அமீரக செய்திகள்

துபாயில் 12 மணி நேர மெகா விற்பனை!! எலக்ட்ரானிக்ஸ் முதல் ஃபேஷன், அழகு, வீட்டுப் பொருட்கள் வரை 90 சதவீதம் வரை தள்ளுபடி….

எதிர்வரும் டிசம்பர் 26 ஆம் தேதி (செவ்வாய்) துபாயில் 12 மணி நேர மெகா விற்பனை நடைபெற உள்ளது. ஷாப்பிங் செய்ய விரும்புபவர்களுக்கு இது மிகச்சிறந்த வாய்ப்பாகும். இந்த விற்பனை நிகழ்வில் 90 சதவீதம் வரை தள்ளுபடியுடன் பொருட்களை ஷாப்பிங் செய்யலாம் என்று கூறப்பட்டுள்ளது.

தற்போது துபாயில் நடைபெற்று வரும் துபாய் ஷாப்பிங் ஃபெஸ்டிவலின் (DSF) ஒரு அங்கமான இந்த விற்பனை வருகின்ற செவ்வாய்க்கிழமை காலை 10 மணி முதல் இரவு 10 மணி வரை நடைபெறும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. DSF ஜனவரி 14, 2024 வரை நடைபெறும் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த விற்பனை பல்வேறு எலக்ட்ரானிக்ஸ் முதல் ஃபேஷன், அழகு, வீட்டுப் பொருட்கள் வரை பலவற்றில் அற்புதமான தள்ளுபடிகளை உறுதியளிக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

பங்கேற்கும் மால்கள்:

  • மால் ஆஃப் தி எமிரேட்ஸ்
  • சிட்டி சென்டர் மிர்திஃப்
  • சிட்டி சென்டர் தேரா
  • சிட்டி சென்டர் Me’aisem
  • சிட்டி சென்டர் அல் ஷிந்தகா
  • மை சிட்டி சென்டர் அல் பர்ஷா

சமீபத்திய கேட்ஜெட்களை விரும்பும் தொழில்நுட்ப ஆர்வலர்கள், நவநாகரீகப் பொருட்களைத் தேடும் ஃபேஷன் கலைஞர், ஆடம்பரமான பொருட்களைத் தேடும் அழகு ஆர்வலர்கள் மற்றும் ஸ்டைலான வீட்டுப் பொருட்களைத் தேடுபவர்கள் என அனைவருக்கும் இந்த 12 மணி நேர விற்பனை சிறந்த பொருட்களை தரும் என்று கூறப்படுகிறது.

1 மில்லியன் திர்ஹம் வெல்லும் வாய்ப்பு

எல்லாவற்றிற்கும் மேலாக, ஷாப்பிங் ஆர்வலர்கள் இந்த 12 மணி நேர விற்பனையில் மில்லியனர் ஆகும் வாய்ப்பையும் பெறலாம். அதாவது, 300 திர்ஹம் அல்லது அதற்கு மேல் செலவழிப்பவர்கள், 12-hour Sale Share Millionaire ஆகும் அதிர்ஷ்ட டிராவில் நுழையலாம்.

அதற்கு நீங்கள் மஜித் அல் ஃபுத்தைம் ஷேர் ரிவார்டு உறுப்பினராக இருத்தல் மற்றும் ஆப்ஸில் குறைந்தபட்சம் 300 திர்ஹம் வரையிலான ரசீதுகளை ஸ்கேன் செய்திருக்க வேண்டும் என்பதாகும்.

அத்துடன் நீங்கள் 12-மணிநேர விற்பனையில் பங்கேற்பதன் மூலம், ‘Win the Biggest Prize of the Year’ என்ற டிராவில் நுழைவதற்கும் தகுதி பெறுவீர்கள், அங்கு நீங்கள் 1 மில்லியன் திர்ஹம்ஸ் ரொக்கம் வெல்லும் வாய்ப்பையும் பெறலாம் என்று கூறப்படுகின்றது.

இது போன்ற அமீரகத்தின் முக்கிய செய்திகள் மற்றும் அன்றாட தகவல்களை அறிந்து கொள்ள எங்களின் Khaleej Tamil வாட்ஸ்அப் சேனலில் இணைந்து கொள்ளுங்கள்.
Link: Khaleej Tamil Whatsapp Channel

Related Articles

Back to top button
error: Content is protected !!