அமீரக செய்திகள்

துபாயில் புத்தாண்டு தினத்தன்று சில பேருந்து சேவைகள் நிறுத்தம்..!! RTA வெளியிட்டுள்ள அறிவிப்பு…!!

துபாயில் புத்தாண்டு தினத்தன்று சில பேருந்து சேவைகள் தற்காலிகமாக நிறுத்தப்படும் என்றும், மேலும் பொதுமக்களுக்கு இலவசமாக 230 பேருந்துகள் வழங்கப்படும் என்றும் சாலைகள் மற்றும் போக்குவரத்து ஆணையம் (RTA) தெரிவித்துள்ளது.

RTA வெளியிட்ட அறிவிப்பின்படி, டிசம்பர் 31, ஞாயிற்றுக்கிழமை மாலை 3.30 மணி முதல் மறுநாள் ஜனவரி 1 ஆம் தேதி காலை 6 மணி வரை மொத்தம் 25 வழித்தடங்கள் நிறுத்தப்படும் என்பது தெரிய வந்துள்ளது.

அதேசமயம், புத்தாண்டு வானவேடிக்கைகளைப் பார்க்க வரும் குடியிருப்பாளர்களுக்கு ஏராளமான பொது போக்குவரத்து விருப்பங்கள் இருப்பதை RTA உறுதி செய்துள்ளது. கூடுதலாக, துபாய் மெட்ரோ மற்றும் டிராம் இரண்டும் 40 மணி நேரம் இடைவிடாமல் இயங்கும் என்றும் ஆணையம் கூறியுள்ளது.

Find Your Dream Job Today in UAE/GCC with KHALEEJ TAMIL Jobs Portal

நேரங்கள்:

  • துபாய் மெட்ரோ: டிசம்பர் 31 ஆம் தேதி காலை 8 மணி முதல் ஜனவரி 1 ஆம் தேதி இறுதி வரை
  • டிராம்: காலை 9 மணி முதல் (டிசம்பர் 31) ஜனவரி 2 ஆம் தேதி நள்ளிரவு 1 மணி வரை

இது போன்ற அமீரகத்தின் முக்கிய செய்திகள் மற்றும் அன்றாட தகவல்களை அறிந்து கொள்ள எங்களின் Khaleej Tamil வாட்ஸ்அப் சேனலில் இணைந்து கொள்ளுங்கள்.
Link: Khaleej Tamil Whatsapp Channel

Related Articles

Back to top button
error: Content is protected !!