அமீரக செய்திகள்

அமீரகம்: குறிப்பிட்ட பகுதிகளில் 7ºC வரை வெப்பநிலை குறையும் என NCM அறிக்கை…..

ஐக்கிய அரபு அமீரகத்தில் அதிகாரப்பூர்வமாக குளிர்காலம் தொடங்கியிருக்கும் நிலையில், இன்றைய வானிலை சீராகவும், சில சமயங்களில் கிழக்கு நோக்கி ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும் என்றும் தேசிய வானிலை ஆய்வு மையம் (NCM) தெரிவித்துள்ளது.

மேலும், இன்றிரவு மற்றும் நாளை காலை குடியிருப்பாளர்கள் ஈரப்பதமான வானிலையை அனுபவிப்பார்கள் மற்றும் சில உள் பகுதிகளில் பனிமூட்டம் அல்லது மூடுபனி உருவாகலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

NCM வெளியிட்டுள்ள முன்னறிவிப்பில், நாட்டின் மலைப்பகுதிகளில் 7ºC வரை குறைந்த வெப்பநிலை பதிவாகும் என்றும், உள் பகுதிகளில் அதிகபட்ச வெப்பநிலை 30ºc வரை பதிவாகும் என்றும் கூறப்பட்டுள்ளது.

இதனிடையே, அரேபிய வளைகுடா பகுதியில் கடல் சிறிது மிதமாகவும், ஓமன் கடலில் சற்று மிதமாகவும் இருக்கும் என்று மையம் தெரிவித்துள்ளது. அத்துடன் குடியிருப்பாளர்கள் அவ்வப்போது லேசானது முதல் மிதமான காற்று வீசுவதை உணரலாம்.

இது போன்ற அமீரகத்தின் முக்கிய செய்திகள் மற்றும் அன்றாட தகவல்களை அறிந்து கொள்ள எங்களின் Khaleej Tamil வாட்ஸ்அப் சேனலில் இணைந்து கொள்ளுங்கள்.
Link: Khaleej Tamil Whatsapp Channel

Related Articles

Back to top button
error: Content is protected !!