அமீரக செய்திகள்

அமீரகத்தில் நிலவும் பனிமூட்டம்..!! வெப்பநிலை 16 ° C வரை பதிவாக வாய்ப்பு எனவும் தகவல்..!!

ஐக்கிய அரபு அமீரகத்தின் சில பகுதிகளில் வெள்ளிக்கிழமை அதிகாலை மூடுபனி உருவாகியுள்ளது. இந்த மூடுபனியானது காலை 9.30 மணிக்குள் மறைந்துவிடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

தேசிய வானிலை ஆய்வு மையம் (NCM) வெளியிட்ட அறிவிப்பில் மூடுபனியால் சூழப்பட்ட பகுதிகளில் கிடைமட்டத் தெரிவுநிலை (visibility) மோசமடைந்து வருவதால் வாகன ஓட்டிகள் பாதுகாப்புடன் செல்லுமாறு எச்சரிக்கை விடுத்துள்ளது.

இந்த பனிமூட்டமானது அபுதாபியின் சில பகுதிகளில் காணப்பட்டது. இதனை தொடர்ந்து அபுதாபி காவல்துறை வாகன ஓட்டிகளை எச்சரிக்கையுடன் செயல்படுமாறும், மின்னணு தகவல் பலகைகளில் காட்டப்படும் வேக வரம்புகளை பின்பற்றி வாகனம் ஓட்டுமாறும் கேட்டுக் கொண்டுள்ளது.

அத்துடன் அமீரகத்தில் இன்று வெப்பநிலை சற்று குறையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது, துபாய் மற்றும் அபுதாபியில் முறையே 23 ° C மற்றும் 22 ° C ஆக குறையும் என்றும் மிகக் குறைந்த வெப்பநிலையாக 16°C வெப்பநிலை அமீரகத்தில் பதிவாக வாய்ப்புள்ளது என்றும் கூறப்பட்டுள்ளது.

அதே நேரத்தில் அபுதாபி மற்றும் துபாய் ஆகிய இரண்டு பகுதிகளிலும் அதிகபட்சமாக 39 டிகிரி செல்சியஸ் வரை வெப்பநிலை நீடிக்கும் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது. அத்துடன் ஈரப்பதம் அளவானது 10 சதவீதம் முதல் 70 சதவீதம் வரை என மாறுபாட்டுடன் இருக்கும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

Related Articles

Back to top button
error: Content is protected !!