அமீரக செய்திகள்

துபாய்: பொது மற்றும் தனியார் பார்க்கிங்கை நிர்வகிக்க புதிய நிறுவனம்.. அறிவிப்பை வெளியிட்ட துபாய் ஆட்சியாளார்..!!

துபாயில் பொது மற்றும் தனியார் வாகன நிறுத்துமிடங்களை நிர்வகிக்கவும் மேற்பார்வையிடவும் புதிய நிறுவனம் அமைக்கப்பட்டுள்ளது. ‘Parkin’ எனப்படும் பொது கூட்டு பங்கு நிறுவனத்தின் (public joint stock company-PJSC) ஒப்பந்த கால அளவு 99 ஆண்டுகளாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. மேலும் இது இதே காலத்திற்கு புதுப்பிக்கப்படும் என்றும் கூறப்படுகிறது.

ஐக்கிய அரபு அமீரகத்தின் துணைத் தலைவரும் பிரதமரும், துபாய் ஆட்சியாளருமான ஷேக் முகமது பின் ரஷித் அல் மக்தூம் அவர்களால் இந்த பார்கின் (parkin) நிறுவனத்தை நிறுவுவதற்கான சட்டம் இயற்றப்பட்டதாகவும் செய்திகள் வெளியிடப்பட்டுள்ளது.

நிறுவனத்தின் பொறுப்புகள்:

பார்கின் PJSC நிறுவனம் பொது பார்க்கிங் இடங்களை உருவாக்குதல், திட்டமிடுதல், வடிவமைத்தல், இயக்குதல் மற்றும் நிர்வகித்தல் ஆகியவற்றில் பணிபுரியும். அந்தவகையில், எமிரேட்டில் தனிநபர்களுக்கு அனுமதிகளை வழங்குவதற்கும், பொது பார்க்கிங்கில் குழுசேருவதற்கும், அதைப் பயன்படுத்துதல் இயக்குதல், மற்றும் பார்க்கிங் இடங்களை ஒதுக்குதல் ஆகியவற்றிற்கு இந்நிறுவனமே பொறுப்பாகும் என்று கூறப்படுகிறது.

அதேசமயம், சாலைகள் மற்றும் போக்குவரத்து ஆணையம் (RTA) பொது மற்றும் தனியார் பார்க்கிங் தொடர்பான குறிப்பிட்ட அல்லது அனைத்து பொறுப்புகளையும், தொடர்புடைய அனுமதிகளை வழங்குவதையும் சட்டம் கட்டாயப்படுத்துகிறது. எனவே, RTA மற்றும் பார்கின் PJSC இடையே இறுதி செய்யப்படும் உரிமை ஒப்பந்தத்தின் மூலம் இந்தப் பொறுப்புகள் எளிதாக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

நிறுவனத்தின் பங்குகள் மற்றும் உரிமை:

வெளியான அறிவிப்புகளின் படி, நிறுவனத்தின் அனைத்து பங்குகளும் துபாய் அரசாங்கத்திற்கு சொந்தமானது என்பதும், பொது அல்லது தனியார் சந்தா மூலம் மூன்றாம் தரப்பினருக்கு மாற்றப்படும் பங்குகளின் சதவீதத்தை தீர்மானிக்க துபாயின் நிர்வாக கவுன்சிலுக்கு (Executive Council of Dubai) அதிகாரம் உள்ளது என்பதும் தெரிய வந்துள்ளது.

பணியாளர்கள் இடமாற்றம்:

இந்த சட்டம் சில ஊழியர்களை அவர்களின் உரிமைகளை சமரசம் செய்யாமல் RTA இலிருந்து பார்கினுக்கு மாற்ற அனுமதிக்கிறது. இதற்கிடையில், துபாயின் பட்டத்து இளவரசரும், துபாய் நிர்வாக கவுன்சிலின் தலைவருமான ஷேக் ஹம்தான் பின் முகமது பின் ரஷித் அல் மக்தூம் பார்கின் இயக்குநர்கள் குழுவை உருவாக்கி, அதற்கான அதிகாரம் மற்றும் பொறுப்புகளை வரையறுக்கும் தீர்மானத்தை வெளியிட்டுள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

இது போன்ற அமீரகத்தின் முக்கிய செய்திகள் மற்றும் அன்றாட தகவல்களை அறிந்து கொள்ள எங்களின் Khaleej Tamil வாட்ஸ்அப் சேனலில் இணைந்து கொள்ளுங்கள்.
Link: Khaleej Tamil Whatsapp Channel

Related Articles

Back to top button
error: Content is protected !!