ADVERTISEMENT

அமீரகத்தில் முதல் முறையாக 150 மில்லியன் திர்ஹம்ஸ் பரிசுத்தொகையை அறிவித்த எமிரேட்ஸ் டிரா..!!

Published: 15 Dec 2023, 9:25 AM |
Updated: 15 Dec 2023, 9:30 AM |
Posted By: Menaka

துபாயில் ராஃபிள் டிராக்களை நடத்தி வரும் Emirates Draw MEGA7 ஆனது ஆண்டு இறுதிக்கான கிராண்ட் பரிசுத் தொகையை 150 மில்லியன் திர்ஹம்சாக உயர்த்தியுள்ளது. இதற்கு முன்னர் வெற்றி பெறும் நபர்களுக்கு 100 மில்லியன் திர்ஹம்ஸ் பரிசு தொகையை எமிரேட்ஸ் டிரா நிர்ணயித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

ADVERTISEMENT

இதன் மூலம் எமிரேட்ஸ் டிராவில் கலந்து கொண்டு ஏழு எண்களையும் வெற்றிகரமாகப் பொருத்தும் வெற்றியாளர், மத்திய கிழக்கு, ஆப்பிரிக்கா மற்றும் ஆசியாவின் மிகப்பெரிய கிராண்ட் பரிசின் பட்டத்தை வெல்வதுடன் 150 மில்லியன் திர்ஹம்ஸ் ரொக்கப்பரிசை வெல்லலாம் என கூறப்பட்டுள்ளது.

இதில் பங்கேற்பாளர்கள் எதிர்வரும் டிசம்பர் 17, 2023 அன்று, அமீரக நேரப்படி இரவு 9 மணிக்கு ஒளிபரப்ப திட்டமிடப்பட்டுள்ள அடுத்த டிராவிற்கு தங்கள் எண்களை முன்பதிவு செய்வதன் மூலம் 150 மில்லியன் திர்ஹம்ஸ் MEGA7 கிராண்ட் பரிசை வெல்லும் வாய்ப்பைப் பெறலாம்.

ADVERTISEMENT

மேலும், நடைபெறவிருக்கும் கேமை YouTube, Facebook, Instagram போன்ற எமிரேட்ஸ் டிராவின் டிஜிட்டல் தளங்களில் நேரலையாகக் காணலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. கூடுதல் விவரங்களுக்கு 800 7777 7777 ஐ அழைக்கலாம், அதிகாரப்பூர்வ இணையதளமான https://www.emiratesdraw.com/ ஐப் பார்வையிடலாம் அல்லது எமிரேட்ஸ் டிராவின் சமூக ஊடக தளங்களான @emiratesdraw இல் சமீபத்திய அறிவிப்புகளைப் பெறலாம்.

எமிரேட்ஸ் டிரா:

எமிரேட்ஸ் டிரா என்பது ஐக்கிய அரபு எமிரேட்ஸின் முன்னணி கேமிங் ஆபரேட்டராகும். அத்துடன் எமிரேட்ஸ் டிரா அதன் பவளப்பாறை மறுசீரமைப்பு திட்டத்தின் மூலம் சமூக நலனுக்காக உறுதிபூண்டுள்ளது. இது MEGA7, EASY6 மற்றும் FAST5 ஆகிய மூன்று கேம்கள் மூலம், வாரந்தோறும் மில்லியன் கணக்கான திர்ஹம்சை பரிசுத்தொகையாக வெற்றி பெறும் நபர்களுக்கு வழங்கி வருகின்றது.

ADVERTISEMENT

குறிப்பாக, எமிரேட்ஸ் டிரா MEGA7 என்பது மத்திய கிழக்கு, ஆப்பிரிக்கா மற்றும் ஆசியாவில் நடைபெறும் மிகப்பெரிய வாராந்திர குலுக்கல் ஆகும். ஒவ்வொரு ஞாயிற்றுக்கிழமையும் அமீரக நேரப்படி இரவு 9 மணிக்கு இது நடைபெறும். இது ஏழு எண்களையும் பொருத்தி வெற்றி பெறும் நபருக்கு 150 மில்லியன் திர்ஹம் மற்றும் 15 உத்தரவாத வெற்றியாளர்களுக்கு தலா 10,000 பரிசு வழங்கும் என்பது குறிப்பிடத்தக்கது.

இது போன்ற அமீரகத்தின் முக்கிய செய்திகள் மற்றும் அன்றாட தகவல்களை அறிந்து கொள்ள எங்களின் Khaleej Tamil வாட்ஸ்அப் சேனலில் இணைந்து கொள்ளுங்கள்.
Link: Khaleej Tamil Whatsapp Channel