அமீரகத்தில் குறிப்பிட்ட பகுதிகளில் 7ºC வரை குறையும் வெப்பநிலை..!! காலையில் மூடுபனி நிலவும் என NCM தகவல்..!
ஐக்கிய அரபு அமீரகத்தின் பெரும்பாலான பகுதிகளில் இன்றைய தினம் அடர்த்தியான மூடுபனி உருவாகியிருப்பதால் தேசிய வானிலை ஆய்வு மையம் (NCM) சிவப்பு மற்றும் மஞ்சள் எச்சரிக்கைகளை வெளியிட்டுள்ளது.
காலை 10.30 மணி வரை நீடிக்கும் பனிமூட்டத்தின் விளைவாக சாலைகளில் கிடைமட்டத் தெரிவுநிலை குறையும் என்பதால், எச்சரிக்கையாக செயல்படுமாறு வாகன ஓட்டிகளுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
மேலும், மோசமான தெரிவுநிலை காரணமாக அபுதாபி காவல்துறை சில முக்கிய சாலைகளில் மணிக்கு 80 கிமீக்கு வேகத்தைக் குறைக்கும் முறையை செயல்படுத்தியுள்ளது. அவற்றில் சலாமா பின்த் புத்தி சாலை (துரைஃப் – மசிரா), ஷேக். கலீஃபா பின் சயீத் இன்டர்நேஷனல் சாலை (அல் முகீரா பாலம் – அல் தாமிரியா) (அல் நோஃப் – அல் ருவைஸ்), அபுதாபி – அல் அய்ன் சாலை (அல் ஃபயாஹ் – அல் கஸ்னா, (ICAD பாலம் – அல் நோஃப்), ஷேக். மக்தூம் பின் ரஷித் (அல் தவீலா – சீஹ் சேதிரா) , (அல் குவா – உம்மு அல்-ஜமூல்) சாலை, (ஹமீம் – லிவா) சாலை, ஷக். ஹஸ்ஸா பின் சுல்தான் முதல் சாலை (கயாதி – மதீனத் சயீத்) ஆகிய சாலைகள் அடங்கும்.
ஆகவே, வாகன ஓட்டிகள் எலெக்ட்ரானிக் தகவல் பலகைகளில் மாற்றியமைக்கப்பட்டுள்ள வேக வரம்புகளை கவனித்து ஓட்டுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.
NCM வெளியிட்டுள்ள முன்னறிவிப்பின் படி, இன்றைய தினம் பகல் நேரங்களில் ஓரளவு மேகமூட்டமான வானிலை நிலவுகிறது. இருப்பினும், இன்றிரவு மற்றும் ஞாயிற்றுக்கிழமை காலை நேரங்களில் வானிலை ஈரப்பதமாக இருக்கும் என்று கூறப்பட்டுள்ளது. அதேசமயம், சில கடலோர மற்றும் உள் பகுதிகளில் மூடுபனி உருவாகக்கூடும்.
குடியிருப்பாளர்கள் அவ்வப்போது லேசானது முதல் மிதமான காற்றையும், சில சமயங்களில் மேற்கு நோக்கி புத்துணர்ச்சியுடன் வீசும் காற்றையும் உணருவார்கள்.
இதனிடையே, அரேபிய வளைகுடா மற்றும் ஓமன் கடலில் நிலை சற்று மிதமாக இருக்கும் என்றும், நாட்டின் மலைப்பகுதிகளில் 7ºC வரை வெப்பநிலை குறையும் வேளையில், உள் பகுதிகளில் அதிகபட்ச வெப்பநிலை 30ºC ஆக இருக்கும் என்றும் NCM கூறியுள்ளது.
இது போன்ற அமீரகத்தின் முக்கிய செய்திகள் மற்றும் அன்றாட தகவல்களை அறிந்து கொள்ள எங்களின் Khaleej Tamil வாட்ஸ்அப் சேனலில் இணைந்து கொள்ளுங்கள்.
Link: Khaleej Tamil Whatsapp Channel