அமீரக செய்திகள்

UAE: வேலையின்மை காப்பீடு திட்டத்தில் பதிவு செய்யாத ஊழியர்களிடம் அபராதம் வசூலிக்கத் தொடங்கிய அமைச்சகம்..!!

ஐக்கிய அரபு அமீரகத்தில் மனிதவளம் மற்றும் எமிராட்டிசேஷன் அமைச்சகம் (MoHRE) வெளியிட்ட அறிவிப்பின்படி, நாட்டில் உள்ள தனியார் துறை மற்றும் மத்திய அரசாங்கத்தில் பணிபுரியும் அனைத்து ஊழியர்களும் வேலையிழப்பு காப்பீட்டுத் திட்டத்தில் (ILOE) குழுசேர்வது கட்டாயமாகும்.

அவ்வாறு திட்டத்தில் சேர தவறிய தொழிலாளர்கள் 400 திர்ஹம்ஸ் அபராதமும், சரியான நேரத்தில் பிரீமியத்தைச் செலுத்தத் தவறுபவர்கள் 200 திர்ஹம்ஸ் அபராதமும் செலுத்த வேண்டும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது. மேலும், ஜனவரி 2023 இல் தொடங்கப்பட்ட இத்திட்டத்திற்கான காலக்கெடு கடந்த அக்டோபர் மாதத்துடன் முடிவடைந்து விட்டது.

இந்நிலையில், நாட்டில் உள்ள தகுதியான ஊழியர்களில் சுமார் 14 சதவீதம் பேர் காப்பீட்டுத் திட்டத்தில் பதிவு செய்யாமல் இருப்பதாகவும், இப்போது அமைச்சகம் அவர்களிடம் இருந்து அபராதம் வசூலிக்கத் தொடங்கும் என்றும் கூறப்பட்டுள்ளது.

அபராதத்தை செலுத்தத் தவறினால், புதிய பணி அனுமதிகள் மறுக்கப்படுவது மற்றும் சம்பளப் பிடித்தம் போன்ற சிக்கல்களை ஊழியர்கள் எதிர்கொள்ள வேண்டியிருக்கும் என்பதால், அவற்றைத் தவிர்க்க உரிய அபராதம் செலுத்துமாறு அமைச்சகம் வலியுறுத்தியுள்ளது.

MOHRE இன் படி, ‘ILOE Quick Pay’ போன்ற டிஜிட்டல் தளங்கள் மூலமாகவோ அல்லது அமைச்சகத்தால் அங்கீகரிக்கப்பட்ட வணிக சேவை மையங்களில் ஒன்றிற்கு நேரடியாகச் சென்றோ அபராதங்களைச் சரிபார்த்துச் செலுத்தலாம்.

இதுவரை 6.7 மில்லியன் தொழிலாளர்கள் வேலையின்மை காப்பீட்டு திட்டத்தில் பதிவு செய்துள்ளனர். அவ்வாறு காப்பீடு செய்யப்பட்ட ஊழியர்கள் வேலை இழப்பைத் தொடர்ந்து மூன்று மாதங்கள் வரை நிதி இழப்பீடு பெறுவார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

இது போன்ற அமீரகத்தின் முக்கிய செய்திகள் மற்றும் அன்றாட தகவல்களை அறிந்து கொள்ள எங்களின் Khaleej Tamil வாட்ஸ்அப் சேனலில் இணைந்து கொள்ளுங்கள்.
Link: Khaleej Tamil Whatsapp Channel

Related Articles

Back to top button
error: Content is protected !!