துபாய்: அரசு ஊழியர்களுக்கு 152 மில்லியன் திர்ஹம்ஸ் போனஸ்… ஒப்புதல் அளித்த துபாய் இளவரசர்..!!

துபாயின் பட்டத்து இளவரசர் ஷேக் ஹம்தான் பின் முகமது பின் ரஷீத் அல் மக்தூம் அவர்கள், துபாயின் அரசு ஊழியர்களுக்கு 152 மில்லியன் திர்ஹம்ஸ் போனஸ் வழங்க ஒப்புதல் அளித்துள்ளதாக செய்திகள் வெளியிடப்பட்டுள்ளது.
நேற்று (டிசம்பர் 24), ஐக்கிய அரபு அமீரகத்தின் துணைத் தலைவரும் பிரதமரும், துபாய் ஆட்சியாளருமான ஷேக் முகமது பின் ரஷித் அல் மக்தூம் அவர்களின் வழிகாட்டுதலின் கீழ், ஊழியர்களின் செயல்திறன் அடிப்படையில் வழங்கப்படும் போனஸ் அங்கீகரிக்கப்பட்டுள்ளது.
மேலும், இந்த போனஸ் அதிகாரசபையால் நிர்ணயிக்கப்பட்ட சில தரநிலைகளை பூர்த்தி செய்த ஊழியர்களுக்கு வழங்கப்படும் என்று கூறப்பட்டுள்ளது. குறிப்பாக இந்த போனஸ், துபாய் அரசாங்க ஊழியர்களுக்கு சிறந்த வாழ்க்கையை வழங்குவதற்கும், சிறந்து விளங்குவதற்கும் வழங்கப்படுவதாகக் கூறப்படுகிறது.
இது போன்ற அமீரகத்தின் முக்கிய செய்திகள் மற்றும் அன்றாட தகவல்களை அறிந்து கொள்ள எங்களின் Khaleej Tamil வாட்ஸ்அப் சேனலில் இணைந்து கொள்ளுங்கள்.
Link: Khaleej Tamil Whatsapp Channel