ADVERTISEMENT

ஊழியர்களுக்கு புத்தாண்டு விடுமுறையை அறிவித்துள்ள அமீரகம்..!! குறிப்பிட்ட ஊழியர்களுக்கு மூன்று நாட்கள் விடுமுறை..!!

Published: 22 Dec 2023, 4:14 PM |
Updated: 22 Dec 2023, 4:17 PM |
Posted By: Menaka

ஐக்கிய அரபு அமீரகத்தில் ஜனவரி 1, 2024 திங்கட்கிழமையன்று புத்தாண்டு தினத்தைக் கொண்டாட அனைத்து ஊழியர்களுக்கும் ஊதியத்துடன் கூடிய பொது விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. எனவே, நாட்டில் உள்ள தனியார் துறை ஊழியர்கள் புத்தாண்டு விடுமுறையுடன் நீண்ட வார இறுதி நாட்களை அனுபவிக்கலாம்.

ADVERTISEMENT

இது தொடர்பாக மனிதவள அமைச்சகம் வெளியிட்ட X பதிவில், “திங்கள்கிழமை, ஜனவரி 1, 2024, புத்தாண்டு தினமானது ஐக்கிய அரபு அமீரகத்தில் உள்ள அனைத்து தனியார் துறை ஊழியர்களுக்கும் ஊதியத்துடன் கூடிய விடுமுறையாக இருக்கும் என்று மனித வளங்கள் மற்றும் குடியேற்ற அமைச்சகம் அறிவிக்கிறது” என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

அதேபோல், அரசாங்க மனித வளங்களுக்கான மத்திய ஆணையம், ஜனவரி 1, திங்கட்கிழமை மத்திய அரசு ஊழியர்களுக்கு விடுமுறை நாளாக அறிவித்துள்ளது. இதனடிப்படையில் சனி, ஞாயிறு என இரண்டு நாட்கள் வார விடுமுறை உள்ளவர்களுக்கு மூன்று நாட்கள் தொடர் விடுமுறையும் ஞாயிறு மட்டும் விடுமுறை உள்ளவர்களுக்கு இரண்டு நாட்கள் தொடர் விடுமுறையும் கிடைக்கும்.

ADVERTISEMENT

கடந்த மாதம் நாட்டின் அமைச்சரவையால் அறிவிக்கப்பட்ட பட்டியலின்படி, ஐக்கிய அரபு அமீரகக் குடியிருப்பாளர்கள் 2024 இல் குறைந்தது 13 பொது விடுமுறை நாட்களை எதிர்பார்க்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

இது போன்ற அமீரகத்தின் முக்கிய செய்திகள் மற்றும் அன்றாட தகவல்களை அறிந்து கொள்ள எங்களின் Khaleej Tamil வாட்ஸ்அப் சேனலில் இணைந்து கொள்ளுங்கள்.
Link: Khaleej Tamil Whatsapp Channel

ADVERTISEMENT