அமீரக செய்திகள்

துபாயின் மிகவும் பிரபலமான ஷேக் சையத் சாலையின் பெயர் மாற்றம்.. மேலும் 28 பகுதிகளுக்கு புதிய பெயர்..!! முழுப் பட்டியலும் இங்கே..

துபாயின் ஷேக் சையத் சாலையைச் சுற்றியுள்ள 28 பகுதிகளுக்கு துபாய் நிலத் துறையால் (Dubai Land Department) புதிய பெயர்கள் வழங்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. அவற்றில் முக்கிய சாலையான ஷேக் சையத் சாலையானது இனி புர்ஜ் கலிஃபா சாலையாக பெயர் மாற்றம் செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கதாகும்.

துபாயின் ஷேக் சையத் சாலையில் அடுக்குமாடி குடியிருப்புகள், அலுவலகங்கள், ஹோட்டல் குடியிருப்புகள் மற்றும் அறைகள் கொண்ட பல கட்டிடங்கள் உள்ளது.

மேலும், துபாய் எமிரேட்டில் உள்ள பிரபலமான அடையாளங்கள் மற்றும் டவுன்டவுன், பிசினஸ் பே, JLT மற்றும் துபாய் மெரினா போன்ற முக்கிய பகுதிகளுக்கு அருகாமையில் இருப்பதால், சுற்றுப்புற பகுதிகள் முதலீட்டாளர்கள், வாடகைதாரர்கள் மற்றும் சுற்றுலாப் பயணிகளிடையே பிரபலமாக உள்ளது.

தற்போது வெளிவந்துள்ள அறிவிப்பின் படி, ஷேக் சையத் சாலை மட்டுமல்லாமல் மோட்டார் சிட்டி அல் ஹெபியா ஃபர்ஸ்ட் எனவும், ராஞ்சஸ் என்பது வாதி அல் அசாஃபா 6 எனவும், ஸ்போர்ட்ஸ் சிட்டியானது அல் ஹெபியா ஃபோர்த் என்றும் மற்றும் அல் கூஸ் 2 என்பது கதீர் அல் தைர் என்றும் மறுபெயரிடப்பட்டுள்ளது.

அவ்வாறு துபாய் எமிரேட் முழுவதும் மறுபெயரிடப்பட்ட 28 பகுதிகளின் முழுப் பட்டியலும் அவற்றின் பகுதி குறியீடுகளும் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

பகுதி குறியீடு பழைய பெயர் புதிய பெயர்
284 அல் கவனீஜ் மூன்று அல் ட்டே
384 அல் மேத்மர் அல் தன்யா செகண்ட்
321 அல் மினா மதீனத் துபாய் அல் மேலஹீயா
383 அல் சஃபூமூன்று அல் தன்யா ஃபர்ஸ்ட்
312 அல் சுக் அல் கபீர் அல் சூக் அல் கபீர்
531 துபாய் இண்டஸ்ட்ரியல் சிட்டி ஃபர்ஸ்ட் ஸைஹ் ஷோயப் 2
532  துபாய் இண்டஸ்ட்ரியல் சிட்டி செகண்ட் ஸைஹ் ஷோயப் 3
533 துபாய் இண்டஸ்ட்ரியல் சிட்டி தேர்ட் ஸைஹ் ஷோயப் 4
393 எமிரேட்ஸ் ஹில்ஸ்  ஃபர்ஸ்ட் அல் தன்யா ஐந்து
388 எமிரேட்ஸ் ஹில்ஸ் செகண்ட் அல் தன்யா தேர்ட்
394 எமிரேட்ஸ் ஹில்ஸ் தேர்ட் அல் தன்யா  ஃபோர்த்
412 ஃபெஸ்டிவல் சிட்டி செகண்ட் அல் கீரன்
683 கோல்ஃப் சிட்டி அல் ஹெபிபா  ஃபிஃப்த்
599 ஜபல் அலி இண்டஸ்ட்ரியல் ஜபல் அலி இண்டஸ்ட்ரியல்  ஃபர்ஸ்ட்
591 ஜெபெல் அளி வில்லேஜ் ஜபல் அலி  ஃபர்ஸ்ட்
681 ஜுமைரா வில்லேஜ் ஃபர்ஸ்ட் அல் பர்ஷா சவுத்  ஃபோர்த்
684 ஜுமைரா வில்லேஜ் செகண்ட் அல் பர்ஷா சவுத்  ஃபிஃப்த்
674 மோட்டார் சிட்டி அல் ஹெபியா  ஃபர்ஸ்ட்
664 ராஞ்சஸ் வாடி அல் அசாஃபா 6
345 ஷேக் சையத் சாலை புர்ஜ் கலிஃபா
682 ஸ்போர்ட் சிட்டி அல் ஹெபியா  ஃபோர்த்
675 ஸ்போர்ட் சிட்டி ஃபர்ஸ்ட் அல் ஹெபியா செகண்ட்
911 உம் நஹத் 1 மதீனத் ஹிந்த் 1
912 உம் நஹத் 2 மதீனத் ஹிந்த் 2
913 உம் நஹத் 3 மதீனத் ஹிந்த் 3
914 உம் நஹத் 4, அல் யுப்ரா 2, அல் யுப்ரா 3 மதீனத் ஹிந்த் 4
340 அல் கோஸ் செகண்ட் கதீர் அல் தைர்
513 எசலல் மதீனத் லதீஃபா

சமீபத்தில் எமிரேட்டில் சாலைகளுக்கு பெயர் சூட்டுவதற்கான புதிய வழிமுறையை துபாய் அறிவித்திருந்தது. இந்த முயற்சியின் முதல் கட்டமாக அல் கவானீஜ் 2 பகுதியில் உள்ள சாலைகளுக்கு உள்ளூர் மரங்கள் மற்றும் பூக்களால் ஈர்க்கப்பட்ட பெயர்கள் சூட்டப்பட்டன.

உள்நாட்டில் காணப்படும் மிகவும் பிரபலமான மர வகைகளில் ஒன்றின் பெயரால் அல் காஃப் தெரு பெயரிடப்பட்டது. அதேபோல், இப்பகுதியில் உள்ள மற்ற தெருக்களுக்கு அல் சித்ர், பசில், அல் ஃபாக்கி, அல் சமர் மற்றும் அல் ஷரிஷ் போன்ற பெயர்கள் சூட்டப்பட்டுள்ளன.

இது போன்ற அமீரகத்தின் முக்கிய செய்திகள் மற்றும் அன்றாட தகவல்களை அறிந்து கொள்ள எங்களின் Khaleej Tamil வாட்ஸ்அப் சேனலில் இணைந்து கொள்ளுங்கள்.
Link: Khaleej Tamil Whatsapp Channel

Related Articles

Back to top button
error: Content is protected !!