக்குவதாகக் குறிப்பிட்டார்.

அதேசமயம், அபுதாபியின் இயற்கையான தாவர வாழ்விடங்களையும் மனித தாக்கங்களுடனான அவற்றின் தொடர்புகளையும் அதிகாரிகள் வரைபடமாக்குவார்கள் என்று EAD இன் டெரஸ்ட்ரியல் மற்றும் கடல் பல்லுயிர் துறையின் நிர்வாக இயக்குனர் அஹ்மத் அல் ஹஷ்மி கூறியுள்ளார்.

சுற்றுச்சூழல் ஏஜென்சி- அபுதாபி (EAD) எதிர்கால பெரிய அளவிலான மறுவாழ்வுத் திட்டங்களின் சாத்தியக்கூறுகளைத் தீர்மானிக்க சோதனையின் பகுப்பாய்வு கட்டத்தை மேற்பார்வையிடும் என்றும் அவர் கூறியுள்ளார். அதிகாரத்தின் சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் சுமார் 10,000 ஹெக்டேர் பரப்பளவில் விரிவான கள ஆய்வை மேற்கொண்டதாகவும் கூறப்பட்டுள்ளது.

ஏற்கனவே இந்த ஆண்டின் தொடக்கத்தில், ADQ மற்றும் EAD ஆகியவை செயற்கையான 3D-அச்சிடப்பட்ட டெரகோட்டா அடிப்படையிலான ரீஃப் டைல்களை அபுதாபியில் பயன்படுத்துவதாக அறிவித்திருந்தன. ஹாங்காங்கைத் தலைமையிடமாகக் கொண்ட காலநிலை தொழில்நுட்ப நிறுவனமான Archireef உடன் இணைந்து, இந்த நடவடிக்கை அரேபிய வளைகுடாவில் பவளப் புனரமைப்புக்கு உதவுகிறது எனவும் கூறப்பட்டுள்ளது.

இது போன்ற அமீரகத்தின் முக்கிய செய்திகள் மற்றும் அன்றாட தகவல்களை அறிந்து கொள்ள எங்களின் Khaleej Tamil வாட்ஸ்அப் சேனலில் இணைந்து கொள்ளுங்கள்.
Link: Khaleej Tamil Whatsapp Channel

Related Articles

Back to top button
error: Content is protected !!